செவ்வாய், 29 அக்டோபர், 2019

குழந்தை சுஜித் மீட்பு? நடந்தது என்ன?
நம்மிடம் தொழில்நுட்பம் இல்லையா?
-----------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------
உலகெங்கும் ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள்
விழுந்து விடுவது அடிக்கொருதரம் நடக்கும் நிகழ்வே.
முதலாளித்துவ அமெரிக்காவிலும் சரி, கம்யூனிஸ்ட்
சீனாவிலும் சரி, இரண்டுங்கெட்டான் இந்தியாவிலும் சரி,
ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் விழுந்து
உயிருக்குப் போராடிய நிகழ்வுகள் வரலாறாக உள்ளன.

மணப்பாறைக்கு அருகில் உள்ள சிற்றூரில் இரண்டு வயதுக்
குழந்தை சுஜித் வில்சன் விழுந்து, 80 மணி நேரம் நீடித்த
மீட்புப் பணிகள் பலன் தராத நிலையில் உயிரிழந்தது
நெஞ்சைப் பிழியும் சோகமாக இருக்கிறது.

இந்நிகழ்வை ஒட்டி, ஆழத்தில் விழுந்த குழந்தையை
மீட்க வல்ல தொழில்நுட்பம் இந்தியாவிலேயே இல்லை
என்றும், இதற்குத் தேவையான நவீன அறிவியல் கருவிகள்
இந்தியாவில் இல்லை என்றும் சில கருத்துக்கள் சமூகத்தில்
திணிக்கப் படுகின்றன. இந்தக் கருத்து சரியா என்று
பார்ப்போம்.

ஆழத்தில் விழுந்த குழந்தையை மீட்பதில் உள்ள
தொழில்நுட்பம் உலகெங்கும் இதுதான். இது மிகவும்
எளிய தொழில்நுட்பம்தான். அணுஉலைத் தொழில்நுட்பம்
போன்றோ அல்லது விண்வெளியில் வேற்று கிரகத்துக்கு
செயற்கைக்கோள் அனுப்பும் தொழில்நுட்பம் போன்றோ
சிக்கலான தொழில்நுட்பம் அல்ல இது.

நியூட்டன் காலத்திய மெக்கானிக்சே இதற்குரிய தீர்வைத்
தந்து விடுகிறது. நீங்கள் துகள் இயற்பியலுக்கோ
குவான்டம் இயற்பியலுக்கோ போக வேண்டியதில்லை.

1) எந்தக் குழாய் வழியாக குழந்தை விழுந்ததோ, அதே
குழாய் வழியாக கருவியையோ, ஆளையோ,
ரோபோவையோ அனுப்பி குழந்தை இருக்குமிடத்தை
அடைந்து அதை மீட்பது.

2) குழாயின் அகலம் (diameter of the passage) மிகவும்
குறுகியதாக இருந்தால், மேற்கூறிய வழிமுறைகள்
பயன் தராமல் போகக்கூடும். அந்நிலையில்
குழியில் விழுந்த குழந்தையை எப்படி அடைவது?

அந்தக் குழிக்குப் போதிய அளவு மிக அருகில் இன்னொரு
குழியை ஆங்கில L எழுத்து வடிவில் (L shaped) தோண்டி,
அதன் வழியாக குழந்தை இருக்கும் இடத்தை அடைந்து
அதை மீட்பது.  (படத்தைப் பார்க்கவும்).

இவ்விரண்டு வழிகளைத் தவிர, இந்த மொத்தப்
பிரபஞ்சத்திலும் குழியில் விழுந்த குழந்தையை மீட்க
வேறு வழி எதுவும் கிடையாது. அமெரிக்கா,  ரஷ்யா,சீனா,
ஜெர்மனி என்று எவ்வளவு வளர்ந்த நாடாக இருந்தாலும்
இவ்விரண்டு வழிகள் மட்டுமே உண்டு.

குழந்தை சுஜித்தை மீட்பதில், மீட்புக் குழுவினர் முதல்
வழியைப் பின்பற்றி, குழந்தை விழுந்த அதே குழாய்
வழியாக சில கருவிகளைச் செலுத்தி மீட்க முயன்றனர்.
மணிகண்டன் என்பவர் கொண்டவந்த கருவியைச்
செலுத்தி மீட்கும் முயற்சி தோற்றது. அடுத்து அதே போன்ற
மற்ற முயற்சிகளும் தோல்வி அடைந்ததால் இரண்டாவது
வழிமுறையை மீட்புக்குழு நாடியது. 

ஆனால் மிகக் கடினமான பாறைகள் இருந்ததால்,
ரிக் எந்திரம் பயன்படுத்தப்பட்ட போதிலும்,
உரிய நேரத்துக்குள் பக்கவாட்டுக் குழியைத்
தோண்ட முடியவில்லை.

இதனிடையே குழந்தையின் நிலை என்ன என்று பார்ப்போம்.

1) குழிக்குள் விழுந்த குழந்தை ஒரு abnormal situationக்கு
ஆட்பட்டுள்ளது.  கிட்டத்தட்ட shrink fitting என்று கூறத்தக்க
அளவில் குழந்தை அந்த சிலிண்டருக்குள் (குழிக்குள்)
மாட்டிக் கொண்டுள்ளது. அங்குமிங்கும் திரும்பவோ,
உடலைச் சுற்றி வளைக்கவோ இயலாத நிலையில்
ஒரே இடத்தில் ஒரே பொசிஷனில் இருக்க வேண்டிய
நிலைக்கு குழந்தை ஆட்பட்டுள்ளது.

இது குழந்தையின் மீது ஒரு stressஐ ஏற்படுத்தி உள்ளது.
குழந்தையின் மீது செயல்படும் stress tensorஐ அறிந்து
கொண்டு, அதற்கேற்பவே மீட்புப் பணியைத் தீர்மானிக்க
இயலும்.

2) முதலில் குறைவான ஆழத்தில் இருந்த குழந்தை
இறுதியில் 85 அடி ஆழத்திற்குச் சென்று விட்டது.
அந்த சிலிண்டரில் எந்தப் பிடிமானமும் இல்லாததால்
குழந்தை free fall போன்று மேலும் ஆழத்துக்குச் செல்ல
வாய்ப்புண்டு. அந்த ஆழத்தில் சுவாசத்துக்குத்
தேவையான ஆக்சிஜன் கிடைக்காது. எனவே மேலிருந்து
ஆக்சிஜன் செலுத்தப் பட்டது. இதன் மூலம் குழந்தை
உயிருடன் இருக்க வாய்ப்பு ஏற்பட்டது.

3) ஆக்சிஜன் சப்ளை இருந்த போதிலும், நேரம் ஆக ஆக
குழந்தையின் மீது செயல்படும் stress tensor காரணமாக,
குழந்தைக்கு pulse down நிலைமை ஏற்படும். ஒரு குறிப்பிட்ட
அளவுக்குக் கீழ் பல்ஸ் குறைந்து விட்டால், குழந்தை
மயக்கம் ஆகிவிடும். மீட்புப்பணி நடந்து
கொண்டிருக்கும்போதே, குழந்தையின் pulse down
நிலைமை பற்றி மீட்புக்குழு அறிந்திருக்கும்.

Pulseன் threshold level என்ன என்பது பற்றியும், அந்த
threshold levelல் குழந்தை அதிகபட்சம் எவ்வளவு நேரம்
உயிருடன் இருக்கும் என்பது பற்றியும் ஒரு குழந்தை
நல மருத்துவரோ அல்லது உடல் இயங்கியல்
பேராசிரியரோ மட்டுமே கூற இயலும். இக்கட்டுரை
ஆசிரியரால் அதுபற்றித் துல்லியமாகக் கூற இயலாது.

முதல் வழி, இரண்டாவது வழி ஆகிய இரண்டுமே
தோல்வி அடைந்ததால், குழந்தை உயிரிழப்பது
தவிர்க்க முடியாமல் போய்விட்டது.

இப்போது உயிரிழந்த குழந்தையை 85 அடி ஆழத்தில்
இருந்து மேலே தூக்குவது என்பது மீட்புக்குழுவின்
அடுத்த கட்டப்பணி. இது ஐந்து பத்து நிமிடத்திற்குள்
முடிந்து விடும் எளிய பணி. எனவே மீட்புக்குழுவானது
ஒரு பொருளைத் தூக்குவது போல குழந்தையின்
உயிரற்ற உடலை மேலே தூக்கிக் கொண்டு வந்து விட்டது.

இதுதான் நடந்தது. இப்படித்தான் நடந்தது. குழந்தை
உயிரிழக்கக் காரணங்கள் இவையே.
1) ஆழ்துளைக் கிணற்றின் விட்டம் மிகவும் குறுகியது
(4 அங்குல விட்டம் மட்டுமே). இதன் காரணமாக
கருவிகளையோ பலூனையோ உட்செலுத்த முடியவில்லை.

2) பல்வேறு காரணங்களால் குழந்தையின் மீது
செயல்பட்ட stress tensorன் தாக்கம் அதிகம். குறுகிய
குழாய் என்பதால் உடலை அசைக்கக் கூட முடியாமல்
ஒரே பொசிஷனில் குழந்தை இருந்த நிலைமை மற்றும்
குழந்தையின் மீது மிக மெலிதாக மண் படிந்தமை. 

3) சுற்றிலும் மிக்க கடினமான பாறைகள் இருந்ததால்
பக்கவாட்டில் ஒரு குழாய் அமைப்பதில் தோல்வி.

4) இரண்டு வயதுக் குழந்தை என்பதால், it is highly tender
என்பதால், குழந்தையால் மீட்புப் பணியின் தாக்கத்தைப்
பொறுத்துக் கொள்ள இயலவில்லை. சற்று வயது கூடிய
பெரிய குழந்தையாக இருந்தால், அதன் உடல் ஓரளவு
அதிகமான தாக்கத்தை எதிர்கொள்ள இயலும்.  
 
இவைதான் காரணங்களே அன்றி, நம்மிடம் தொழில்நுட்பம்
இல்லை என்பதோ கருவிகள் இல்லை என்பதோ
காரணம் அல்ல.

சீனாவில் 10 நிமிடத்தில் மீட்டு விட்டார்கள்,
ஸ்பெயினில் 15 நிமிடத்தில் மீட்டு விட்டார்கள்
என்று பேசுபவர்கள் ஒரே ஒரு உண்மையை உணர்ந்து
கொள்ள வேண்டும்.
Every case is unique. Ours is the one which has heavy odds against.

கட்டுமான வேலையின்போது கடினமான பாறைகளை
வெடி வைத்துத் தகர்ப்பார்கள். அதே போல வெடி
வைத்துத் தகர்ப்பது இயலாது. ஏனெனில் இது
கட்டுமானப் பணி அல்ல; குழந்தையை மீட்கும் பணி.

இந்த இடத்தில், பல ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த
ஒரு ஆங்கிலப் படத்தை நினைவு படுத்துகிறேன்.
"The Shawshank Redemption" என்ற படம் அது. எத்தனை பேர்
பார்த்திருப்பீர்கள் என்று தெரியாது.

இப்படத்தின் கதாநாயகன் சிறையில் அடைக்கப்பட்ட
ஓர் ஆயுள் தண்டனைக் கைதி. அவன் சிறையில் ஒரு
சுரங்கம் தோண்டுவான். 19 ஆண்டு காலம் கொஞ்சம்
கொஞ்சமாக யாருக்கும் தெரியாமல் சுரங்கம் தோண்டித்
தப்பித்து விடுவான். 

குழந்தை சுஜித் மீட்பிலும் அவ்வளவு மெதுவாகச்
சுரங்கம் தோண்டினால்தான் குழந்தைக்கு பாதிப்பு
ஏற்படுத்தாமல் இருக்கலாம். ஆனால் அது சாத்தியமற்றது.

குழந்தைக்காக மிகவும் வருந்துகிறேன். குழந்தையின்
பெற்றோரின் துயரத்தில் பங்கு கொள்கிறேன்.
**********************************************************

குழியில் உள்ள குழந்தையை நெருங்கவே முடியாத
நிலையில், குழந்தை இருக்கும் இடத்திற்குக் கீழே
இரண்டடியில் தடுப்பு ஏற்படுத்துவது எப்படி?
  

குழந்தை மீட்பு விவகாரத்தில், குழந்தை இருக்கும்
இடத்தை கொடுக்கப்பட்ட இரண்டு வழிகளாலும்
நெருங்க முடியவில்லை. இதனால்தான் rescue operation
தோற்றது.இதுதான் உண்மை. இதை மக்கள் புரிந்து
கொள்வதற்காகவே இக்கட்டுரையை எழுதி உள்ளேன்.

  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக