வியாழன், 31 அக்டோபர், 2019

அறிவியலுக்கு எதிராகத் திரளும் கருத்துக்களும்
அவற்றுக்கான அறிவியல் விளக்கமும்!
(குழந்தை சுஜித் மீட்பு குறித்து)
-----------------------------------------------------------------
  நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------
குறிப்பு:
மீட்புப்பணி குறித்த இரண்டாவது அறிவியல் கட்டுரை இது.
எமது முதல் கட்டுரையைப் படிக்காதவர்கள் படித்திடுக!
------------------------------------------------------------------------------------
மீட்புப்பணியில் மொத்தம் 600 பேர் கொண்ட குழு
ஈடுபட்டது. விஞ்ஞானிகள், பொறியாளர்கள், ஜியாலஜி
நிபுணர்கள், டெக்னீஷியன்கள், பிளம்பர்கள், தீயணைப்புப் படை
வீரர்கள், தனியார் நிபுணர்கள், மருத்துவர்கள்  என்று
பலதரப்பட்ட வல்லுனர்களின் கூட்டு முயற்சியே
இந்த மீட்புப்பணி. ஒரு குழந்தையை மீட்க 600 பேர்
தீபாவளிக்கு கொண்டாட்டத்தைத் துறந்து கருமமே
கண்ணாயினாராக 80 மணி நேரம் போராடினர்.

ஆழ்துளையிடுவதிலும் (drilling), சுரங்கம் தோண்டுவதிலும்
கட்டுமானப் பணிகளிலும் நல்ல அனுபவம் பெற்றிருந்த
ONGC, NLC, Larsen and Toubro, KNR constructions ஆகிய நான்கு
நிறுவனங்களின் நிபுணர்கள் மீட்புப் பணியில் தொடர்பு
கொண்டிருந்தனர்.

30 உறுப்பினர் கொண்ட தேசியப் பேரிடர் மீட்புப்படையும்
(NDRF), 40 உறுப்பினர் கொண்ட மாநிலப் பேரிடர் மீட்புப்
படையும் (SDRF) மீட்புப் பணியை ஒழுங்கமைத்தன.    

மீட்புப் பணிக்கு ரூ  ஐந்து லட்சமும் 5000 லிட்டர் டீசலும்
மட்டுமே.செலவானது. இதை திருச்சி மாவட்ட ஆட்சியர்
எஸ் சிவராசு தெளிவுபடுத்தி உள்ளார். எனினும்
ரூ 11 கோடி செலவானதாக முகநூலில் வதந்தி பரவியது.


இந்த மீட்புப்பணி குறித்து நாம் அனைவரும் ஒரு
உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். அது
ஒரு ஒளிவீசும் பேருண்மை. மீட்புப்பணியை
மேற்கொண்டவர்கள் அரசியல் கட்சியினர் அல்லர்.

மீட்புப் பணியில் 600 பேர் கொண்ட ஒரு தொழில்நுட்பக்
குழுதான் 80 மணி நேரமாக மெய்யான அக்கறையுடன்
ஈடுபட்டது. மாநிலத்திலும் மத்தியிலும்
எந்த ஆட்சி இருந்தாலும் ஒரு தொழில்நுட்பக் குழுதான்
மீட்புப்பணியைச் செய்ய முடியும்.

எனவே அரசியல் கட்சிகளின் மீதான விருப்பு வெறுப்பின்
அடிப்படையில், அறிவியல் தொழில்நுட்பக் குழுவின் மீது
பொய்ப்பழி கூறுவதும் அக்குழுவின் தன்னலங் கருதாப்
பணியை இழிவு செய்வதும் நேர்மையற்ற செயலாகும்.
மேலும் அது மானுடத்துக்கே எதிரானதாகும்.

ஆழத்தில் விழுந்த குழந்தையை மீட்கும் தொழில்நுட்பமும்
அதற்கான கருவிகளும் இல்லை:
மீட்புக் குழுவை வழிநடத்த ஒரு தலைமை (Nodal Officer)
இல்லை; SOP (Standard Operating Procedure) இல்லை;
இப்படி அறிவியல் அறிவு ஒரு சிறிதுமற்ற ஊடகத்தினர்
தொழில்நுட்பக் குழுவினர் மீது கூறிய
 அவதூறுகளில் உண்மை உண்டா? பார்ப்போம்!
விரிவாகப் பார்க்கலாம்.

ஊடகத்தினரின் அறிவியலுக்கு எதிரான கேள்விகளும்
அறிவியலின் பதில்களும்!
-----------------------------------------------------
1) கேள்வி: மீட்புப் பணிக்கான SOP எனப்படும்
Standard Operating Procedure  இல்லை! இது நியாயமா?

பதில்: 2004 சுனாமிக்குப் பிறகு இந்தியாவில் பேரிடர்
மேலாண்மையின் தேவை உணரப்பட்டு, மன்மோகன்சிங்
பிரதமராக இருந்தபோது, 2005ல் தேசியப் பேரிடர்
மேலாண்மை நிறுவனம் அமைக்கப் பட்டது. இது ஒரு
மூவடுக்கு அமைப்பு (A three tier setup). (மாவட்ட, மாநில,
அகில இந்திய அளவிலான மூவடுக்கு). இதற்கான
SOP 2011ல் உருவாக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.

2) எடுத்த எடுப்பிலேயே தேசியப் பேரிடர் மேலாண்மை
அமைப்பை ஏன் கூப்பிடவில்லை? தாமதமாகக்
கூப்பிட்டதால், GOLDEN HOUR எனப்படும் முதல்
10 மணி நேரம் வீணாகி விட்டது. இது சரியா?

பேரிடர் மேலாண்மைச் சட்டப்படி, ஆழ்துளைக் கிணற்றில்
ஒரு குழந்தை விழுவது என்பது ஒரு தனித்த நிகழ்வு
ஆகும் (an isolated incident).இது போன்ற ஒற்றை நிகழ்வுகள்
தொடக்கநிலைப் பேரிடர் என்பதால், இதற்கு மாவட்ட
அளவிலான பேரிடர் மேலாண்மை அமைப்பையே
அழைக்க வேண்டும். இதுதான் சட்டம். இந்தச் சட்டப்படி
மாநிலப் பேரிடர் மேலாண்மை அமைப்பு நிகழ்விடத்துக்கு
வந்து மீட்புப் பணியைத் தொடங்கியது.

3) மீட்புப்பணிகளின் ஒருங்கிணைக்கும் அதிகாரி
(Nodal officer) இல்லை. இது சரியா?

ஏன் இல்லை? யார் பொறுப்பு அதிகாரியோ (in charge)
அவர்தான் Nodal Officer. இதெல்லாம் goes without saying.
Nodal Officer பதவி என்பது constitutional post அல்ல.
எனவே Nodal Officerஆக நியமிக்கப் படுகிறவர் வள்ளுவர்
கோட்டத்தில் பதவி ஏற்க வேண்டிய தேவை இல்லை.
Nodal Officer யார் என்று தெரிய வேண்டிய அவசியம்
யாருக்கு உள்ளது? அவரிடம் ரிப்போர்ட் பண்ண வேண்டிய
அவசியம் உள்ள ஊழியர்களுக்கு மட்டுமே.அது தேவை.

4) குழியில் இறங்கித் தன்னால் காப்பாற்ற முடியும் என்று
கூறிய ஒரு உள்ளூர்க்காரரை அனுமதிக்கவில்லை என்று
அவரின் 15 வயது மகன் கூறினான். இது சரியா?

ஆழ்துளைக் கிணற்றின் விட்டம் நாலரை அங்குலம்
மட்டுமே.(length of the drilling bit). எனவே சுற்றளவு என்ன?
3.14ஆல் பெருக்குங்கள். ஒன்றேகால் அடியை விடக்
குறைவு. இந்தச் சுற்றளவுள்ள ஒரு குழியில் ஒரு
ஒல்லியான உடல்வாகுள்ள சிறுவனைக்கூட இறக்க
முடியாது.

5) இதற்கான தொழில்நுட்பம் இந்தியாவிலேயே
இல்லையே?

.இருக்கிறது. ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த
குழந்தையை மீட்கும் தொழில்நுட்பம் அணுஉலைத்
தொழில்நுட்பமோ செயற்கைக்கோள் தொழில்நுட்பமோ
அல்ல. அது மிகவும் எளிய மெக்கானிக்கல் தீர்வைக்
கொண்டது. நியூட்டனின் இயற்பியலிலேயே இதற்கான
தீர்வு கிடைத்து விடுகிறது.

6) மீட்பதற்கான கருவிகள் கண்டுபிடிக்கப் படவே
இல்லையே?

என்னென்ன கருவிகள் வேண்டுமோ அவை அனைத்தும்
இருக்கின்றன. இதற்கு என்ன கருவிகள் வேண்டும்?
GM counter எனப்படும் Geiger Muller கவுன்டர் வேண்டுமா?
அல்லது Cathode Ray Oscillograph வேண்டுமா? அல்லது
சந்திரயான்-2வில் அனுப்பிய ஸ்பெக்ட்ரா மீட்டர்
வேண்டுமா? என்ன கருவி இல்லை? என்ன கருவியைக்
கண்டுபிடிக்க வேண்டும்?

7) கயிறுகள் மட்டும்தானே இருந்தன? இது கருவி ஆகுமா?

கயிறுகள்தான். ஆனால் அவை கணினியோடு பிணைக்கப்
பட்டவை. கணினியின் கட்டளைக்கு ஏற்பச் செயல்படும்
கருவிகள் அவை.

மீட்புப் பணிக்கான கருவிகள் அனைத்துமே ரெடிமேட்
சட்டைகள் போன்றவை. தேவையான ஒரு கருவியை
மீட்புப்பணி நடக்கும் இடத்திலேயே (in situ) உருவாக்கிக்
கொள்ள முடியும். இதற்கான தொழில்நுட்பம் நம்மிடம்
உள்ளது. எனவே கருவி இல்லை என்பதெல்லாம்
தொழில்நுட்ப அறிவே இல்லாதவர்கள் கூறும் அவதூறு.

8) குழந்தையின் இறப்புக்கு யார் காரணம்?

குழந்தையின் மீது செயல்பட்ட stress tensor, குழியின்
மிகக் குறுகலான நாலரை அங்குல விட்டம், மிகவும்
tenderஆன இரண்டு வயதுக் குழந்தையால் மீட்புப்
பணிக்கு ஒத்துழைக்க இயலாத நிலை ஆகிய
மூன்றுமே காரணம். ஒரு பலூனை உள்ளே செலுத்தி,
அதை ஊதி, விரித்து, அதனுள் குழந்தையை
அடக்கி, மேலே கொண்டு வர இயலவில்லை. இதற்குக்
காரணம் குழியின் குறுகலான விட்டமே.
****************************************************


பல ஊடக நண்பர்களை அவர்களின் அனுமதி இன்றி
இப்பதிவில் tag செய்துள்ளேன். மன்னிக்கவும்.
படித்து முடித்தபின் remove tag செய்து கொள்ளலாம்.

கட்டுரையுடன் இணைக்கப்பட்ட ஐந்து
படங்களையும் பார்க்கவும். SOP புத்தகத்தின்
அட்டைப்படத்தைப் பாருங்கள். SOP இல்லை
என்று சொன்ன கயவர்களை என்ன செய்யலாம்?
 


   

  

 




KNR constructions, ONGC, NLC, Larsen and Toubro, 30 member NDRF, 400 member SDRF
Using a thermal device, a team from Anna University in Chennai was able to detect the body temperature of Sujith at around 4 p.m. on Saturday.
15 attempts were made by various teams மதுரை நாமக்கல் கோவை
SOP பிரகாரம் BOREWELL INCIDENTS ஆர் லெவல்-1 AND DEMAND
a district level response

SOP NODAL OFFICER  RIGOURMORTIS IN AC ROOM

Even if the child is rescued the chances of life is remote bec of lung infection


குழந்தையின் தாய், தந்தை, மாமன் அடிக்கடி குழாய்க்குள்
தங்கள் குறளை செலுத்தினர்.


குழந்தை சுஜித் மீட்புப் பணி!
அறிவியலுக்கு எதிரான பிற்போக்குக் கருத்துக்களின்
முதுகெலும்பை முறிக்கும் பதில்!
இந்த வீடியோவைப் பாருங்கள்!  சூரிய


பொறியியல் மாணவர் சுந்தர மூர்த்திக்கு
அவரின் நிறைவான சொற்பொழிவைப் பாராட்டி
நூலைப் பரிசளித்தபோது எடுத்த படம்!
நாள்: ஞாயிறு 03.11.19 மாலை .30 மணி to 9 மணி.
கூட்ட ஏற்பாடு: வே சோதிராமலிங்கம், ஊடகவியலாளர்.


பின்குறிப்பு: STRESS TENSOR என்று கரும்பலகையில்
எழுதி இருப்பதைப் பார்த்தீர்களா?
Stress Tensor குறித்து இக்கூட்டத்தில்
நியூட்டன் அறிவியல் மன்றம் விளக்கியது.

-------------------------------------------------

நான் கேள்விப்படவில்லை. நான் ஏழாம் வகுப்புடன்
படிப்பை நிறுத்தி விட்ட கபோதி. நான் படித்த
காலத்தில் ஏழாம் வகுப்பின் பாடத்திட்டத்தில்
இலக்கணப்போலி இல்லை.



இலக்கணப் போலி என்றால் என்ன?
-------------------------------------------------------
நன்னூல் ஆசிரியர் கூறும் இலக்கணப் போலி
பற்றிப் பார்ப்போம்.

பேச்சு வழக்கில் போலி தோன்றி விட்டது. எனவே
அதற்கு இலக்கணம் சமைக்கப் படுகிறது.மூவகைப்
போலியைச் சுட்டுகிறது இலக்கணம்.
1)  முதற்போலி (எ.கா: மயல் என்ற சொல் மையல் என்று
வழங்கப் படுதல். அதாவது அகரத்துக்குப் பதிலாக
ஐகாரம் போலியாக வருதல்) .

இடைப்போலி (எ.கா: அரயன் என்ற சொல் அரையன் என்று
வழங்கப் படுதல்.இங்கும் அகரத்துக்குப் பதிலாக
ஐகாரம் போலியாக வருகிறது.

கடைப்போலி (எ.கா: அகம் என்ற சொல்லுக்குப் பதிலாக
அகன் என்ற சொல் வருதல்.
"அகனமர்ந்து செய்யாள் உறையும்"  என்ற குறளைக்
கருதுக.

ஐ என்ற எழுத்தை அய் என்று எழுதுவது மூடத்தனம்.
அது இலக்கணப் போலியன்று.
ஒள என்ற எழுத்தை அவ் என்று எழுதுவது
இலக்கணப் போலியில் வராது.
   


இதற்கெல்லாம் விளக்கம் அளித்தாயிற்று.
அருள்கூர்ந்து அதைப் படித்துப் புரிந்து கொள்ள முயலவும்.




  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக