திங்கள், 8 ஜூன், 2015

அஜினோ மோட்டோவையும் தடை செய்யக்  கோரிக்கை!
அஜினோ மோட்டோ என்றால் என்ன?
------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-------------------------------------------------------------------------------------------
அஜினோ மோட்டோ என்பது ஒரு நிறுவனத்தின் பெயர்.
இந்த நிறுவனம் ஒரு ஜப்பானிய நிறுவனம். இது டோக்கியோவில் 
உள்ளது. உலகின் பெரிய நாடுகளில் இதற்குக் கிளைகள் உள்ளன.
நூறாண்டு அனுபவம் உள்ள நிறுவனம் இது.
**
அஜினோ மோட்டோ (ajinomotto) என்ற பெயரால் மக்கள் 
குறிப்பிடுவது சமையலில், குறிப்பாக அசைவ சமையலில்,
சேர்க்கப் படும் ஒரு உப்பை. இது சுவையூட்டியாகக் 
கருதப் படுகிறது.
**
அஜினோமோட்டோ என்பது ஜப்பானிய மொழிப்பெயர்.
ரசாயன ரீதியாக, இது மோனோ சோடியம் குளுட்டாமேட் 
(monosodium glutamate) ஆகும். நாம் சமையலில் பயன்படுத்தும் 
உப்பு" சோடியம் குளோரைடு"(sodium chloride) ஆகும்.
அது போன்றதொரு ஒரு உப்பு (salt) தான் இந்த 
அஜினோ மோட்டோ. சுருக்கமாக இது MSG என்று குறிப்பிடப் 
படுகிறது.
**  
இது குளுடாமிக் அமிலத்தின் சோடியம் உப்பு ஆகும்.
(sodium salt of glutamic acid). இது அமினோ அமில வகையைச் சேர்ந்தது.
தக்காளி, காளான் ஆகியவற்றில் இது அதிகம்.
**        
ஆரம்பத்தில் சீன உணவுகளில் மட்டுமே அஜினோமோட்டோ 
பயன்படுத்தப் பட்டது. தற்போது பல்வேறு பாக்கெட்டில்
அடைத்து விற்கப்படும் உணவுகளிலும் (packed food) இது 
சேர்க்கப் படுகிறது.
**
தலைவலி, நரம்புக் கோளாறு, தைராய்டு சார்ந்த நோய்கள்,
உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு 
இந்த அஜினோமோட்டோ காரணமாக அமைகிறது என்று 
உலகெங்கும் உள்ள நுகர்வோர் அமைப்புகள் குற்றம் 
சாட்டுகின்றன.
**  
எனவே இந்திய அரசு ஒரு நிபுணர் குழுவை அமைத்து,
இந்தியாவில் விற்கப்படும் அஜினோமோட்டோ கலந்த 
உணவுப் பண்டங்களைப் பரிசீலித்து, அனுமதிக்கப்பட்ட 
அளவுக்கு மேல் இது கலந்து இருக்குமேயானால், 
அஜினோ மோட்டோவைத் தடை செய்யலாம்.
************************************************************
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக