ஞாயிறு, 6 அக்டோபர், 2019

ஆங்கில அறிவைப்பெற ஆங்கிலப் படங்களைப் பார்!
ஜேம்ஸ் பாண்ட் படங்களைப் பார்த்தாயா?
---------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------
சினிமா பற்றி எழுதுங்கள் என்று நண்பர்களிடம் இருந்து
கோரிக்கைகள் வந்து கொண்டே இருக்கின்றன.
சினிமா பற்றி எழுத வேண்டுமென்றால் சினிமா
பார்க்க வேண்டும். அதாவது மூன்று மணி நேரத்தை
ஊதாரித்தனமாகச் செலவழிக்க வேண்டும். அது
நம்மால் இயலாது.

அடுத்து, தமிழ் சினிமா மீது எனக்கு என்றுமே உயர்ந்த
அபிப்பிராயம் இருந்ததில்லை. திராவிட இயக்கக்
கூத்தாடிகளால், தமிழ்நாட்டை கூத்தாடிகள் மட்டுமே
ஆழ முடியும் என்ற இழிநிலை ஏற்பட்டு விட்டது.

இந்த பூமியில் வேறு எங்குமே இந்த இழிநிலை இல்லை.
புழுவினும் இழிந்த கூத்தாடி மேனன், கூத்தாடிச்சி ஜானகி
ஆகியோர் முதல்வர்களாக இருந்த நாடு இது.

சினிமாத் துறையைச் சேர்ந்த அண்ணாத்துரை,
கருணாநிதி, மேனன், வி என் ஜானகி, ஜெயலலிதா
என்று சினிமாக் கசடுகளே முதல்வர்கலாகத்  தொடர்ந்த
அவலம் இங்கு மட்டும்தான் உண்டு.
இன்றைக்கும் புழுவினும் இழிந்த கூத்தாடி உதயநிதியை
இந்த வரிசையில் சேர்ப்பதற்கு  திராவிடக் கசடுகள்
தீவிரமாக வேலை செய்து கொண்டிருக்கின்றன.

பற்றாக்குறைக்கு புழுவினும் இழிந்த விஜயகாந்த்,
புழுவினும் இழிந்த கிழட்டுக் கூத்தாடி ரஜனிகாந்த்,
புழுவினும் இழிந்த கூத்தாடி ஜோசப் விஜய் என்று
பல கூத்தாடிகள் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றப்
பேயாய் அலைந்து கொண்டிருக்கிறதுகள். இந்தக்
கூத்தாடிகளை ஒழித்துக் கட்டுவதையே ஒருவர்
தனது லட்சியமாகக் கொள்ள வேண்டும்.

தமிழ் சினிமாவில் சிறப்புக்குரிய விஷயமே இல்லை
என்று நான் சொல்ல வரவில்லை. மகத்தான
கலைஞரான சிவாஜி கணேசனை நாம் பெற்றுள்ளோம்.

பாலச்சந்தர், பாரதிராஜா போன்ற இயக்குனர்களும்
கமலஹாசன் போன்ற மகத்தான திரைக் கலைஞரும்
போற்றுதலுக்கு உரியவர்கள் என்பதை மறுக்க இயலாது.

கலைஞானி கமலஹாசன் நடித்த விஸ்வரூபம் படமே
நான் பார்த்த கடைசிப்படம் (தமிழ்). அதையும் நான்
தியேட்டரில் பார்க்கவில்லை.

ஆங்கிலப் படங்களை மட்டுமே தொடர்ந்து பார்த்து
வருகிறேன்.கடைசியாகத் தியேட்டருக்குச் சென்று
பார்த்தது கிறிஸ்டோபர் நோலனின் இன்டர் ஸ்டெல்லார்
படம். அமைந்தகரை ஸ்கைவாக்கில் பார்த்தேன்.

நான் பார்க்கும் ஆங்கிலப் படங்கள் வீட்டில் உள்ள
டிவியிலும் இணையத்திலும் பார்க்கிற படங்களே.
பார்த்த படங்கள் குறித்து அவ்வப்போது எழுதி
இருக்கிறேன்.

அறிவியல் ஒளி என்ற ஏட்டில் "திரைப்படங்களில்
அறிவியல்" என்ற பொருளில் ஒரு சற்றே நீண்ட கட்டுரை
எழுதி இருந்தேன். வாசகர்கள் அதைப் படிக்கலாம்.

நேற்று இரவு வீட்டு டிவியில் ஓர் ஆங்கிலப் படம்
பார்த்தேன். அது ஒரு ஜேம்ஸ்பாண்ட் படம்.
Casino Royal என்ற படம் அது. சூதாட்ட விடுதியில்
ஜேம்ஸ்பாண்ட் என்று புரிந்து கொள்ளலாம்.

ஜேம்ஸ் பாண்ட் என்றவுடனே என் போன்ற
மூத்தவர்களுக்கு "சீன் கானரி" (Sean Connery)
என்பவரே நினைவுக்கு வருவார். (சீன் கானரிக்கு
பலருக்கும் ஸ்பெல்லிங் தெரியாது என்பதால்
ஸ்பெல்லிங்கை எழுதி உள்ளேன்).

சீன் கானரியைத் தொடர்ந்து பல ஜேம்ஸ் பாண்டுகள்
வந்து விட்டார்கள். நான் நேற்றுப் பார்த்த படத்தில்
ஜேம்ஸ் பாண்டாக நடித்தவர் டேனியல் கிரெக்
(Daniel Craig). இவர்தான் தற்போதைய ஜேம்ஸ்பாண்ட்.
இவர் ஒய்வு பெற்றால்தான் அடுத்து ஒருவர்
ஜேம்ஸ்பாண்டாக வர முடியும்.

வீட்டு டிவியில் படம் பார்ப்பதில் பெரும் சௌகரியம்
இதுதான். சாப்பிட்டுக் கொண்டே படம் பார்க்கலாம்.
வேறு வேலை செய்து கொண்டே படம் பார்க்கலாம்.
பைசா செலவு இல்லாமல் படம் பார்க்கலாம்.

"ஜேம்ஸ்பாண்ட் படங்கள்: சிறு குறிப்புத் தருக" என்றும்
"சீன் கானரி: சிறு குறிப்புத் தருக" என்றும் UPSC தேர்வில்
இதற்கு முன்பு கேள்விகள் கேட்கப்பட்டன. இந்தக்
கட்டுரையைப் படித்தால் அக்கேள்விக்கு நீங்கள்
விடை எழுதலாம் அல்லவா. உரிய கட்டுரைகளைப்
படித்து ஜேம்ஸ்பாண்ட் பற்றி மேலும் அறிந்து வைத்துக்
கொள்ளுங்கள். அடுத்த UPSC, SSC CGL தேர்வுகளில்
இதே கேள்வியை மீண்டும் கேட்கக் கூடும்.
அதற்கான நிகழ்தகவு = 0.15.

போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களே,
ஆங்கிலப் படங்களை நிறையப் பாருங்கள்.
ஆங்கில அறிவை சுலபமாகப் பெறும் வழியில்
இது ஒன்று. ஆங்கில அறிவு இல்லாமல் UPSC,SSC
தேர்வுகளில் தேறுவது கடினம்!
********************************************

திரு பூண்டி நாராயணன் அவர்களுக்கு,

இது மார்க்சியம் பற்றிய பதிவு அல்ல. இது 
பொருள்முதல்வாதம் பற்றிய பதிவு.
மார்க்சியம் தோன்றியது 19ஆம் நூற்ராண்டில்.
பொருள்முதல்வாதம் அதற்கு முன்பே தோன்றி 
விட்டது குறைந்தது 2500 ஆண்டு கால வரலாறு 
பொருள்முதல்வாதத்திற்கு உண்டு.

அடுத்து கேரளத்திலும் மேற்கு வங்கத்திலும் 
நடப்பது மற்றும் நடந்தது கம்யூனிஸ்ட் ஆடசி அல்ல.
அது முதலாளித்துவ ஆடசியே. 

பொருள்முதல்வாதம் குறித்து ஏதெனும் 
கூறுவதற்கு இருந்தால் கூறலாம்.

இது நல்ல படம். இதுதான் அவர் நடித்த 
முதல் படம் என்று நினைக்கிறேன்.



 மருதுபாண்டியன் 





       
  








   
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக