திங்கள், 21 மார்ச், 2016

கணக்கின் விடை!
-----------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------
(இன்று 20.03.2016 ஞாயிறு காலையில் போடப்பட்ட  பதிவைப் பார்க்கவும்)
------------------------------------------------------------------------------------------------------------------
கொடுக்கப் பட்ட மூன்று எண்களும் பித்தகோரசின் மூவெண்கள்
(Pythagorean triplets) ஆகும்.  4961இன் வர்க்கம் 2,46,11,521 ஆகும்.
6480இன்  வர்க்கம் 4,19,90,400 ஆகும். இவ்விரண்டையும் கூட்டினால்
6,66,01,921 வருகிறது. இந்த 6,66,01,921 என்பதுதான் 8161இன்
வர்க்கம் ஆகும். இப்போது பித்தகோரஸின் தேற்றப்படி,
4961 squared plus 6480 squared is equal to 8161 squared என்பது
தெளிவாகி விட்டதல்லவா?
**
நாம் கொடுத்த க்ளூ இதைத் தெளிவாகச் சுட்டுகிறது.
8, 15, 17 ஆகிய எண்களை க்ளூவில் கொடுத்து இருந்தோம்.
இவையும் பித்தகோரஸின் மூவெண்களே. 8 squared plus 15 squared is equal to
17 squared. (64+225 = 289)


அப்படியா!

எவரும் விடை சொல்லவில்லை. மேலும் கணக்கிற்கு ஆதரவும்
இல்லை. எனவே விடையை  எழுதி இந்தக் கணக்கை முடிவு செய்யத்
தீர்மானித்தேன்.


நன்றி தங்கள் அக்கறைக்கு. தங்களின் தொழில் CIVIL Constructionஆ?


இதுகுறித்து அறிவியல் ஒளி ஏட்டில் நான் எழுதியுள்ள
பழைய கட்டுரையைப் படிக்கவும். இது குறித்து எனது முந்தைய
பதிவுகளைப் படிக்கவும். தங்களின் பின்னூட்டத்தில்
கொடுத்திருக்கும், பிழைகள் நிறைந்த தவறான கருத்துக்களை
உள்ளடக்கிய செய்திக்கு ஆயிரம் முறை மறுப்புத் தெரிவித்து
உள்ளேன். அதைத் தவறு என்று நிரூபித்து உள்ளேன். தற்போது அவற்றை மறுபிரசுரம் செய்ய நேரமில்லை.
முடிந்தால் நாளை மறு பிரசுரம் செய்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக