சனி, 6 ஜூன், 2015

எப்படிச் சொல்ல முடியும், மார்க்கோஸ் அவர்களே, 
எப்படிச் சொல்ல முடியும்? இதில் உங்களின் கவனக் குறைவு 
எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. குறைபாடு மூலக் 
கட்டுரையில்தான் உள்ளது. நிற்க.
**
சிந்தனை முழுக்கப் பின்நவீனத்துவத்தை நிறைத்துக் 
கொண்டு, மார்க்சியக் கட்டுரை போலத் தோற்றம் தர 
வேண்டும் என்ற நோக்கத்துடன் கட்டுரையாளர் 
எழுதும்போது, அந்த நோக்கம் சிதைந்து விடுவது கண்கூடு.
அதுதான் இந்தக் கட்டுரையில் நிகழ்ந்து இருக்கிறது.
**
பின்நவீனத்துவம் சரியானது என்றும் மார்க்சியம் தவறானது 
என்றும் கட்டுரையாளர் கருதுவாரேயானால், அதை 
நேர்மையுடன் ஒப்புக் கொள்வதே முறை. அதை விடுத்து,
பின்நவீனத்துவ உள்ளடக்கமும் மார்க்சிய லேபிளும் 
உடைய கட்டுரை எழுதும்போது, லேபிள் கழன்று 
விழுந்து விடுவது இயற்கையே.
**
கட்டுரையாளர் (யமுனா ராசேந்திரன்) பின்நவீனக் 
கருத்துக்களை முன்வைத்து இருக்கிறார் என்று 
ஒரு தோழரும் (மார்க்கோஸ்), இல்லை இல்லை 
மார்க்சியக் கருத்துக்களை அல்லவா முன்வைத்து 
இருக்கிறார் என்று இன்னொரு தோழரும் (மகேஷ் ராமநாதன்)
கருதுகிற அளவுக்குக் கட்டுரை இரண்டாகத் தன்மையுடன் 
இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்து விடுகிறது.
**
இப்படி எழுதுவதுதான் பின்நவீனத்துவம். கணக்கற்ற 
அர்த்த சாத்தியங்களை உருவாக்கும் எழுத்தே 
பின்நவீனத்துவ எழுத்து. வாழ்க கட்டுரையாளர்!!!!!!!
      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக