விஷத்தை எப்படிக் குடித்தாலும் சாவு உறுதி!
இயங்கியல் தவறானது என்பதற்கான நிரூபணம்!
HERE IT IS PROVED THAT DIALECTICS IS WRONG!
------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்

அது ஒரு பாசிசக் கொலை முகாம். மூன்று கைதிகளும்
ஒரு பாசிஸ்டும் இருக்கிறார்கள். இந்த மூன்று கைதிகளும்
கொல்லப்பட வேண்டும். கொல்ல வேண்டிய வேலை
பாசிஸ்டுக்கு. கொலையாளியிடம் கொடிய விஷம் இருக்கிறது.
**
குளிர்பதனப்பெட்டியில் உறைய வைத்து, திட நிலையில்
(SOLID) உள்ள விஷத்தை ஒரு கைதிக்குக் கொடுக்கிறார்
பாசிஸ்ட். இன்னொரு கைதிக்கு, விஷத்துடன் சிறிது தண்ணீர்
சேர்த்து, திரவ நிலையில் (LIQUID) உள்ள விஷத்தைக்
கொடுக்கிறார். மூன்றாவது கைதிக்கு, விஷத்தை
ஆவியாக்கி, வாயு நிலையில் (GAS) உள்ள விஷத்தை
முகரச் செய்கிறார். விஷம் அருந்திய மூவரும்
இறந்து போகிறார்கள்.
**
திடநிலை, திரவ நிலை, வாயு நிலை இப்படி எந்த நிலையில்
இருந்தாலும், விஷம் விஷம்தான். அது ஆளைக்
கொல்லும்தான். விஷத்தின் பண்பு கொல்லுவது. அந்தப்
பண்பு மாறப் போவதில்லை. இதை மனதில் பதித்துக்
கொள்ளுங்கள். தற்போது, இயங்கியலுக்கு வருவோம்.
**
இயங்கியலுக்கு குறைந்தது 2500 ஆண்டு கால வரலாறு
உண்டு. கால வளர்ச்சிக்கு ஏற்றவாறு இயங்கியலும்
வளர்ந்து கொண்டே வந்தது. கிரேக்க அறிஞர்கள்
உருவாக்கி வளர்த்த இயங்கியலை, ஜெர்மானிய அறிஞர்
ஹெகல் அதன் அதிகபட்ச வளர்ச்சிக்கு இட்டுச் சென்றார்.
நாம் இங்கு ஹெகலின் இயங்கியலைப் பரிசீலனைக்கு
எடுத்துக் கொண்டு, அது தவறானது என்பதை
நிரூபிக்கிறோம்.
**
இயங்கியலின் மூன்று விதிகளில் ஒன்று, "அளவு மாற்றம்
பண்பு மாற்றத்துக்கு இட்டுச் செல்லும்" என்பது. இதைப்
பரிசீலிப்போம். (THE QUANTITATIVE CHANGE LEADS TO A
QUALIITATIVE CHANGE).
**
ஹெகல் மட்டுமின்றி, அவருக்கு முந்திய கிரேக்க
அறிஞர்களும் இந்த விதிக்கு ஒரு உதாரணம்
தருவார்கள். இயங்கியல் குறித்த எல்லாப்
பாடங்களிலும் (ALL TEXTS) தவறாமல் இடம் பெற்று
இருக்கும் இந்த உதாரணம். அது இதுதான்.
**
சாதாரண வெப்பநிலையில் தண்ணீர் திரவமாக
இருக்கிறது. தண்ணீரைச் சூடு படுத்தும்போது, வெப்பம்
அதிகரித்து, ஆவியாகிறது. வெப்பம் குறையும்போது,
தண்ணீர் உறைந்து பனிக்கட்டி ஆகி விடுகிறது. ஆக,
வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க அல்லது குறையக் குறைய
தண்ணீரின் பண்பு மாறி விடுகிறது. அதாவது, வெப்பத்தின்
அளவு மாறும்போது, தண்ணீரின் பண்பு மாறி விடுகிறது.
ஆக அளவு மாற்றம் பண்பு மாற்றத்துக்கு இட்டுச் செல்கிறது.
**
இந்த உதாரணம் கூறும் கருத்து சரிதானா? சரியில்லை என்று
அடித்துக் கூறுகிறது அறிவியல். வெப்பத்தின் அளவு
எவ்வளவுதான் மாறினாலும், அதனால் தண்ணீரின் பண்பு
மாறுவதில்லை. தண்ணீர் திட நிலையில் இருந்தாலும்,
திரவ நிலையில் இருந்தாலும், வாயு நிலையில் இருந்தாலும்
அதனால் தண்ணீரின் பண்பு மாறுவதில்லை. எனவே, அளவு
மாற்றம் பண்பு மாற்றத்துக்கு இட்டுச் செல்வதில்லை.
**
இந்த இடத்தில், இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறிய
கதையை நினைவு கொள்ளவும். விஷத்தை எந்த நிலையில்
உட்கொண்டாலும் விஷம் கொல்லும். திடம், திரவம், வாயு
என்ற நிலைகளால் விஷத்தின் பண்பு மாறுவதில்லை. எனவே,
அளவு மாற்றம் பண்பு மாற்றத்துக்கு இட்டுச் செல்வதில்லை.
The chemical properties of water are INDEPENDENT of its state.
**
ஹைட்ரஜன் மூலக்கூறை எடுத்துக் கொள்ளுவோம். இதில்
இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் உள்ளன. (Hydrogen molecule
contains two atoms of hydrogen). இந்நிலையில் தொடர்ந்து
ஹைட்ரஜன் அணுக்களை அதிகரித்துக் கொண்டே போனால்,
H3 ,H4, H5, H6, H7.... என்றெல்லாம் பொருட்கள் உண்டாகி
விடுவதில்லை. அளவு மாற மாற, புதிய பொருள்,
புதிய பண்புகளைக் கொண்ட பொருள் உருவாவதில்லை.
ஏனெனில், அணுக்கள் ஒன்றிணைந்து புதிய பொருள்
உருவாவது என்பது VALANCY எனப்படும் சேர்க்கைத் திறன்
என்பதைப் பொறுத்தது. எனவேதான், H3 என்ற தனிமம்
உண்டாவதில்லை; உண்டாக முடிவதில்லை. இது போல்
இன்னும் ஆயிரம் உதாரணங்கள், விளக்கங்கள் தர இயலும்.
**
ஹெகல் ஒரு கருத்துமுதல்வாதி. ஹெகலின் இயங்கியல்
என்பது கருத்துக்களின் தோற்றம், மாற்றம், இயக்கம்,
வளர்ச்சி ஆகியவற்றைப் பற்றிக் கூறும் கோட்பாடு. இது
கருத்துக்களின் இயக்கத்தைப் பொருத்தமட்டில் சரியானதே.
ஆனால், இயற்கையின் இயக்கம், மாற்றம், வளர்ச்சி
ஆகியவற்றைப் பொறுத்த மட்டில் இயங்கியல் சரியானது
அல்ல. இக்கட்டுரை இதை நிரூபிக்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக