சனி, 5 மார்ச், 2016

நளினி விடுதலையில்  சிக்கல் ஏன்?
---------------------------------------------------------
1) ஆயுள் தண்டனை என்பதன் பொருள் ஆயுள் முழுவதும்
சிறையில் இருப்பதுதான் என்று உச்சநீதிமன்றம் அண்மையில்
தீர்ப்பு அளித்துள்ளது.

2) எனினும், மத்திய மாநில அரசுகள் தண்டனைக் குறைப்பை
வழங்கலாம் என்றும் தீர்ப்பு கூறுகிறது.

3) ராஜீவ் கொலை வழக்கு மத்திய புலனாய்வு அமைப்பு
விசாரித்த வழக்கு என்பதால் மத்திய அரசுதான் தண்டனைக்
குறைப்பை வழங்க முடியும் என்று உச்சநீதிமன்றம்
தீர்ப்பு வழங்கி உள்ளது.

4) எனவே இவ்விஷயத்தில் மத்திய அரசின் ஒப்புதல்
இல்லாமல் மாநில அரசால் எதுவும் செய்ய இயலாது
என்பதே சட்டப்படியான நிலைமை.
-------------------------------------------------------------------------------------- 

சஞ்சய் தத் மீதான வழக்கு அனுமதி பெறாமல் துப்பாக்கி
வைத்திருந்த வழக்கு. எந்தக் கொலை வழக்கிலும்
சஞ்சய் தத் கைது செய்யப்படவில்லை. சஞ்சய்தத் நளினி
ஒப்பீடு பொருத்தமற்றது. மேலும் அத்தகைய ஒப்பீடு
நளினியின் விடுதலையை பலவீனப் படுத்தும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக