கிளிமூக்கு அரக்கன்
விடுதலைப்புலிகளை,
1.காங்கிறஸ்காரர்களுப்பிடிக்காது. (ராஜீவ் காந்தி உயிரோடு இருந்திருந்தால் இந்து முஸ்லீம் கலவரங்கள் வந்திருக்காது, நாடு இன்னும் சுபிட்சமாகவும் அமைதியாகவும் இருந்திருக்கும்)
2. அதிமுக , சொல்லவே வேண்டாம். பிரபாகரனை துக்கிலிடவேண்டும் என்று ஜெ. சட்டமன்றத்தில் சொன்னபொழுது மேஜை தட்டியவர்கள் அதிமுகவினர்.தமிழகத்தின் பெரிய கட்சியான அதிமுகவின் ஒரு இரண்டாம் கட்ட அடிமையாவது நேரிடையாக பிரபாகரனை பெருமையாக பேசியதைப் பார்த்திருக்கிறீர்களா ?
3. வேதவிற்பன்னர்களின் ஊடகங்களுக்கு விடுதலைப்புலிகள் எப்பொழுதுமே பயங்கரவாதிகள்.
4. மார்க்சிய கம்யூனிஸ்டுகளுக்கு, கேட்கவே வேண்டாம். காரல்மார்க்ஸ் ஸ்டாலின் படம் போடாத யாரும் போராளிகள் இல்லை.
தமிழகத்தில் நிலைமை இப்படியிருக்க விடுதலைப்புலிகளை தமிழகத்தில் விசுவாசமாக ஆதரித்த, இன்னும் மனசீகமாக ஈழத்தை நேசிக்கும் ஆட்களில் பெரும்பகுதியினர் திமுகவினர். களநிலைமை இப்படியிருக்க, வரலாறும் தெரியாமல் அரசியலும் தெரியாமல் ஈழத்தவர் பத்திரை மாட்டுத்தங்கம், ஈழம் பற்றி பேசினால் மோட்சம் என்று நினைத்துக்கொண்டு, திமுகவை மட்டும் குறை சொல்லிக்கொண்டிருந்தால், ஈழப்போராட்டம் தமிழகத்தில் மிகப்பெரும் ஆதரவை இழக்க நேரிடும்.
எனக்கே, இனப்படுகொலை நீதி விசாரணை இதைப்பற்றி எல்லாம் எழுதவேண்டும் , திருமுருகன் காந்தி, சீமான் உள்ளிட்ட கள்ளத்தமிழ்த் தேசியவாதிகள் கண்டுகொள்ளாத அகதி முகாம்களின் நிலையை பற்றி எழுதவேண்டும் என்ற விருப்பமெல்லாம் உண்டு. ஆனால் எழுதினால் என்னவாகும், கொஞ்சம் கூட நன்றி விசுவாசம் இல்லாமல் "கொருனாநிதி எப்போ சார் சாவாரு" அப்படின்னு வந்து கமென்ட் போடுவார்கள் ஈழத்தவர்களும் ஈழ பிஸ்கட் சாப்பிடுபவர்களும். நுனிக்கிளையில் உட்கார்ந்து கொண்டு அடிக்கிளையை வெட்டுவதில் தமிழர்கள் வல்லவர்கள்.
ஈழப்போராட்டத்தை அடுத்தகட்ட இன்டலக்சுவல் பாதைக்கு நகர்த்த உதவப்போகும் திமுகவினரை காரணமே இல்லாமல் ஆதங்கத்திற்கு உட்படுத்தினால், குறித்து வைத்துக்கொள்ளுங்கள், 4 ,5 ஆண்டுகளில் ஈழப்போராட்டம் பற்றி பேச தமிழ்நாட்டில் ஆளிருக்காது. 91 - 96 ஆம் ஆண்டுகளில் ஊடகங்கள், ஜெ.வின் மேலான பயத்தில் அடங்கி ஒடுங்கியிருக்க கலைஞரின் முரசொலிதான் விடுதலைப்புலிகளின் செய்திகளை அதிகமாக வெளியிட்டது.
வரலாறு இப்படியிருக்க 91 திரும்பினால், ஈழப்போராட்டத்தை மறந்துவிட வேண்டியதுதான்.