செவ்வாய், 22 மார்ச், 2016

தேர்தல் குறித்து
கவிக்கோ அப்துல் ரகுமானின் கவிதை!
------------------------------------------------------------------
புறத்திணைச் சுயம்வர மண்டபத்தில்
போலி நளன்களின் கூட்டம்
கையில் மாலையுடன்
குருட்டுத் தமயந்தி.
------------------------------------------------------------------
இப்புதுக் கவிதையை இயற்றிய கவிக்கோ
தமிழ் இலக்கியங்களை ஆழ்ந்து கற்றவர்.
புகழேந்திப் புலவரின் நளவெண்பாவை
ஆழ்ந்து கற்காமல் இப்படியொரு கவிதையைப்
படைக்க இயலாது.

போலி நளன்களை விலக்கி, மெய்யான நளனை
எவ்வாறு கண்டு பிடித்தாள் தமயந்தி என்று
விளக்குகிறார் புகழேந்திப் புலவர்.

கண்ணிமைத்தலால் அடிகள் காசினியில் தோய்தலால்
வண்ண மலர்மாலை வாடுதலால்-- ....................
நறுந்தாமரை விரும்பும் நன்னுதலே யன்னாள்
அறிந்தாள் நளன்தன்னை யாங்கு.

குறிப்பு: பொருள் தெரியாதோர் தமிழறிந்தோரிடம்
கேட்டு அறிந்திடுக.  
------------------------------------------------------------------------------------

விழித்திமையார் நின்ற நிலை என்ற ஈற்றடி கொண்ட
குரலை ஈண்டு ஒப்பு நோக்குக.
       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக