திங்கள், 14 அக்டோபர், 2019

பாயாசத்தையும் மீன் குழம்பையும் சேர்த்துக் கலக்குவதா?
எழுவர் விடுதலை ஏன் சாத்தியம் ஆகாது?
------------------------------------------------------------------------------ 
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------
எழுவர் விடுதலை என்பதில் அந்த ஏழு பேரும் விடுதலை
ஆகாமல் இருக்கும் நிலைமை என்பது ஒரு பொன்முட்டை
இடும் வாத்து போன்றது. பொன்முட்டை இடும் வாத்தை
யாராவது அறுத்துப் பார்ப்பார்களா?

அந்த ஏழு பேரும் விடுதலை ஆகாமல் இருக்கும் வரைதான்
ஈழப் பிழைப்புவாதிகளுக்கு ஆதாயம். விடுதலை
ஆகிவிட்டால் இவர்களுக்கு அது நஷ்டம்! இதுதான் உண்மை!
எப்படி என்பதைப் பார்ப்போம்.

ராஜிவ் கொலைக் குற்றவாளிகள் ஏழு பேரும் சிறையில்
ஆயுள் தண்டனை அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இவர்களின்  விடுதலையில் முக்கியமான அம்சம்
எது என்றால், இந்த ஏழு பேரும் இந்தியர்கள் அல்லர்
என்பதுதான்.

நளினியும் பேரறிவாளனும் இந்தியர்கள் என்பது
எல்லோருக்கும் தெரியும். அதே போல நளினியின்
கணவர் முருகன் ஸ்ரீலங்கா குடிமகன் என்பதும்
அனைவரும் அறிந்ததே.

இந்த ஏழு பேரில் இந்தியர்களான நளினி, பேரறிவாளன்
உள்ளிட்டோருக்கு, அதாவது இந்தியர்களுக்கு மட்டும்
விடுதலை என்று கோரி இருந்தால் இதற்குள்
இந்தியர்கள் அனைவரும் விடுதலை ஆகி இருக்க
முடியும்.

ஆனால் இலங்கைப் பிரஜைகளை இந்தியர்களோடு
சேர்த்து அனைவருக்கும் விடுதலை என்று கேட்டதால்
யாருக்குமே இன்னும் விடுதலை கிடைக்கவில்லை.

தண்டனை அனுபவிக்கும் இலங்கைப் பிரஜைகளின்
சார்பில் இலங்கை அரசு அவர்களின் விடுதலையைக்
கோரி ஒரு கருணை மனுவை அனுப்பி இருக்க வேண்டும்.
ஆனால் இந்த நிமிடம் வரை, இலங்கை அரசின் சார்பாக
தங்கள் நாட்டுப் பிரஜைகளை விடுவிக்க வேண்டும் என்று
ஒரு கருணை மனு கூட அனுப்பப் படவில்லை.

கருணை மனுவே இல்லாதபோது அவர்களை எப்படி
இந்திய அரசு விடுவிக்கும்? 

இந்த சட்டச் சிக்கலை கருத்தில் கொள்ளாமல் எழுவர்
விடுதலை என்று உளறிக் கொண்டிருந்தால் விடுதலை
கிடைக்குமா?

இலங்கையில் முன்புள்ள நிலைமை வேறு. இன்றுள்ள
நிலைமை வேறு. இன்று தமிழ் மாகாணத்தில் தமிழ்
முதலமைச்சர் இருக்கிறார். நாடாளுமன்றத்தில்
தமிழ் எம்பிக்கள் இருக்கின்றனர். எதிர்க்கட்சித்
தலைவராக  தமிழரே இருக்கிறார்.

இவர்களில் யாராவது, குறைந்த பட்சம் ஒரே ஒரு
எம்பியாவது ஒரு கருணை மனுவைத் தயாரித்து
இலங்கை அரசின் மூலமாக இந்திய அரசுக்கு
அனுப்பி இருந்தால், அந்தக் கருணை மனு
பரிசீலிக்கப் பட்டு இருக்கும். விடுதலையும் கிட்டி
இருக்கும்.

ஆனால் இந்த நிமிடம் வரை இலங்கைப் பிரஜைகளை
விடுவிக்கச் சொல்லி, இலங்கை அரசின் சார்பில்
ஒரு கருணை மனு கூட இல்லை.வெளிநாட்டுக்
கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்றால்,
அந்த வெளிநாட்டின் அரசில் இருந்து அதிகாரபூர்வமான
எழுத்து மூலமான வேண்டுகோளோ கருணை மனுவோ
கண்டிப்பாக வேண்டும். அது இல்லாமல் பொதுவாக
எந்த நாடும் வெளிநாட்டுக் கைதிகளை விடுதலை
செய்வதில்லை. இப்படிச் சட்டம் இல்லாவிடினும்
இதுதான் நடைமுறையாக (practice in vogue) இந்தியாவில்
இருந்து வருகிறது. ஆனால் இந்தியப் பிரஜைகளுக்கு
இப்படி எதுவும் தேவை இல்லை.

ஏழு பேரின் விடுதலையைக் கோருகிறவர்கள்
இலங்கை அரசிடம் இருந்து ஒரு கருணை
மனுவைப் பெற்று இந்திய அரசுக்கு அனுப்புவதில்
எந்த அக்கறையும் காட்டவில்லை.

முருகன் உள்ளிட்ட இலங்கைப் பிரஜைகளை விடுவிக்க
வேண்டும் என்று இலங்கை அரசு கோருமானால்,
அதை அவ்வளவு எளிதாக இந்திய அரசால் புறந்தள்ள
முடியாது. மிகப்பெரிய diplomatic value  உடையதாக
இலங்கை அரசின் அந்த வேண்டுகோள் இருக்கும்.

எழுவர் விடுதலை என்று ஒரே மொத்தமாக
இந்தியர்களுக்கும் இலங்கைப் பிரஜைகளுக்கும்
சேர்த்து ஒருசேர விடுதலையைக் கோருவது பயன்
தரவில்லை என்று பார்த்தோம்.

முதலில் இந்தியர்களின் விடுதலை; அதை அடுத்து
இலங்கைப் பிரஜைகளின் விடுதலை என்று கோரி
இருந்தால் இந்நேரம் நளினியும் பேரறிவாளனும்
விடுதலை ஆகி இருப்பார்கள்.

அடுத்து இலங்கை அரசிடம் இருந்து ஒரு கருணை
மனுவைப் பெற்று அதை இந்திய அரசிடம் சமர்ப்பித்து
இருந்தால், முருகன் போன்ற இலங்கைப் பிரஜைகளும்
விடுதலை ஆகி இருப்பார்கள்.

ஆனால் எழுவர் விடுதலை என்று போலிக்குரல்
கொடுக்கும் ஈழத் தரகர்கள் இந்த செயலுத்தியைக்
கடைப்பிடிக்கவில்லை. இதை நான் பல ஆண்டுகளாகச்
சொல்லி வருகிறேன்.

ஈழத் தரகர்கள் பாயாசத்தையும் மீன் குழம்பையும்
சேர்த்துக் கலக்குகிறார்கள். விளைவு: இரண்டுமே
குப்பைத் தொட்டிக்குப் போகிறது.
*************************************************

மருதுபாண்டியன் சிலம்பபராசன் சே திருப்பூர் குணா

ராஜீவ் படுகொலை விஷயத்தில் உண்மை தெரிந்த பலரும்
தாங்கள் அறிந்த பல உண்மைகளை இதுவரை
பொதுவெளியில் சொல்லவில்லை, நான் உட்பட.
ஏனெனில் உண்மைகளைச் சொன்னால் ஏற்றுக்
கொள்ளும் மனப்பக்குவம் இல்லாத ஒரு சமூகத்தில்
எவரும் இதுதான் உண்மை என்று திடீரெனச்
சொல்லி விட முடியாது.

கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொருவராக உண்மைகளைப்
பேசத் தொடங்கி இருக்கிறார்கள். முதன் முதலில்
பல ஆண்டுகளுக்கு முன்பு தோல் திருமாவளவன்
அவர்கள் ஒரு உண்மையைஅச் சொன்னார். அது
ஜூனியர் விகடன் ஏட்டில் வெளிவந்தது.

தமிழினி என்னும் LTTE போராளி தனக்குத் தெரிந்த
உண்மைகளில் 5 சதம் மட்டுமே கூறி ஒரு நூல்
வெளியிட்டார். தற்போது சீமான் அவர்கள்
உண்மையைப் பேசத் தொடங்கி இருக்கிறார்.
இதைத் தமிழ்ச் சமூகம் வரவேற்க வேண்டும்.

இன்னும் எத்தனை காலம்தான் பொய்களையே உண்டு
பொய்களையே சுவாசித்துக் கொண்டு இறுக்கப்
போகிறதோ தமிழ்ச் சமூகம்.

2019 மாவீரர் தினத்தன்றோ அல்லது அதற்கு முன்போ
சில உண்மைகளை வெளியிட இருக்கிறேன்.
----------------------------------------------------------------------

பேரில் சிலர் மட்டுமே இந்தியர்கள் என்பதும்
மற்றவர்கள் வெளிநாட்டினர் என்பதும்.

இந்தோனேஷியாவின் பாலித்தீவு வழக்கு பற்றிச்
சிலராவது அறிந்திருக்கக் கூடும். அது போதைப்
பொருள் கடத்தல் வழக்கு. அதில் ஈழத்தமிழர்
மயூரன் பிடிபட்டு மரண தண்டனை விதிக்கப்
பட்டார்.

மயூரன் ஈழத்தமிழர் என்றாலும் அவர் ஆஸ்திரேலியக்
குடிமகன் ஆவார். எனவே அவ்ருக்கு கருணை காட்டுமாறு
ஆஸ்திரேலிய அரசு கோரி இருந்தது. ஆஸ்திரேலியப்
பிரதமரே கருணை காட்டுமாறு கடிதம் அனுப்பி
இருந்தார்.

இதைப்போன்று, இலங்கை அரசிடம் இருந்து
முருகன் உள்ளிட்ட இலங்கைப் பிரஜைகளை
விடுவிக்கச் சொல்லி இலங்கை அரசு கடிதம்
எழுதி இருக்க வேண்டும். ஆனால் அப்படிக்
கடிதம் எதுவும் இந்த நிமிடம் வரை இல்லை.
இதனால் விடுதலை கிடைக்காமல் போகிறது.



   

 
  
        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக