நாங்குநேரி விக்கிரவாண்டி முடிவுகள்
உணர்த்தும் உண்மை என்ன?
---------------------------------------------------------
விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன்
திமுகவின் புகஸிந்தியை 44,294 வாக்குகள் வித்தியாசத்தில்
தோற்கடித்துள்ளார். நாங்குனேரியில் அதிமுகவின்
நாராயணன் காங்கிரசின் மனோகரனை 33,445 வாக்குகள்
வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.
நான்குனேரியில் தேவேந்திர குல வேளாளர் சமூக
மக்கள் வாக்களிக்காமல் தேர்தலைப் புறக்கணித்தனர்.
அவர்கள் வாக்களித்திருந்தால், காங்கிரஸ் வேட்பாளர்
மனோகரன் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப்
போய் இருப்பார்.
காங்கிரஸ் வேட்பாளர் மனோகரன் உள்ளூர்க்காரர் அல்லர்.
இறக்குமதி செய்யப்பட்ட வேட்பாளர். காங்கிரஸ் தலைவர்
கே எஸ் அழகிரியால் நான்குனேரியில் ஒரு உள்ளூர்
வேட்பாளரை நிறுத்த முடியவில்லை; அல்லது நிறுத்த
விரும்பவில்லை.
இதைத்தவிர காங்கிரசின் தவறு என்று வேறு ஏதும் இல்லை.
காங்கிரசின் தலைவிதி திமுகவின் தலைவிதியுடன்
முடிச்சுப் போடப்பட்டு உள்ளது. எனவே இந்தப்
படுதோல்வியில் காங்கிரசின் பங்கு என்று பெரிதாக
ஏதும் இல்லை.
திமுக என்பது ஒரு அரசியல் கடசியாக, சமூக இயக்கமாக
ஒரு காலத்தில் இருந்தது. இன்று அது கருணாநிதி அண்ட்
சன்ஸ் பிரைவேட் லிமிட்டெட் கம்பெனியாக மாறி
விட்டது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள சொத்துக்கள்,
வெளி மாநிலங்களில் வாங்கிக் குவித்த சொத்துக்கள்,
வெளி நாடுகளில் உள்ள சொத்துக்கள்
என்று குவிந்த சொத்துக்களைக் காப்பாற்றுவது
மட்டுமே திமுகவின் ஒரே லட்சியமாக மாறி
விட்டது. எனவே கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி,
இன்பநிதி என்பதாக திமுக மாறி விட்டது.
மக்கள் இதை விரும்பவில்லை. இதை ஏற்கத்
தயாராக இல்லை. எனவே தேர்தல் முடிவுகள்
இப்படித்தான் இருக்கும். 2021 பொதுத்தேர்தலிலும்
முடிவுகள் இப்படித்தான் வரக்கூடும்.
ராகுல் காந்தி தமிழ்நாட்டுக்கு வந்தால், உதயநிதிக்குப் ழே ட்
பல்லக்குத் தூக்க வேண்டும் என்ற நிலையில்
காங்கிரஸ் மானமிழந்து இருக்க வேண்டிய
அவசியம் இல்லை. சென்னை வரும்போதெல்லாம்
கருணாநிதியைச் சந்திக்க மறுத்து கெத்தாக
இருந்த ராகுல் காந்தி இன்று உதயநிதிக்குப்
பல்லக்குத் தூக்குவதை மானமுள்ள காங்கிரஸ்காரன்
விரும்பவில்லை.
சபரீசன் பேச்சைக் கேட்டுக் கொண்டு, வன்னியருக்கு
மட்டும் தனி உள்ஒதுக்கீடு என்று ஸ்டாலின்
அறிவித்தது முட்டாள்தனம் மட்டுமல்ல; மற்ற
சாதியினர் அனைவ்ருக்கும் ஆத்திரத்தை
ஏற்படுத்தியது.
எல்லாக் கோபத்துக்கும் மக்கள் வடிகால் தேடி
விட்டார்கள்! அவ்வளவுதான்!
***********************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக