புதன், 23 மார்ச், 2016

விஜயகாந்த் எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும்
அவரைத் தோற்கடிக்க ஜெயலலிதா உத்தரவு!
----------------------------------------------------------------------------------
வெற்றி வாய்ப்பு உள்ளவர் எந்தக் கட்சி வேட்பாளராக
இருந்தாலும், அவருக்கு நமது வாக்குகளை அளித்து
விஜயகாந்த்தைத் தோற்கடிக்க வேண்டும் என்று
ஜெயலலிதா தம் கட்சியினருக்கு உத்தரவு பிறப்பித்து
உள்ளார்.

இதே உத்தரவை பாஜகவின் ஹெச் ராஜாவும்,
பாமகவின் அன்புமணியும் பிறப்பித்து உள்ளனர்.
உதாரணமாக, விஜயகாந்த்தை எதிர்த்து நிற்கும்
பல வேட்பாளர்களில், திமுக வேட்பாளருக்கு வெற்றி
வாய்ப்பு இருந்தால், பாமக மற்றும் பாஜக கட்சியினர்
திமுக வேட்பாளருக்குத் தங்கள் வாக்குகளை அளித்து
விஜயகாந்த்தைப் படுதோல்வி அடையச் செய்வார்கள்.

ஒருவேளை விஜயகாந்த்தை எதிர்க்கும் வேட்பாளர்களில்
அதிமுக வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருந்தால்
பாஜக, பாமக கட்சியினர் தங்கள் வாக்குகளை அதிமுக
வேட்பாளருக்கு அளிப்பதன் மூலம் விஜயகாந்த்தைப்
படுதோல்வி அடையச் செய்வார்கள்.

இந்தத் திட்டத்திற்கு நாம் தமிழர் கட்சித் தலைவர்
சீமானும் ஒப்புதல் அளித்துள்ளார்.
ஆக விஜயகாந்த்தின் தோல்வி உறுதி செய்யப்பட்டு விட்டது.
----------------------------------------------------------------------------------------------------
கோஷம்


கூட்டணி உடன்பாடு கையெழுத்தானதுமே பிரேமலதா
தமது குடும்ப ஜோதிடரிடம் கருத்துக் கேட்டுள்ளார்.
அவர் 131 தான் ராசி என்று சொல்லி உள்ளார். எனவே
பிரேமலதா 131 தொகுதி என்று தன்னிச்சையாக அறிவித்து
விட்டாராம்.

மக்கள் நலக் கூட்டணியை அதை உருவாக்கிய வைகோவே
கலைத்து விட்ட பிறகு, இனி இந்த அணியின் பெயர் கேப்டன்
விஜயகாந்த் அணி என்று வைகோவே அறிவித்த பிறகு,
நீங்கள் இன்னும் மக்கள் நலக் கூட்டணி என்று சொல்லக் கூடாது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக