சனி, 6 ஜூன், 2015

இப்பதிவில் உள்ளடங்கிய கட்டுரை குறித்து,
ஏற்கனவே நாம் கூறியவற்றை திரு மகேஷ் ராமநாதன் 
உறுதி செய்கிறார். கட்டுரையாளரின் கருத்து என்ன,
அவர் மேற்கோள் காட்டும் இன்னொருவரின் கருத்து என்ன,
என்றெல்லாம் எவ்வித வேறுபாடும் புலப்படாமல் எழுதி,
வாசகனுக்குச் சிரமத்தை ஏற்படுத்துவதே எழுத்தாளனின் 
திறமை என்பது  இன்று கோலோச்சும் ஒரு கோட்பாடு.
இது பின்நவீனத்துவ மற்றும் குட்டி முதலாளித்துவ 
எழுத்தாளர்கள் விரும்பிக் கடைப் பிடிக்கும் ஒரு கோட்பாடு.
**
சாம்பாரையும் பாயாசத்தையும் ஒன்றாகக் கலந்து,
"பிரித்துக் குடித்துக் கொள்ளடா நாயே" என்று வாசகனின் 
மீது வீசும் குட்டி முதலாளித்துவத் திமிர்தான் எழுத்தாற்றலின் 
இலக்கணம் என்று ஆகிப் போனது. எனவே இப்படிப்பட்ட 
கட்டுரைகள் வரத்தான் செய்யும். இது உழைக்கும் மக்களுக்கு 
எதிரான மனநிலையின் வெளிப்பாடு.    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக