புதன், 10 ஜூன், 2015

தமிழ்நாட்டில், தேசியத் தலைவர் (பிரபாகரன்) இன்னும்
உயிருடன் இருக்கிறார் என்ற பொய் கோலோச்சுகிறது.
நெடுமாறன், வைகோ, மணியரசன், சீமான், தியாகு,
திருமுருகன் காந்தி, கொளத்தூர் மணி, கோவை
ராமகிருஷ்ணன்  இன்ன பிற தமிழ் தேசியப் போலிகள்
இந்தப் பொய்யைத் திரும்பச் திரும்பச் சொல்லி
மக்களை மழுங்கடித்து வருகின்றனர். மோடி அரசும்,
ஜெயலலிதா அரசும் விடுதலைப் புலிகள் மீதான
தடையை மேலும் நீட்டித்து விட்டன.
**
இந்தச் சூழலில், கனிமொழி மீதான ஆனந்தியின்
குற்றச்சாட்டை ஒரு தனித்த நிகழ்வாகப் பார்ப்பதும்,
மொத்தச் சூழலில் இருந்து துண்டித்து விட்டுப்
பார்ப்பதும் தவறாய் முடியும். அண்மையில் ஒரு
தமிழ்த் தொலைக்காட்சிக்கு அளித்த பெட்டியில்,
ஆனந்தி தாம் முன்பு கூறியதை மறுத்துக் கூறி
இருக்கிறார். கனிமொழியைக் கேட்டு சரண்
அடைந்ததாக நான் கூறவில்லை என்று விளக்கம்
அளித்துள்ளார்.
**
இங்குள்ள இந்துத்துவ பார்ப்பன ஆதிக்க சக்திகளின்
கைப்பாவையாய் ஆனந்தி செயல்படுகிறார். அவர்களின்
ஊதுகுழலாய்ச் செயல்படுகிறார். அதன் காரணமாகவே
ஊடகங்களின் கவனிப்பையும் அவர் பெறுகிறார்.
தமது கணவரின் கதி என்ன என்பதை, அவர்
அன்று ராஜபக்சேவிடமும் இன்று மைத்ரிபாலவிடமும்
கேட்கக் கடமைப் பட்டவர். அதை விட்டு விட்டு,
இந்துத்துவ மதவெறி சக்திகளின் கைப்பாவையாய்
அவர் தமிழக அரசியலில் செயல்படுவது தமிழக
மக்களின் நலனுக்கு எதிரானது.
**
எங்கள் மக்களின் நலனுக்கு எதிராகச் செயல்படும்
எவரையும் எதிர்ப்பது எங்களின் பிறப்புரிமை. இந்த
உரிமையில் வேறு எவரும் கைவைக்க முடியாது.
இது குறுகிய தேசியவாதம் என்று கூறுவது சிந்தனைக்
குள்ளத்தனம். குறிப்பான நிலைமைகளில், குறிப்பாக
மார்க்சியத்தைப் பிரயோகிப்பது எங்கள் வேலை.
தமிழ்ச் சூழலை அறியாதவர்கள் எங்களுக்குக்
கட்டளைத் தளபதிகளாகத் தங்களைத் தாங்களே
நியமித்துக் கொண்டு எங்களுக்குக் கட்டளை இட
முயல்வது ஆக்கிரமிப்பு.
--------------------------------------------------------------------------------------     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக