புதன், 17 ஜூன், 2015

திரு ஸ்நோடன் அவர்களுக்கு,
"ஆனந்தபுரம் சுற்றிவளைப்பின்போது, மன்னார் கட்டளைத்
தளபதி பானு, காலில் சுட்டுக் கொண்டு வெளியேறியதை அடுத்து,
பொட்டு அம்மான் அவர் மீது சந்தேகம் கொண்டார். அவர் சிங்களப்
படைத்தளபதிகளுடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது.
அதனால் அவர் தண்டிக்கப் பட்டார்".
**
இவ்வாறு ஒரு பின்னூட்டத்தில் தாங்கள் எழுதியுள்ளீர்கள்.
தண்டிக்கப் பட்டார் என்பதன் பொருள் கொல்லப் பட்டார்
என்பதுதான். ஆனால், தங்களின் கூற்று எங்கும் எவராலும்
உறுதி செய்யப்படவில்லை (not corroborated).
**
ஆனந்தபுரம் நிகழ்வு ஏப்ரல் 5, 2009 அன்று முடிந்து போனது.
தங்களின் கூற்று உண்மை என்றால், ஏப்ரல் மாதத்திலேயே
பானு இறந்து பொய் இருக்க வேண்டும். ஆனால், தரவுகளின்படி,
பானு மே 17-18 இறுதிப்போரில்தான் இறந்தார் என்று
தெரிய வருகிறது. எனவே தயவு செய்து உண்மை என்ன
என்பதைத் தெளிவு படுத்த வேண்டும்.
**
தொந்தரவுக்கு மன்னிக்கவும். தங்களின் மறுமொழிக்காகக்
காத்திருக்கிறேன். நன்றி,  
       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக