சனி, 6 ஜூன், 2015

தலித்துகள், பாட்டாளிகள், விவசாயக் கூலிகள் ஆகிய 
அனைவரையும் இடதுசாரிகள் ஒற்றுமைப் படுத்த வேண்டும் 
என்பதே கட்டுரையின் மையக் கருத்து என்று விளக்கம் 
அளிக்கிறார் தோழர் மகேஷ் ராமநாதன். தமிழில் எழுதப் 
பட்ட, (உரைநடையில் எழுதப்பட்ட) ஒரு கட்டுரைக்கு 
கோனார் நோட்ஸ் போட வேண்டிய அவலத்திலதான் 
கட்டுரையின் லட்சணம் உள்ளது என்பது தற்போது 
எல்லோருக்கும் தெரிந்து விட்டது.
**
தலித்துகளுக்கும் விவசாயக் கூலிகளுக்குமான ஒரு 
கட்டுரை இது. அக்கட்டுரை அவர்களை அமைப்பாக்கும்
எளிய இடதுசாரித் தோழர்களுக்காவது சொந்த வாசிப்பில் 
புரிய வேண்டும் அல்லவா? இப்படி எதிர்பார்ப்பதே தவறா?
**
அடிப்படை உழைக்கும் மக்களிடம் இருந்தும், அவர்களின் 
சிந்தனைப் போக்கில் இருந்தும், முற்றிலுமாகத் தன்னைத் 
துண்டித்துக் கொண்டு விட்ட  ஒருவரால்தான் இப்படி 
ஒரு கட்டுரையை எழுத முடியும்.
**
குவான்டம் இயற்பியலில், ஒரு துகள் ஒரே நேரத்தில்,
இரண்டு இடங்களில் இருக்கிறது, இருக்கும் என்பது 
நிரூபிக்கப் பட்டு விட்டது. அந்தக் குவாண்டம் துகளைப் 
போல, கட்டுரை ஆசிரியரும், ஒரே நேரத்தில், டாட்டாவின் 
இதய சிம்மாசனத்திலும், மார்க்சிய வாசகர்களின் இதய 
சிம்மாசனத்திலும் கொலு வீற்று இருக்கிறார் என்பது 
பாராட்டுக்கு உரியது.       
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக