பக்குடுக்கை நன்கணியார் பாடலின் பொருள்:
------------------------------------------------------------------------
ஓர் ஊரில் காணும் மூன்று காட்சிகளை இப்பாடலில்
புலவர் விவரிக்கிறார்.
காட்சி-1: ஒரு வீட்டில் சாவுப் பறையோசை கேட்கிறது.
தலைவன் இறந்து விட்டான். தலைவி அழுது புலம்புகிறாள்.
**
காட்சி-2: இன்னொரு வீட்டில் திருமணம் நிகழ்கிறது.
மங்கள முழவின் ஓசை மகிழ்வு ஊட்டுகிறது. கணவனைக்
கூடப் போகும் பெண்கள் கூந்தலில் மலர் சூடுகிறார்கள்.
**
காட்சி-3: பிறிதொரு வீட்டில் கணவரைப் பிரிந்து வாழும்
மனைவியர் பிரிவாற்றாமை காரணமாகத் தாரை தாரையாய்க்
கண்ணீர் வடிக்கின்றனர்.
**
இம்மூன்று காட்சிகளையும் கண்ணுறும் புலவர்,
மகிழ்ச்சியும் துயரமும் இவ்வுலகில் ஒருசேர நிலவுவதைச்
சுட்டிக் காட்டுகிறார். இவ்வுலகைப் படைத்தவன் இவ்வாறு
படைத்து விட்டான் என்கிறார். இவ்வுலகம் கொடியது என்கிறார்.
**
இதுதான் உலகின் இயல்பு என்பதால், துயரம் தரும்
நிகழ்வுகளை ஒதுக்கி விட்டு, இனிமை தரும் நிகழ்வுகளை
மட்டுமே கணக்கில் கொள்ள வேண்டும் என்கிறார் புலவர்.
------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக