வியாழன், 3 அக்டோபர், 2019

பத்துப்பாட்டை நினைவில் கொள்ள ஒரு வெண்பா!
---------------------------------------------------------------------------------
எட்டுத்தொகை நூற்களை நினைவில் கொள்ள
ஒரு வெண்பாவை முன்னர் பார்த்தோம்.
இப்போது பத்துப்பாட்டு நூற்களை நினைவில்
கொள்ளும் வழியாக இந்த வெண்பாவைக் கற்கவும்.
------------------------------------------------------------------------------

வெண்பா
---------------
திருமுருகு சீர்பொருநர் நற்சிறுபாண் நற்பெரும்
பாண்எனஆற் றுப்படை மீன்மதுரைக் காஞ்சிமுல்லைப்  
பாட்டுநெடு நல்வாடை பட்டினப்பா லைகுறிஞ்சிப்
பாட்டும லைபடுக டாம். 
-----------------------------------------------------------------------------
தற்கால மாணவர்களின் தகுதிநிலையைக் கருத்தில்
கொண்டு பத்துப்பாட்டு நூற்களின்
முழுப் பெயரையும் இவ்வெண்பா கூறுகிறது.

"முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை" என்று
தொடங்கும் பழைய வெண்பாவில் நூற்களின்
பெயர் முழுமையாக இல்லை. அந்தக் குறை
நான் இயற்றிய வெண்பாவில் நீங்கி விட்டது.
------------------------------------------------------------------------------


மருதுபாண்டியன்

வாங்கிய கோடிபத்தில் என்பங்கு எங்கே 
வீங்கிடும் கன்னம் என்றுகையில் --ஓங்கிய  
வாளுடன் அங்கே பொலிட்பீரோ கூட்டத்தில்
தோள்தட்டும் நம்அருணன் பார்.

இது ஆகச்சிறந்த நேரிசை வெண்பா. இரண்டாம்
அடியின் ஈற்றில் தனிச்சொல் வருவதைக் காண்க.



மார்க்சிஸ்டு கட்சியில் பங்கு கேட்டு நடக்கும்
குத்து வெட்டு பற்றி ஒரு வெண்பா!
----------------------------------------------------------------------
சற்று முன் நான் இயற்றிய இந்த வெண்பாவைச்
சுவையுங்கள்.

இதில் உள்ள எதுகை மோனைகளை எடுத்து
எழுதுங்கள்! தளைகளை எழுதிக் காட்டுங்கள்!
இது ஒரு அகாடமிக் பதிவு என்று கருதுங்கள்!
-----------------------------------------------------
இந்த வெண்பாவை வாய்விட்டுப் படியுங்கள்.
இதன் சுவையை உணருங்கள்!
இது சுவைக்கவில்லை என்று நீங்கள்
உணர்வீர்கள் என்றால், அது இரங்கத்தக்க நிலை
என்று உணர்க.


நம்+ அருணன் என்பது நம்மருணன் என்று புணரும்.
பொருளில் மாற்றமில்லை.

செம் + அருணன் என்றால், செம்மருணன் என்று புணரும்;
(ஒற்று இரட்டித்துப் புணர்தல்). இது செவ்வருணன்
என்று பொருள்படாது. ஆதலின் செம் என்று மாற்றிட
இயலாது. (செம்மை+ அருணன் என்றால் மட்டுமே
செவ்வருணன் என்று பொருள்படும்).


முதல் எழுத்து ஒன்றுபோல் வந்தால் அது மோனை
காணப்படும். இரண்டாம் எழுத்து ஒன்றுபோல்
வந்தால் அது எதுகை எனப்படும்.

வாங்கிய, வீங்கிடும், ஓங்கிய என்பன எதுகைகள்.
வாளுடன், தோள்தட்டும் என்பன எதுகைகள்.


தமிழில் பயிற்சி இல்லாதோரும் புரிந்து கொள்ள
ஏதுவாக, வெண்பா சந்தி பிரித்து எழுதப் பட்டுள்ளது.
அதனால் யாப்பமைதி குன்றுவதாக உணர இடமுண்டு.
வெண்பா பின்வருமாறு உள்ளது.


சந்தி பிரிக்கப்படாமல் வெண்பா அதன் மூல வடிவில்
பின்வருமாறு உள்ளது!
-----------------------------------------------------------------
வாங்கிய கோடிபத்தி லென்பங்கெங் கேகூறு  
வீங்கிடும் கன்னமென்று கையிலே--ஓங்கிய  
வாளுட னங்கே பொலிட்பீரோ கூட்டத்தில்
தோள்தட்டும் நம்மருணன் பார்.
------------------------------------------------------------


மோனை முற்றிலும் இல்லை என்பது சரியன்று.
சீர் மோனையை (ஓர் அடியில் உள்ள நான்கு சீர்களில்
அமைந்த மோனை) விட அடிகளில் அமைந்த
மோனையே சிறப்புக்குரியது. முதல் மூன்று அடிகளில்
உள்ள வா வீ வா ஆகியன மோனையே. கூழை மோனை
எனலாம். இது ஏற்புடையதில்லை எனில், முதலடி
மூன்றாமடிகளில் அமைந்த பொழிப்புமோனையைப்
புறந்தள்ள இயலாது. எதுகை உள்ளதெனினும்
சிறப்பில்லை என்று கூறுவது தங்களின் பார்வை.
அதற்கு யான் கூற எதுவும் இல்லை.




ஆம், இப்போதுதான் பார்த்தேன். எடுத்து எழுதுவதில்
கவனக்குறைவு.


சந்தி பிரித்து எழுதப்பட்ட வெண்பா பதிவில் உள்ளது.
சந்தி பிரிப்பதற்கு முன் உள்ள வெண்பாவையும் 
(அதன் மூல வடிவில்) பதிவில் சேர்த்து விடுகிறேன்,
தங்கள் அனுமதியுடன்.

வயதில் இளையவரான ஒருவர் இவ்வாறு நேரிசை
வெண்பாவின் இலக்கணத்தை நன்கறிந்தவராக
இருப்பதை இப்போதுதான் பார்க்கிறேன்.
தாங்கள் எல்லா நலமும் வளமும் பெற்றிட
வாழ்த்துகிறேன்.


மிக அற்புதமான நேரிசை வெண்பா.
ஆற்றொழுக்கு நடையில் அமைந்திட்ட வெண்பா.
நன்றி. நலம் விளைக!

நல்லது; ஓர் அடியின் சீர்களுக்குள் மோனை அமைதலும்
அடிகளில் மோனை அமைதலும் சிறப்பே. சீர்மோனை
அடிமோனையினை நோக்கப் பெரிதே. நான் வெண்பாவை
யாக்கும்போது அடிமோனைக்கே அழுத்தம் தந்தேன்.
மாணவர்கள் மனனம் செய்ய ஏதுவாக அமையும் என்று.
வருக்க எதுகை இன எதுகை ஆகியவற்றையும்
இலக்கண ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.

ஏனெனில் இலக்கணப்படியான யாப்பு என்பது
ஒரு குறிப்பிட்ட permutation/combinationஐ மட்டுமே
அனுமதிப்பது. ஒருவகையில் யாப்பு என்பது
கருத்துச் சிறையே. அதிலும் நேரிசை வெண்பா
என்பது இன்னும் இறுக்கமான கருத்துச்  சிறையே.

எனவேதான் பெரும் இலக்கியங்கள் மிகுதியும்
அகவற்பாவால் அமைந்தன. என் பார்வையில்
கம்பனின் விருத்தம் கைகளை அகல வீசி
நடக்க வாய்ப்புத் தரும் ஓர் ஏற்பாடு.

நல்லது. தங்களின் திறமையை. சடுதியில்
நல்லதோர் வெண்பா இயற்றும் ஆற்றலைப்
பெரிதும் போற்றுகிறேன்; மகிழ்கிறேன்.


     
  


 

 
 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக