சனி, 27 ஜூன், 2015

இருபத்திநாலு மணி நேரம் கூட
இந்திராவை சிறையில் வைக்கத் தெரியாத
முட்டாள் பிரதமர் மொரார்ஜி தேசாயும்
அவர் மூத்திரம் குடித்த கதையும்!
-------------------------------------------------------------------------
நெருக்கடி நிலை முடிவுற்று, 1977இல் நடைபெற்ற தேர்தலில்
இந்திரா காங்கிரஸ் தோல்வி அடிக்கிறது. ஜனதா கட்சி
ஆட்சியைப் பிடித்து மொரார்ஜி தேசாய் இந்தியப் பிரதமர்
ஆகிறார். அவரின் அமைச்சரவையில் சரண்சிங் உள்துறை
அமைச்சர்; ஜெகஜீவன்ராம் பாதுகாப்பு அமைச்சர். இந்திராவை
ரேபரெலித் தொகுதியில் தோற்கடித்த ராஜநாராயணன்
சுகாதாரத்துறை அமைச்சர்.
**
நெருக்கடிநிலைக் கால அத்துமீறல்கள் பற்றி ஆராய்ந்து
முடிவு சொல்ல ஷா கமிஷன் அமைக்கப் படுகிறது.
இந்நிலையில், அக்டோபர் 3, 1977 அன்று இந்திராவைக்
கைது செய்ய உள்துறை அமைச்சர் சரண் சிங் உத்தரவிடுகிறார்.
போலீசார் இந்திராவைக் கைது செய்து சிறையில்
அடைக்கின்றனர்.
**
இந்திரா மீதான குற்றச்சாட்டுகள் மிகவும் மேலெழுந்த
வாரியானவை; நிரூபிக்க இயலாதவை. எனவே டெல்லி
உயர்நீதிமன்றம் இந்திராவை நிபந்தனையின்றி
விடுதலை செய்கிறது. 24 மணி நேரத்துக்குள் இந்திரா
விடுதலை ஆகிறார்; அக்டோபர் 3இல் கைது செய்யப்பட்ட
இந்திரா அக்டோபர் 4இல் விடுதலை ஆகிறார்.
மொரார்ஜி தேசாயின் ஜனதா அரசு ஒரு கோமாளி அரசு
என்று நிரூபணம் ஆகிறது. இந்திரா மீது  மக்களுக்கு
அனுதாபம் ஏற்படுகிறது.
**
மொரார்ஜி தேசாய் உட்பட ஒவ்வொரு தலைவரையும்
குறைந்தது பத்தொன்பது மாத காலம் சிறை வைத்த
இந்திராவை, ஒன்றரை லட்சம் பேரைக் கைது செய்து
வருடக் கணக்கில் சிறை வைத்த இந்திராவை, இந்தக்
கோமாளிகளால் இருபத்திநாலு மணி நேரம் கூட
சிறையில் வைக்க முடியவில்லை.
**
மத்திய அரசின் கைது உத்தரவை நீதிமன்றம் கண்டித்து,
இந்திராவை நிபந்தனை இன்றி விடுதலை செய்த உடனேயே
உள்துறை அமைச்சர் சரண்சிங் ராஜினாமா செய்திருக்க
வேண்டும். பிரதமர் தேசாய் அவரிடம் ராஜினாமாவைக்
கோரிப் பெற்று இருக்க வேண்டும். ஆனால், இது எதுவும்
நடைபெறவில்லை.
**
யார் இந்த சரண்சிங்? மொரார்ஜி ஆட்சி கவிழ்ந்த உடன்,
இவர்தான் பிரதமர் ஆனார். கொடிய சாதி வெறியர்!
ஜாட் சாதி வெறியர்! நம்முடைய ராமதாஸ் எல்லாம்
இவரின் சாதி வெறிக்கு உறைபோடக் காணாதவர்.
ஆக, இவ்வாறு ஜனதா ஆட்சி என்பது குறைந்த காலத்திலேயே
கோமாளிகளின் கூடாரம் என்று தன்னை நிரூபித்தது.
இவர்களை நம்பி இந்திராவை எதிர்ப்பது என்பது
மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவது போலானது.
**    
மொரார்ஜியைப் பற்றி எழுதுகிறபோது, அவர் மூத்திரம்
குடித்த கதையைப் பற்றி எழுதாமல் விட்டால், அது
நேர்மை ஆகாது. சற்றேறக் குறைய நூறு வயது வரை
வாழ்ந்து மறைந்த மொரார்ஜி தேசாய் மூத்திரம்
குடிக்கும் பழக்கம் உடையவர். மாட்டு மூத்திரம் அல்ல;
மனுஷ மூத்திரம். அவரின் சொந்த மூத்திரம். மூத்திரம்
குடிக்காமல் ஒருநாள் கூட அவர் இருந்தது இல்லை.
**
மொரார்ஜி அமைச்சரவையில் சுகாதார அமைச்சராக
இருந்த ராஜநாராயணனும் மூத்திரம் குடிக்கும்
பழக்கம் உடையவரே. தங்களின் மூத்திரம் குடிக்கும்
பழக்கத்தைப் பகிரங்கமாக அறிவித்தவர்கள் இவ்விருவரும்.
**
பாஜக ஆட்சியின்போதுதான் மூத்திரம் குடிப்பது பிரபலம்
ஆகிறது என்று கருதுவது தவறு. இதிலும் காங்கிரஸ்தான்
முதல் இடத்தைத் தட்டிச் செல்கிறது.
********************************************************************
         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக