வியாழன், 4 ஜூன், 2015

ராஜபக்சேவை மகாத்மா ஆக்கிய 
சீனக் கம்யூனிஸ்ட் தலைவர் டெங் சியோ பிங்!
தியனான்மென் படுகொலையில் உயிர்நீத்த 
மாணவர்களுக்கு அஞ்சலி! (1989 ஜூன் 04)
-------------------------------------------------------------------------
இருபத்தாறு ஆண்டுகளுக்கு முன்பு, 1989, ஜூன் 4ஆம் 
நாளன்று, சீனாவில், பெய்ஜிங் நகரில் உள்ள,
தியனான்மென் சதுக்கத்தில் போராட்டத்தில் 
ஈடுபட்ட சீன மாணவர்கள், தொழிலாளர்கள், 
பத்திரிகையாளர்கள் உட்பட 50000 பேர் சுட்டுக் 
கொல்லப்பட்டனர். சீன அதிபரும் சீனக் கம்யூனிஸ்ட் 
கட்சித் தலைவருமான டெங் சியோ பிங் உத்தரவின் 
பேரில் சீன ராணுவம் இப்படுகொலையைச் செய்தது.
**
மாணவர் போராட்டத்தை அடக்குவதற்காக, ராணுவ 
டாங்கிகள் (tanks) செயலில் ஈடுபடுத்தப் பட்டன.
எல்லையில் போர் நடக்கும்போதுதான், இதுவரை 
உலகம் முழுவதும் டாங்கிகள் பயன்படுத்தப் 
பட்டன.  உள்நாட்டில் மாணவர்களின் போராட்டத்தை 
அடக்குவதற்கு, ராணுவ டாங்கிகளை, கவச 
வாகனங்களைப் பயன்படுத்திய ஒரே நாடு சீனாதான்.
அதாவது கம்யூனிஸ்ட் நாடான சீனா.
கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு கட்சி ஆட்சி முறை தான் 
அன்றும் இன்றும் சீனாவில் நடந்து வருகிறது.
**
தற்போது சென்னையில் ஐ.ஐ.டி.யில் மாணவர் படிப்பு 
வட்டத்தைத் தடை செய்ததை எதிர்த்துப் பல்வேறு 
மாணவர் அமைப்புகள் போராடி வருகிறார்கள். 
போராடும் மாணவர்களை ஒடுக்க, மோடி அரசு,
எல்லையில் நிற்கும் ராணுவ டாங்கிகளை, ஐ.ஐ.டி
வளாகத்துக்குள் கொண்டு வந்து இறக்கி, ஐ.ஐ.டி 
மாணவர்களையும் போராட்டக் காரர்களையும் 
சுட்டுத் தள்ளுவதாகக் கற்பனை செய்து பாருங்கள்.
அப்போதுதான், டெங் சியோ பிங்கின் கொடூரம்,
குரூரம், மிருகவெறி, காட்டுமிராண்டித்தனம் எல்லாம் 
தெரியும்.
**
ஈழப்போரின் இறுதியில் ராஜபக்சேவின் சிங்கள ராணுவம் 
50000 ஈழத் தமிழர்களைக் கொன்றதாக ஐ.நா கூறுகிறது.
(உண்மையில் ஒன்றரை லட்சம்). உலக வரலாற்றைப் 
படிக்கும் எந்த மாணவனும், டெங் சியோ பிங்கைப் 
படித்த பிறகு, ராஜபக்சேவை மகாத்மா என்று 
கொண்டாடுவானா, மாட்டானா?
**
ராஜபக்சே பதவி இழந்தான்; ஊழல் வழக்கில் சிறைக்குப் 
போக இருக்கிறான். ஆனால், ராஜபக்சேவை விடக் 
கொடிய டெங் சியோ பிங் கடைசி வரை, சாகும் வரை,
பதவியில் இருந்து, சுகம் அனுபவித்து விட்டு, 1997இல் 
தன 92ஆவது வயதில்  நிறைவாழ்வு வாழ்ந்து செத்தான்.
எந்தத் தண்டனையையும் அனுபவிக்கவில்லை.
**
ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டு செத்துப் போனான்.
முசோலினி நடுரோட்டில் சுட்டுக் கொல்லப்பட்டான்.
ஆனால் டெங் கொண்டாடப் படுகிறான்.
**
உலக வரலாறு கண்டும் கேட்டும் இராத, மகாக் கொடிய 
மனிதகுல விரோதியான டெங் சியோ பிங், உலகக் 
கம்யூனிசத்தின் ஒப்பற்ற தலைவனாம். நல்லது,
நாமும் டெங்கை வாழ்த்துவோம்!
**
டெங் சியோ பிங் ஜிந்தாபாத்!
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஜிந்தாபாத்!!
ஐம்பதாயிரம் மாணவர்களைப் படுகொலை செய்த 
டெங் சியோ பிங் ஜிந்தாபாத்!!!     
*************************************************************             
   
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக