செவ்வாய், 22 மார்ச், 2016

ஜவஹிருல்லாவுடன் வைகோ பேச்சுவார்த்தை!
மானம் கெட்டவர் யார்? தீர்ப்பளிக்க முடியாமல்
சாலமன் பாப்பய்யா கலக்கம்!
-------------------------------------------------------------------------------
மனிதநேய மக்கள் கட்சி அதிமுகவைத் தவிர்த்து விட்டு
திமுகவுடன் கூட்டணி வைத்தது குறித்து வைகோவைக்
கடுமையாகக் கண்டித்துள்ளார் ஜெயலலிதா. வைகோவின்
மெத்தனமே இதற்குக் காரணம் என்று வைகோவை
ஜெயாவும் சசியும் கடுமையாகச் சாடியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து ஜவஹிருல்லாவை மீண்டும் அதிமுக
கூட்டணிக்கு அழைத்து  வருவதாக வைகோ சசிக்கு
சத்தியம் செய்து கொடுத்துள்ளாராம். இதன் பிறகு
நடராசனைத் தொடர்பு கொண்ட வைகோ, அவரின்
ஆலோசனையின் பேரில் ஜவஹரில்லாவிடம்
பேசி வருகிறார்.

திமுக கூட்டணியில் மமகவுக்கு ஒரு இடம் ஒதுக்கப்
பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் இரண்டு இடங்களைப்
பெற்றுத் தருவதாக வைகோ ஜவஹரில்லாவிடம்
வாக்குறுதி அளித்துள்ளார்.

ஜவஹரில்லா ஒன்றும் கொள்கைக் கோமான் அல்ல.
ஒன்றிரண்டு  சீட்டுக்காக  மலம் தின்னக் கூடியவர்
என்பதை நாடே அறியும். நடராசனின் திட்டப்படி,
1) இரண்டு சீட்டுகளைக் கொடுத்து மமகவை அதிமுக
கூட்டணிக்கு வரவழைப்பது,  2) வந்தவுடன் சீட்டுத்
தராமல் இழுத்தடிப்பது என்ற நிலையை ஏற்படுத்துவது.
அதன்  பிறகு,ஜவஹரில்லா மீண்டும் திமுகவுக்கு ஓடுவார்.
அங்கு போனால், கலைஞர் இதயத்தில் மட்டும் இடம் கொடுப்பார்.

எனவே மீண்டும் வேறு எங்காவது ஜவஹரில்லா ஓடுவார்.
கடைசியில் பாஜகவில் தமிழிசை ஐந்து எலும்புகளைத்
தருவார்.அதைக் கவ்விக் கொண்டு ஜவஹரில்லா
பெருமையோடு நகர் வலம் வருவார். இது நடக்க வேண்டும்
என்று நடராசன் வைகோவுக்கு அறிவுறுத்தி உள்ளாராம்.

மானம் கெட்டவர் யார், வைகோவா ஜவஹரில்லாவா
என்பதில் தீர்ப்பு வழங்க முடியாமல் சாலமன் பாப்பய்யா
கலங்கிப் போய் இருக்கிறாராம்.
**********************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக