வெள்ளி, 26 ஜூன், 2015

நெருக்கடிநிலை சிறு குறிப்புத் தருக.
---------------------------------------------------------
1975 ஜூன் 26-1977 மார்ச் 21 (21 மாதங்கள்)
------------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி 
-------------------------------------------------------------------------
1) நெருக்கடி நிலையின்போது உயிர் வாழும் உரிமை
கிடையாது என்று மத்திய அரசின் சார்பாக நீதிமன்றத்தில்
தெரிவிக்கப் பட்டது.
2) ஹேபியஸ் கார்பஸ் மனு போட  முடியாது.
3) தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்ய முடியாது.
**
4) பத்திரிகைத் தணிக்கை மிகவும் கடுமையாக
நடைமுறைப் படுத்தப் பட்டது. இதன் பொருள்
என்னவெனில், கைதானவர்களின் எண்ணிக்கையையோ
அவர்களின் பெயரையோ எந்தப் பத்திரிகையும்
வெளியிட முடியாது.
**
5) நெருக்கடி நிலையை எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்றிய
ஒரே மாநில அரசு திமுக அரசுதான். இதனால் கலைஞரின்
ஆட்சி சனவரி 30, 1976இல் கலைக்கப் பட்டது, சட்டமன்றத்தில்
திமுகவுக்கு மூன்றில் இரண்டு பங்கிற்கு மேல் பெரும்பான்மை 
இருந்த போதிலும்..
6) 1976 மார்ச்சில் புதுச்சேரி மாநிலத்தில் இருந்த
திமுக ஆட்சி கலைக்கப் பட்டது, அறுதிப் பெரும்பான்மை
இருந்த போதிலும்.
**
7) நாடு முழுவதும் ஒன்றரை லட்சம் பேர் சிறையில்
அடைக்கப் பட்டனர். நாடு முழுவதும் நரவேட்டை,
சித்திரவதை, படுகொலைகள் என பாசிசம் பேய்த்தாண்டவம்
ஆடியது.  
**
8) கொடிய நெருக்கடி நிலையைத் தீவிரமாக ஆதரித்த 
கட்சிகள் அதிமுகவும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் 
மட்டுமே. டெல்லிக்கே நேரில் சென்று நெருக்கடி நிலைக்குத் 
தம் ஆதரவைத் தெரிவித்தவர் எம்.ஜி.ஆர்.  இந்தியக் 
கம்யூனிஸ்ட் கட்சி (CPI) அகில இந்திய அளவில் 
நெருக்கடி நிலையைத் தீவிரமாக  ஆதரித்துப் பரப்புரை 
செய்தது. 
**
9) தமிழ்நாட்டில் அன்று காங்கிரஸ் கட்சியில் இருந்த 
பழ நெடுமாறனும் வாழப்பாடி ராமமூர்த்தியும் நெருக்கடி 
நிலைக் காலத்தில் வெறியாட்டம் ஆடினார்கள். CPI கட்சியின் 
தா.பாண்டியன், கல்யாணசுந்தரம் போன்றோர், திமுக 
மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் அணிகளைக் காவல் 
துறைக்குக் காட்டிக் கொடுத்துக் கொண்டு இருந்தனர்.
**
10) நக்சல்பாரி இயக்கம் கொடூரமாக  ஒடுக்கப் பட்டது.
11) கேரளத்தில் அப்போது காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் கூட்டணி 
ஆட்சியில் கம்யூனிஸ்ட் (CPI) முதல்வராக அச்சுதமேனன் 
இருந்தார். (அச்சுதமேனன் வேறு; இப்போது உள்ள 
அச்சுதானந்தன் வேறு.)
**
12) இந்தியாவிலேயே நெருக்கடி நிலைக் காலத்தில் 
அதிகமான கொடுமைகளையும் சித்திரவதைகளையும் 
அரங்கேற்றியவர் CPI அச்சுதானந்தன். நக்சல்பாரிப் 
புரட்சியாளர் ராஜன், அச்சுதமேனனின் காவல்துறையால் 
சித்திரவதை செய்து கொல்லப் பட்டார்.
**
13) நெருக்கடி நிலையின்  போது, நாடாளுமன்ற 
மக்களவையின் பதவிக் காலத்தை ஆறு ஆண்டுகள் 
என்று மாற்றி, அரசியல் சட்டத்தைத் திருத்தினார் இந்திரா.
அதாவது ஒரு லோக் சபா எம்.பி.யின் பதவிக் காலத்தை  
ஆறு ஆண்டுகள் என்று ஆக்கினார். தற்போதும் முன்பும் 
ஐந்து ஆண்டுகளே.
**
14) நெருக்கடி நிலை இந்திய வரலாற்றின் இருண்ட கறை
படிந்த அத்தியாயம். தேர்தல் அறிவித்ததை ஒட்டி, இந்திரா 
நெருக்கடி நிலையை  விலக்கிக் கொண்டார்.
------------------------------------------------------------------------------------------
தொடரும் (நேரமும் வாய்ப்பும் இருந்தால்)
***************************************************************

       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக