இரண்டாம் முறையாக இந்திராவுக்குச் சிறை!
இம்முறையும் கோட்டை விட்ட மொரார்ஜி தேசாய்!
விமானக் கடத்தலும் காங்கிரசின் கயமையும்!
-----------------------------------------------------------------------------------
கொடிய பாசிஸ்ட் சர்வாதிகாரியான இந்திரா காந்தி
நெருக்கடி நிலைப் பாசிச வெறியாட்டத்துக்காக,
சிறையில் அடைக்கப் பட்டு தூக்கில் இடப் பட்டு
இருக்க வேண்டும். பாக்கிஸ்தானில் ஜுல்பிகர் அலி
புட்டோ தூக்கில் இடப்பட்டது போல், இந்திராவும்
தூக்கில் போடத் தக்கவரே.
**
ஆனால், கோமாளி மொரார்ஜி தேசாய் தலைமையிலான
கோமாளி ஜனதா அரசு இந்திராவைச் சட்டத்தின் முன்
நிறுத்தித் தண்டிக்கத் தவறி விட்டது. கோமாளிகள்
மொரார்ஜி-சரண்சிங் மேற்கொண்ட, இந்திராவைச்
சிறையில் அடைக்கும் முதல் முயற்சி கருச்சிதைவு
ஆனதும், இருபத்திநாலு மணி நேரத்துக்குள் இந்திராவை
நீதிமன்றம் விடுதலை செய்து விட்டதையும் எமது
முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தோம்.
**
இரண்டாவது முயற்சியும் தோல்வி அடைந்ததையும்,
சுவரில் எறிந்த பந்து போல ஜனதா அரசையே திருப்பித்
தாக்கியதையும் இப்போது பார்ப்போம்.
**
இந்திரா காந்தி நாடாளுமன்றத்தின் உரிமையை மீறி விட்டார்
என்று மக்களவையில் தீர்மானம் (breach of privilege motion)
கொண்டு வரப்பட்டது. உரிமைமீறல் நிரூபிக்கப் பட்டு
உள்ளதால், நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடியும் வரை
இந்திராவுக்குச் சிறை என்று தீர்மானம் டிசம்பர் 19, 1978 அன்று
மக்களவையில் நிறைவேறியது. (இத்தீர்மானத்துக்கு ஆதரவு:279;
எதிர்ப்பு: 138, வாக்கெடுப்பில் பங்கேற்காதோர்: 37). இதைத்
தொடர்ந்து திகார் சிறையில் இந்திரா அடைக்கப் பட்டார்.
**
இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, மாநில சட்டமன்றங்கள்
மற்றும் நாடாளுமன்றத்துக்கு சிறைத் தண்டனை வழங்கும்
உரிமை உண்டு. ஆனந்த விகடன் ஆசிரியர் பாலசுப்பிரமணியன்
அவர்களுக்குத் தமிழக சட்டமன்றம் சிறைத் தண்டனை
விதித்ததை வாசகர்களுக்கு நினைவு படுத்துகிறேன்.
**
1978 டிசம்பர் 19 அன்று சிறைக்குச் சென்ற இந்திரா, டிசம்பர் 26
அன்று இரவு விடுதலை ஆனார். ஒரு வாரம் மட்டுமே சிறையில்
இருந்தார். கொடிய மனித உரிமை மீறல் குற்றங்களைச் செய்த
இந்திராவை சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டிக்க வக்கற்ற
ஜனதா அரசு, நாடாளுமன்றத் தீர்மானம் மூலம் அவரை
ஒரு வாரம் மட்டுமே சிறைக்கு அனுப்பியது நாடெங்கும்
எதிர்விளைவுகளை ஏற்படுத்தியது.
**
இந்திராவின் கைதைக் கண்டித்து, காங்கிரஸ் குண்டர்கள்
நாடெங்கும் வன்முறை வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்து
விட்டனர். இந்திரா சிறை சென்ற மறுநாளே, 1978 டிசம்பர் 20
அன்று, போலா பாண்டே, தேவேந்தர் பாண்டே என்ற இரண்டு
காங்கிரஸ் குண்டர்கள், லக்னோவில் இருந்து டெல்லி சென்ற
இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை (IC 410) கடத்தினர்.
விமானத்தில் 132 பயணிகள் இருந்தனர். கடத்தல்காரர்கள்
பின்னர் சரண் அடைந்தனர்; பயணிகள் விடுவிக்கப் பட்டனர்.
**
சீக்கிய நண்பர்களால் பின்னர் இந்திரா படுகொலை செய்யப்
பட்டார். அவர் நீண்டநாள் வாழ்ந்து இருப்பாரேயானால்.
மீண்டும் ஒரு நெருக்கடி நிலையைக் கொண்டு வந்து
இருப்பார். நல்லவேளையாக நமக்கு அந்த வாய்ப்பு இல்லை.
HISTORY REPEATS ITSELF BECAUSE MEN REPEAT THEIR
MISTAKES.-----OSCAR WILDE----
***********************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக