ஞாயிறு, 20 அக்டோபர், 2019

திமுக முன்னாள் அமைச்சர் கே என் நேரு
வங்கியில் கடன் வாங்கி திரும்பிச் செலுத்தவில்லை!
தமிழ்நாட்டின் விஜய் மல்லையாவாக கே என் நேரு!
அவரின் 100 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் ஏலம்!
---------------------------------------------------------------------------
திருச்சியின் முடிசூடா மன்னராக இன்றளவும்
விளங்குபவர் கே என் நேரு. இவர் திமுகவின் முன்னாள்
அமைச்சர்.

இவர் திருச்சி கன்டோன்மென்டில் உள்ள இந்தியன் வங்கியில்
ரூ 100 கோடி பல ஆண்டுகளுக்கு முன்பு கடன் வாங்கினார்.
வாங்கிய கடனைத் திரும்பிச் செலுத்தவில்லை.

கடனை உடனே திரும்பிச் செலுத்துமாறு இந்தியன் வங்கி
எவ்வளவோ நோட்டீஸ்களை அனுப்பியது. கே என் நேரு
கண்டு கொள்ளவில்லை.

எனவே கடன் பெறுவதற்காக கே என் நேரு
அடமானம் வைத்த சொத்துக்களை இந்தியன் வங்கி
ஏலம் விடுவதாக அறிவித்துள்ளது.

பட்ஜெட் விவாதம் செய்வோர் கவனத்திற்கு!

அறிவியல் ஒளி 2019 ஆண்டு மலரில் வெளியாகி
உள்ளது. அது ஒரு நீண்ட கட்டுரை.  ஆ

பின்குறிப்பு:
------------------
தேதி சரிதான். அந்தத் தேதியில் ஏலம் என்றுதான்
அறிவிப்பு இந்தியன் வங்கியில் ஓட்டப் பட்டு
இருந்தது. பத்திரிகைகளிலும் செய்தி வந்தது.

ஆனால் அதன் பிறகு, அந்த ஏலம் நடந்த செய்தியை
இந்தப் பத்திரிகையும் வெளியிடவில்லை. கே என் நேரு
எல்லா ஊடகத்தையும் விலைக்கு வாங்கி விட்டார்.

தற்போது புலனாய்வு செய்துதான் உண்மையைக்
கண்டறிய வேண்டும்.

எழுதி விடுவோம்.

கே என் நேருவின் சொத்துக்கள்
ஒரு லட்சம் கோடி ரூபாய் என்று
கணக்கிடப் பட்டுள்ளது. இதில் பெரும்பகுதி
அடுத்தவர் சொத்தை அபகரித்ததன் மூலம்
வந்ததாகும்.






இந்தக் கட்டுரை ஆட்டிச இடதுசாரித் தற்குறிகளுக்கு
இந்தியப்  பொருளாதாரத்தின் அடிப்படை என்ன என்று
எடுத்துச் சொல்லும் கட்டுரை. ஆட்டிச இடதுசாரித்
தற்குறிகளிடம் இதற்குப் பதில் இருக்காது.





maruthupaandiyan  மருதுபாண்டியன்


குரோனி முதலாளித்துவமே காரணம்.
அவர்களுக்கு இடமளித்து அதன் மூலம் ஊழல் புரிந்து
வங்கியைத் திவால் ஆக்கிய வங்கி CEO காரணம்.


அதற்கான சட்டம் இயற்றப்படவில்லை.
காங்கிரஸ் ஆட்சியானது பல துறைகளை நவீனம்
ஆக்கியது. ஆனால் நவீனச் செயல்பாடுகளின் மீது
checks and balances  ஏற்படுத்த வல்ல சட்டங்களை
இயற்றத் தவறி விட்டது. எனவே வெளிநாடு தப்பி
ஓடும் குற்றவாளிகளைப் பிடிக்க இயலாது.

சட்ட மன்ற உறுப்பினராக இருந்து கொண்டு,
அமைச்சராக இருந்து கொண்டு, பொதுத்துறை
வங்கியை ஏமாற்றி மோசடி செய்யும் கே என் நேருவைக்
கைது செய்ய சட்டம் இல்லை.


கே என் நேரு வாங்கிய கடன் ரூ 100 கோடி மட்டுமே.
ரூபாய் நூறு கோடி மட்டும்.

உரிய சட்டங்களை இயற்ற வேண்டும். 1995க்குப் பின்னரான இந்தியாவுக்குப் பொருத்தமான
துறைவாரியான சட்டங்களை இயற்ற வேண்டும்.
அரசமைப்புச் சட்டத்தையும்கூட, புதிய சூழலுக்கு
ஏற்ப முற்றிலும் மாற்றி அமைக்க வேண்டும்.
அல்லது புதிய அரசமைப்புச் சட்டத்தை இயற்ற
வேண்டும். இதெல்லாம் இந்தியாவில் நடக்குமா?
 
 





திருச்சியைச் சுற்றியுள்ள மூன்று கிராமங்களில்
உள்ள 80 ஏக்கர் நிலத்தையும் அந்த நிலத்தில்
உள்ள கட்டிடங்களையும் அடமானம் வைத்துத்தான்
கே என் நேரு கடன் பெற்றுள்ளார்.

இந்த சொத்துக்களை வரும் நவம்பர் 11ஆம் தேதி
ஏலம் விடுகிறது இந்தியன் வங்கி. இது பொது ஏலம்.
யார் வேண்டுமானாலும் ஏலத்தில் பங்கேற்கலாம்.
இணைய தளத்தின் மூலமாக ஆன் லைனில்
ஏலம் நடைபெறும்.

கே என் நேருவை மீறி அவரின் சொத்தை ஏலம்
எடுக்க எத்தனை பேர் முன்வருகின்றனர் என்று
பார்க்கலாம். அடமானம் வைத்த சொத்துக்கள்
ரூ 100 கோடி மதிப்புள்ளவை அல்ல என்று
ரியல் எஸ்டேட் வட்டாரம் தெரிவிக்கிறது.

ஆக, தமிழ்நாட்டின் விஜய் மல்லையாவாக
ஆகி விட்டார் கே என் நேரு!
கே என் நேரு புகழ் ஓங்குக!
விஜய் மல்லையா பாதையைப் பின்பற்றுவோம்!
******************************************************** 
விவசாயம் பொய்த்துப்போய் கடனைத் திரும்பிச்
செலுத்த முடியாத நிலையில் மானத்துக்கு அஞ்சி
விவசாயி தற்கொலை செய்து கொள்கிறான்.
ஆனால் கே என் நேரு அசராமல் இருக்கிறார்.
மக்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டிய
அமைச்சர் இவ்வாறு மோசடியில் ஈடுபடுகிறார்.

அவர் அமைச்சராக இருந்தது கடைசியாக 2011ல்.
அதன் பிறகு இன்றுவரை அமைச்சராக இல்லை.
கிட்டத்தட்ட ஒன்பது வருஷம் அமைச்சராக இல்லை.
எப்படி சம்பாதிக்க முடியும்?

லஞ்ச லாவண்யம், ஊழலுக்கு வாய்ப்பு இல்லாத
ஒருவரிடம் கடனைத் திரும்பிச் செலுத்து என்று
சொன்னால் அவர் என்ன செய்வார், பாவம்!


இதுதான் உண்மை! இதுதான் கள நிலவரம்.
நான் ஒவ்வொரு நாளும் ஏராளமான மாணவர்களைச் சந்தித்து
வருகிறேன். உரையாடி வருகிறேன். நான் மாணவனாக
இருந்த காலத்தில் இருந்து இன்றுவரை இது தொடர்கிறது.

கல்லூரியில் பட்டப் படிப்பு படித்துக் கொண்டிருக்கும்
மாணவர்களின் தமிழறிவு எந்த மட்டத்தில் இருக்கிறது
என்று தெரிந்து வைத்துள்ளேன்.

தினமணியில் வரும் ஒரு நடுப்பக்கக் கட்டுரையை
அப்படியே வாசிக்கச் சொன்னால், தங்கு தடையின்றி
வாசிக்கத் தெரிந்தவர்கள் மிகவும் அற்பமாகவே
உள்ளனர். என்னுடன் ஊடாடும் மாண்வர்களிடம்
அடிக்கடி இவ்வாறு வாசிக்கச் சொல்லி நான்
கேட்பதுண்டு.

களநிலவரத்திற்கு ஏற்ப, எழுதினால்தான் புரியும்.
இல்லையேல் எழுதப்பட்ட விஷயம் நம்மிடமே
தங்கி விடும். நம்மைத்தாண்டி மற்றவர்களிடம்
சென்று சேராது.

..............அப்புறம் கழன்று
கல்லாப் புல்லர்க்கு நல்லோர் சொன்ன
பொருளெனப் போயிற்றன்றே.
.................கம்பர்.........
(சொல்லொக்கும் கடிய வேகச் சுடுசரம்
என்று தொடங்கும் விருத்தம்). ............  


திமுகவில் பலர் அப்படித்தான் உள்ளனர்.
எந்த நேரமும் பாஜகவில் சேரக்கூடிய நிலையில்தான்
திமுகவில் பலர் உள்ளனர். ஏனெனில் எல்லோரும்
ஊழல் பேர்வழிகள்; நில அபகரிப்பில் ஈடுபட்டவர்கள்.
சில நாட்களுக்கு முன்பு கலைஞரின் பேரன்
(செல்வியின் மருமகன்) ஜோதிமணி என்பவர்
ரூ ஒரு கோடி பண மோசடியில் ஈடுபட்டுக்
கைதாகி உள்ளார் என்று செய்தி வந்துள்ளது.
இவர் அநேகமாக பாஜகவில் சேரக்கூடும்.

ஏற்கனவே கலைஞரின் மகன் மு க அழகிரி பாஜகவில்
சேருவதற்காக ஹெச் ராஜாவுடன் பேசி வருகிறார்
என்ற செய்தியும் அனைவரும் அறிந்ததே.


மோசடிப் பேர்வழிகளின் பதவியைப் பறிக்கும் சட்டம்!
------------------------------------------------------------------------------------
சட்டமன்ற நாடாளுமன்ற இந்நாள் முன்னாள்
உறுப்பினர்கள், இந்நாள் முன்னாள் அமைச்சர்கள்
பொதுத்துறை வங்கியில் கடன் வாங்கித் திரும்பிச்
செலுத்தாமல் இருப்பது மோசடியாகக் கருதப்பட்டு
அவர்களின் பதவி உடனடியாகப் பறிக்கப்பட
வேண்டும். ஆயுள் முழுவதும் தேர்தலில் நிற்பதற்குத்
தடை வித்திக்க வேண்டும். இப்படி ஒரு சட்டம்
இன்று நாட்டுக்குத் தேவை.














கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக