மார்க்சிய வேடதாரிகளான குட்டி முதலாளித்துவ
மேனாமினுக்கிகள் தங்கள் வரம்பை உணர வேண்டும்!
--------------------------------------------------------------------------------------------
குட்டி முதலாளித்துவ மேனாமினுக்கிகள் ஒரு ஓரமாக
உடகார்ந்து மார்க்சியம் பேசிக்கொண்டு இருக்கட்டும். நமக்கு
ஆட்சேபம் இல்லை. இவர்கள் பொழுதுபோக்கிற்காக
மார்க்சியம் பேசுபவர்கள். தங்கள் பொழுதுகளை
ரம்மியம் ஆக்கிக் கொள்வதற்காக இவர்கள் மார்க்சியம்
பேசுகிறார்கள். இன்னும் பச்சையாகச் சொல்லப் போனால்,
தங்கள் அரிப்பைத் தீர்த்துக் கொள்ள இவர்கள் மார்க்ஸ்
எங்கல்சைப் பயன்படுத்துகிறவர்கள். அவ்வளவே.
**
இந்தக் கழுதைகளுக்கு, சமூக மாற்றம் நோக்கம் அல்ல.
சமூக மாற்றத்துக்காக ஒரு துரும்பைக் கூடத் தூக்கிப்
போட இவர்கள் முன்வர மாட்டார்கள். நடைமுறையில்,
யதார்த்த வாழ்க்கையில் இவர்கள் சுயநலமிக்கவர்கள்.
தங்கள் சொந்த வாழ்க்கைக்கு, தாங்கள் பேசும்
மார்க்சியத்தால், எவ்விதமான பங்கமும் நேர்ந்து விடக்
கூடாது என்று கறாராக இருப்பவர்கள். பசியோடு இருப்பவனுக்கு
ஒரு பத்து ரூபாய் கொடுப்பதற்கு, ஆயிரம் யோசனை
பண்ணுபவர்கள் இந்தக் கீழ்த்தரமான பிறவிகள்
**
இப்படிப் பட்டவர்கள் தங்கள் வரம்பு என்ன என்பதை
உணராமல், மார்க்சியத்தைத் தாங்கள் மொத்தக்
குத்தகைக்கு எடுத்திருப்பவர்கள் போல நடந்து
கொள்ளும்போது, அவர்களைத் தண்டிப்பது அவசியம்
ஆகிறது
**
மார்க்சியம் என்பது நடைமுறையில்தான் (practice)
உயிர் வாழ்கிறது. மார்க்சிய நடைமுறை என்பது சொகுசு
வாழ்க்கையைத் தியாகம் செய்யக் கோருகிறது.
அதிகபட்ச அர்ப்பணிப்பையும் கஷ்ட நஷ்டங்களை
ஏற்றுக் கொள்வதையும் கடமை ஆக்குகிறது.
காலை பத்து மணிக்கு வீட்டை விட்டுப் புறப்பட்டால்,
இரவு பத்து மணி ஆகி விடுகிறது வீடு திரும்ப என்ற
சூழலை மனநிறைவோடும் இயல்பாகவும் ஏற்றுக்
கொள்ளும் மனநிலை வாய்க்கப் பெற்றால் மட்டுமே
மார்க்சியப் பணி செய்ய முடியும்.
**
இதற்கெல்லாம் தயாராக இல்லாமல், வெறுமனே
ஒன்றிரண்டு மார்க்சிய மேற்கோள்களைப் பாராயணம்
செய்து ஒப்பிப்பதன் மூலம், மார்க்சியவாதி என்ற
சமூக அந்தஸ்தைப் பெற முனைகிறார்கள் குட்டி
முதலாளித்துவ அற்பர்கள். இவர்களைத் தோலுரிப்பதும்,
அடக்கி வைப்பதும், நடைமுறையை உயிராகக் கொண்ட
ஒவ்வொரு மெய்யான மார்க்சியவாதிக்கும் கடமை
ஆகிறது.
**
இந்த இயக்கப் போக்கில், அம்பலப் படுத்தப்பட்ட பலர்,
A burnt cat dreads the fire என்பது போல, ஓடிப் போவதும்
ஒளிந்து கொள்வதும் இயற்கையே. இது நாம் சரியாக
இருக்கிறோம் என்ற உண்மையை உணர்த்தும் உரைகல் ஆகும்.
**************************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக