சனி, 27 ஜூன், 2015

1) தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியாவில்,
முழுப் பெரும்பான்மை உள்ள ஒரு மாநில அரசை எந்தக்
காரணம் இன்றியும் கலைக்கலாம் என்ற ஷரத்துக்கள்
உள்ள அரசமைப்புச் சட்டத்தைக்கொண்ட இந்தியாவில்,
மாநிலக் கட்சிகள் தங்கள் கட்சியைக்  காப்பாற்றிக்
கொள்வதற்கு, வேறு என்ன வழி இருக்கிறது?
2) 1980இல் திமுக இந்திராவுடன் கூட்டணி வைத்ததை,
மாநிலக் கட்சிகளின் கையறு நிலையில் இருந்துதான்
பார்க்க வேண்டுமே தவிர, ஆளும் வர்க்கத்தின்  புனிதக்
கோட்பாடுகளின் அடிப்படையில் பார்ப்பது தவறு.
**
3) "தன்துணை இன்றால் பகைஇரண்டால் இன்துணையாக்
கொள்க அவற்றுள் ஒன்று" என்கிறார் வள்ளுவர். 1980இல்
கலைஞர் இதைத்தானே செய்தார்! இது எங்ஙனம் தவறு ஆகும்?
4) மனித உரிமைகளின் பாதுகாவலரான மரியாதைக்குரிய
மார்க்ஸ் அய்யா அவர்களே, சர்க்காரியா கமிஷன்
விசாரணையின்போது, சாட்சிகளைக் குறுக்கு விசாரணை
செய்யும் உரிமை திமுகவுக்கு மறுக்கப் பட்டதா இல்லையா?
இது குறித்து மூச்சு விடவும் மறுப்பது ஏன்?
**
5) மத்தியப் பார்ப்பனீய அரசு யாரை வேண்டுமானாலும்
அழிக்கும். அவ்வாறு அழிப்பது அவர்களின் பிறப்புரிமை.
அந்த உரிமையை அங்கீகரிக்கும் பார்ப்பன அடிவருடிகள்,
அழிவில் இருந்து தம்மைக் காத்துக் கொள்வதற்காக
சூத்திர அமைப்புகள் போராடி மீளும்போது, சூத்திர
அமைப்புகளின் மீது புனித அளவுகோலைப் பிரயோகிப்பது
என்ன வகை நியாயம்?
6) திமுகவை ஓர் பலிப்பொருளாக(VICTIM) பார்த்து,
அந்த நிலையில் இருந்து விமர்சிப்பதே நியாயம்.
தங்களின் விமர்சனம் பாதிப்பை ஏற்படுத்தியவனுக்குச்
சாதகமாக உள்ளது. எனவே இது பிற்போக்கானது.
      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக