ஞாயிறு, 6 மார்ச், 2016

நளினியின் விடுதலை என்பது தமிழ்ச் சமூகத்தின்
கோரிக்கையாக இல்லை! சராசரித் தமிழன் நளினியின்
விடுதலையைக் கோரவில்லை!
-------------------------------------------------------------------------------------
12 மணி நேர பரோலில் வந்த நளினி தமது விடுதலைக்கு
ராகுல் காந்தி குரல் கொடுக்க வேண்டும் என்றார்.
அப்பனைக் கொன்று விட்டு மகனிடம் இரக்கத்தை
யாசித்தார். அத்தோடு நின்றாரா, இல்லையே.

பிரியங்கா காந்தியின் மீது கடும் தாக்குதல் தொடுத்து
ஜூனியர் விகடன் இதழுக்கு பேட்டி கொடுத்தார்.
எல்லோரிடமும் இரக்கத்தை யாசிக்க வேண்டிய நிலையில்
இருக்கும் நளினி, ஒரு அரசியல்வாதியைப் போல.
நடந்து கொண்டார்.

இதனால் அவர் மீது ஒரு சிலருக்கு இருந்த கொஞ்ச நஞ்ச
இரக்கமும் முடிவுக்கு வந்தது. 

நளினியின் விடுதலை என்பது தமிழ்ச் சமூகத்தின்
கோரிக்கையாக இல்லை. சராசரித் தமிழன் நளினியின்
விடுதலையைக் கோரவில்லை. இதை நளினி உணர
மறுப்பதால் அவருக்கு மட்டுமே தீமை.

விடுதலை ஆனதும், புலிகளின் தயவில் லண்டன், பாரிஸ்.
சுவிட்சர்லாந்தில் காத்திருக்கும் கோடீஸ்வர வாழ்க்கையைக்
கனவு காணும் நளினி, புறநிலை யதார்த்தத்தை அறிந்தும்
புரிந்தும் நடந்து கொள்ள வேண்டும்.

மத்தியில் யார் ஆண்டாலும் (பாஜக, காங்) இவர்களை
விடுதலை செய்யப் போவதில்லை. மத்திய அரசின்
ஒப்புதல் இல்லாமல் மாநில அரசால் இவர்களை
விடுவித்து விட முடியாது. இதுதான் மெய்ம்மை.
***********************************************************

ஆணவத்தோடு நடந்து கொள்கிறார் நளினி;
தமது விடுதலை உறுதியாகி விட்டது என்ற
போலி நம்பிக்கையின் காரணாமாக திமிராகப் பேசுகிறார் நளினி
என்று தமிழ்ச் சமூகம் உணர்ந்து கொண்டு விட்டது.



சீமான் மற்றும் நெடுமாறனின் கைப்பாவையாக இருக்கும் வரை
நளினிக்கு விடுதலை என்பது இல்லை. இதை நளினி புரிந்து
கொண்டால் நல்லது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக