திங்கள், 22 ஜூன், 2015

கிளிநொச்சி வீழ்ச்சி, முல்லைத்தீவு வீழ்ச்சி,
 அனந்தபுரம் பின்னடைவு ஆகிய இவை எல்லாம்
எவ்வாறு கற்பனை ஆக முடியும்? கண்ணெதிரே நிகழ்ந்தவை
எவ்வாறு கற்பனை ஆக முடியும்? புலிகளின் அதிகாரபூர்வ
மற்றும் ஆதரவு இணையதளங்களைப் பார்க்கவும்.
**
2009 சனவரி முதல் ஈழப்போரை தொடர்ந்து அவதானிக்கும்
எவருக்கும் களநிலைமைகள் எப்படி இருந்தன என்பது
தெரியும். ஹெலிகாப்டர் மூலம் தேசியத் தலைவரின்
குடும்பத்தைக் காக்க மேற்கொண்ட முயற்சிகளை
துரோகிகள் காஸ்ட்ரோவும் நெடியவனும் முறியடித்தனர்.
(காஸ்ட்ரோ பின்னர் இறந்து விட்டார்).
**
அனந்தபுரம் தாக்குதலை மிகை மதிப்பீடு செய்த தேசியத்
தலைவர், கே.பி.யின் சமாதான வரைவு உடன்பாட்டையும்
நிராகரித்து விட்டார். இந்நிலையில், முள்ளிவாய்க்காலில்,
மிகச்சிறிய நிலப்பகுதியில், தப்பிக்கவோ பின்வாங்கவோ
வழியில்லாத நிலையில் சிக்கிக் கொண்ட பிறகு,
கூண்டோடு சரணடைவு என்ற முடிவைத் தவிர, வேறு
என்ன வாய்ப்பு புலிகளுக்கு இருந்தது?
**
துப்பாக்கிகளை மௌனிக்கச் செய்கிறோம் என்று
கூற வேண்டிய அளவு நிலைமை இருந்ததா, இல்லையா?
இதெல்லாம் உண்மையா இல்லையா?
**
கடைசியாக, தேசியத்தலைவரைக் காப்பாற்றும்
பொருட்டு, போட்டு அம்மானும் சூசையும் மேற்கொண்ட
ஒரு முயற்சியும் பலன் அளிக்காத நிலையில்,
தேசியத் தலைவர் அவர்கள் 'அனைவரும் சரணடைவது"
என்ற முடிவை எடுத்தார். இந்த முடிவில் இருந்து
அவருக்குக்கூட விதிவிலக்குக் கிடையாது.
**
முள்ளி வாய்க்காலில் சிக்கி இருந்த 22000 மக்களின்
நலன் கருதித் தேசியத் தலைவர் அவர்கள் இந்த
முடிவை மேற்கொண்டார்.   
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக