வியாழன், 25 ஜூன், 2015

இந்திய முதலாளித்துவம் என்பது பிறவிப் பரத்தை. நீண்டகாலம்
பத்தினியாக வாழ்ந்து விட்டு, அண்மையில்தான் சோரம்
போனது போல, வர்ணிப்பது  உண்மையல்ல. குரோனி
முதலாளியம் வருவதற்கு முன்புவரை, எல்லாம்
ஒழுங்காக இருந்தது போலவும், குரோனி வந்த பின்னரே,
எல்லாம் கெட்டுப் போனது போலவும் கூறுவது
ஏற்கத் தக்கதல்ல.
**
ஐரோப்பிய சமூகத்தில் சுதந்திர பூர்ஷ்வா வர்க்கம் இருந்தது.
தடையற்ற சந்தை, தடையற்ற வர்த்தகம் எல்லாம் இருந்தன.
இந்தியாவில் அப்படியா? ஏகாதிபத்தியம், நிலப்பிரபுத்துவம்
இரண்டுக்கும் இணக்கமான முதலாளித்துவம் அல்லவா
இங்கு இருந்தது!
**
முதல் இந்தியப் பொதுத் தேர்தல் (1952) முதல், இன்று வரை
முதலாளிகளின் பணத்தினால்தானே அரசியல் கட்சிகள்
ஜீவிக்கின்றன! ஆலை முதலாளிகளிடம் சென்று பணம்
வாங்காத அரசியல் கட்சிகள் உண்டா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக