சனி, 6 ஜூன், 2015

1) ஒரு வாக்கியம் கூட எளிமையாக எழுதப் படாத
திரு யமுனா ராசேந்திரன் எழுதிய இக்கட்டுரை எவ்விதத்தில் 
பரிசீலனைக்கு உரியதாக இருக்கும்?
2) ///மார்க்சியத்தின் கோட்பாட்டு அமைப்பிலிருந்து மிகச் சிலவே இன்று எடுத்துக் கொள்ளப்பட முடியும்///// மார்க்சியம் இன்று சிறிதளவுதான் பொருந்தும் 
என்பதுதான் இவ்வாக்கியத்தின் கருத்து. அதை சுற்றி வளைத்துச் 
சொல்வதன் மூலம், குட்டி முதலாளித்துவ விடலை வாசகனுக்கு 
ஒரு பிரமிப்பை  ஏற்படுத்தலாம். வேறு பயன் என்ன?
**
3) "மார்க்சியத்தின் கோட்பாட்டு அமைப்பு" என்ற தொடர் மூலம் 
கட்டுரை ஆசிரியர், மார்க்சியம் வெறும் கோட்பாடு மட்டுமே என்று
சொல்கிறார். உண்மையில் மார்க்சியம் வெறும் கோட்பாடு அல்ல.
மாறாக, அது தத்துவம் ஆகும். (கோட்பாடு வேறு; தத்துவம் வேறு.
தத்துவம் என்பது பல்வேறு கோட்பாடுகளின் தொகுப்பு). 
**
4) மார்க்சியத்தை, அதன் தத்துவ நிலையில் இருந்து இறக்கி,
அதை வெறும் கோட்பாடாக மாற்றுவதற்கு ஒருவர் மிகவும் 
முயற்சி செய்தார். அவர்தான் பிரெஞ்சு சிந்தனையாளர் 
அல்தூசர். ஆனால் தம் முயற்சியில் அவர் தோல்வி அடைந்தார்.
மார்க்சியம் தத்துவமாகவே இன்று நீடிக்கிறது.
**
மார்க்சியம் என்பது அடிப்படை உழைக்கும் மக்களுக்கான 
தத்துவம். அது அவர்களின் மொழியில், அவர்களுக்குப் 
புரியும் விதத்தில் சொல்லப் பட வேண்டும். இந்தப் புரிதல் 
குட்டி முதலாளித்துவ எழுத்தாளர்களுக்கு இருப்பதில்லை.
**
கட்டுரையில், முதலில் எழுவாயைச் சுட்டிய பின்னர் pronoun ஐப் 
பயன்படுத்தலாம். ஆனால் எடுத்த எடுப்பிலேயே 
pronoun வருகிறது. இதை வைத்து என்ன புரிந்து 
கொள்ள முடியும்?
**
 வடிவம், உள்ளடக்கம் இரண்டிலும் பெருங்குறைகளும்,
புதிய வாசகனை நுழைவாயிலிலேயே தடுத்து நிறுத்தி 
விடும் எழுத்து நடையும், நீக்கப்பட்டு, இக்கட்டுரை 
rewrite செய்யப் படுமானால் நல்லது.   
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக