சனி, 26 அக்டோபர், 2019

MARISM DETAILS GERMANY
கோசல நாட்டைப்பற்றிப் பேசவந்த கம்பன், அந்த நாட்டில் கொடையே இல்லை, ஏனென்றால் அங்கு வறுமை இல்லை ஆதலால் என்பான்; ('வண்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால்');
கமபன் கண்ட குறிக்கோள் நாட்டை நேரில் காண வேண்டுமென்றால் - உண்மையான சோசலிஸத்தைத் துய்க்க வேண்டுமென்றால் ஜெர்மனிக்குத்தான் வர வேண்டும் என்கிறார் அங்குள்ள ஒரு நண்பர்.
* மருத்துவமனைகளில் சாதாரண காய்சலுக்கான சிகிச்சையாக இருந்தாலும், மகப்பேற்று மருத்துவமாக இருந்தாலும்,
அறுவைச் சிகிச்சையாக இருந்தாலும் -
எந்தச் சிகிச்சைக்கும் சல்லிக்காசுகூடக் கட்டணம் கிடையாது; மருந்தும் மருத்துவமும் முற்றிலும் இலவசம்.
* பள்ளிகளில் படிக்க ஒரு பைசாகூடக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. அனைத்தும் இலவசம்.
* பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர் ஒவ்வொருவருக்கும் அரசு மாதந்தோறும் 700 ஈரோ(Euro) தருகிறது. அதாவது 55,000 ரூபாய்.
* இங்குள்ள நகரங்களில் சாலைகள் அகலமாகவும், ஒழுங்காகவும் தூய்மையாகவும் உள்ளன. சாலையின் இருபுறங்களிலும் கார்கள் நிறுத்தி வைக்கப்படுவதே (Parking) பெரும்பான் மையாகக் காணப்படுகிறது.
* இங்கு (பீலஃபெல்டு நகரில்)
மோட்டார் பைக்கை மிக அரிதாகவே காணமுடிகிறது. காணும் திசையெல்லாம் சிற்றுந்தும் (car), மிதியுந்துமே (cycle) ஆதிக்கம் செலுத்துகின்றன.
* 8 கோடியே 30 லட்சம் மக்கள்தொகை உள்ள ஜெர்மனியில் 6 கோடியே 40 லட்சம் கார்கள் உள்ளன. வேறெந்த நாட்டிலும் இந்த அளவிற்குக் கார்கள் உள்ளனவா என்பது தெரியவில்லை.
* குறுகுறு குழந்தைகள்முதல்
குடுகுடு கிழவர்கள்வரை அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் மிதியுந்தில் வலம்வருவதைக் காணமுடிகிறது. இதனால், எரிபொருள் சிக்கனம், காற்று மாசுபடாமை, நல்ல உடற்பயிற்சி சாத்தியமாகின்றன.
* பேருந்துகள், மெட்ரோ, டிராம்கள் - எனப் பொதுப்போக்குவரத்துகள் வசதியாகவும் கூட்ட நெரிசலே இல்லாமலும் உள்ளன.
* கடைகளில் விற்பனையாளர்கள்,
கார், பஸ், டிராம், மெட்ரோ ஓட்டுநர்கள், விமான நிலையங்களில் சக்கர நாற்காலி தள்ளுநர்கள் - என இத்தகையோருள் ஏறத்தாழப் பாதிப்பேர் பெண்களாகவே உள்ளனர். ஆனால் சிகரெட் பிடிப்பதில் மட்டும் ஆண்களைப் பெண்கள் மிஞ்சிவிட்டனர். எங்குப் பார்த்தாலும் பெரும்பாலான பெண்கள் புகைத்தபடியே உள்ளனர்.
* நான் சென்றதிலிருந்து, வாகனங்களிலிருந்து ஹார்ன் சத்தம் வருமா என்று காதைத் தீட்டி வைத்துக் கொண்டு காத்திருந்தேன். ஹார்ன் ஒலி வந்தபாடில்லை. ஒலிமாசுக் கட்டுப்பாட்டில் அவ்வளவு அக்கறையுடன் நடந்துகொள்கின்றனர்.
* தமிழ்ப்பள்ளிகளை நடத்துதற்கும், கலை நிகழ்ச்சிகள், ஆண்டுவிழாக்கள் போன்றவற்றை நடத்துதற்கும் நிர்வாகமே கட்டடங்களையும், அரஙகுகளையும் வாடகையின்றித் தருகின்றது என்பது கூடுதல் மகிழ்ச்சி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக