சனி, 27 ஜூன், 2015

மொரார்ஜி தேசாய்-சரண்சிங் தலைமயிலான ஜனதா 
பரிசோதனை படுதோல்வியில் முடிந்தது மட்டுமின்றி 
கோமாளித்தனமாகவும்  உணரப் பட்டது. இரட்டை உறுப்பினர் 
பிரச்சினையை முன்வைத்து ஜனதா கூடாரத்தில் இருந்து 
ஜனசங்கம் குழுவும் விலகியது. இந்நிலையில் ஜனதாவை 
நம்பி இந்திராவை எதிர்ப்பது என்பது மண்குதிரையை நம்பி 
ஆற்றில் இறங்குவது போல் ஆனது.
**
தமிழ்நாட்டில் காமராசர் உயிருடன் இருக்கும் வரை, கட்சி 
முழுவதும் அவரிடம்தான் இருந்தது. காமராசர் 1975 அக்டோபரில் 
மறைந்த உடனேயே, அவரின் கல்லறை மண் காய்வதற்கு 
முன்னரே, மூப்பனார் ஸ்தாபன காங்கிரசை இந்திராகாங்கிரசுடன் இணைத்தார். இதனால் தமிழ்நாட்டில் அதுவரை புறக்கணிக்கப் 
பட்ட சக்தியாக இருந்த இந்திரா காங்கிரஸ் பெரும்பலம் பெற்றது.
**
இதன் விளைவாக, தமிழ்நாட்டில் திமுகவுக்கு எதிராக 
இரண்டு வலுவான கட்சிகள்: 1) அதிமுக, 2) இந்திரா காங்கிரஸ்.
அகில இந்திய அளவில் ஜனதா துண்டு துண்டாக உடைந்து 
போன நிலை. அங்கும் மிருக பலத்துடன் இருக்கும் 
இந்திரா காங்கிரசை எதிர்த்து அரசியல் நடத்த வேண்டும்.
**
இந்நிலையில் ஒரு மாநிலக் கட்சியான திமுக, இரண்டு 
பெரும் பகைகளை எதிர்த்து எவ்வாறு அரசியல் நடத்த 
முடியும்? DMK has to survive. எனவே, கட்சியைக் காப்பாற்றும் 
பொருட்டு, ராஜதந்திர ரீதியிலான சரியான முடிவை 
எடுத்தார் கலைஞர்.
**
இந்திராவின் நெருக்கடி நிலையை ஆதரித்த எம்ஜியார்
பின்னர் மொரார்ஜி தேசாயையும் ஆதரித்தார். பின்னர் 
மொரார்ஜி ஆட்சியைக் கவிழ்த்த சரண்சிங்கையும் 
ஆதரித்தார். இப்படிப்பட்ட எம்ஜியார் இந்திரா காங்கிரசுடன் 
கூட்டணி ஏற்படுத்திக் கொள்ளவும் தயாராக இருந்தார்.   
**
எனவேதான், கலைஞர் சகல அம்சங்களையும் ஆராய்ந்து, 
நேருவின் மகளே வருக நிலையான 
ஆட்சி தருகஎன்ற  முடிவை எடுத்தார். இந்த முடிவை 
விமர்சிப்பவர்கள் பார்ப்பனீய ஆதரவாளர்களாகத் 
தான் இருக்க முடியும்.      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக