வெள்ளி, 18 மார்ச், 2016

சாதி ஆணவப் படுகொலைகளுக்கு
ஆணவம் மட்டும் காரணம் அல்ல!
-----------------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
------------------------------------------------------------------------------
சாதி ஆணவப் படுகொலைகளுக்கு வலுவான பொருளியல்
அடித்தளம் உண்டு. வெறும் ஆணவத்தால்  மட்டுமே
படுகொலைகள் நிகழ்த்தப் படுவதில்லை.

கலைஞர் முதல்வராக இருந்தபோது பெண்ணுக்குச் சொத்துரிமை
வழங்கும் சட்டத்தைக் கொண்டு வந்தார். பெண்ணுக்குச் சொத்தில்
சமஉரிமையை நிலைநாட்டினார். 

இதைத் தமிழ்ச் சமூகம் ஏற்கவில்லை என்பதுதான் உண்மை.
சொத்தில் பெண்ணுக்குச் சமஉரிமை என்ற கோரிக்கையே
மக்களால் எழுப்பப் படாதபோது, கலைஞர் தம் சொந்த அரசியல்
நிலைபாட்டில் இருந்து  சமஉரிமை வழங்கியதை தமிழ்ச்
சமூகம் ஜீரணிக்கவில்லை.

பெற்றோர் உடன்படாத சாதி கடந்த திருமணங்களில், பெண்
வீட்டை விட்டு வெளியேறி, வேறு சாதி இளைஞனை மணம்
புரியும்போது, குடும்பத்தின் சொத்தும் பெண்ணுடன் சேர்ந்து
வெளியேறி விடுமே என்ற பதற்றம்தான் படுகொலைகளுக்கு
வித்திடுகிறது.

குடியிருப்பதற்கு ஒரு சிறிய வீடு, விவசாயம் பண்ண நாலு
மரக்கால் விதைப்பாடு என்று வைத்திருக்கக் கூடிய
மிகச் சிறு அளவிலான சொத்துடைமைக் குடும்பங்களில்,
சாதி கடந்த திருமணத்திற்காக பெண் வீட்டை விட்டு
வெளியேறும்போது, தங்கள் வாழ்வாதாரமான வீடும் நிலமும்
பறிபோய் விடும் என்ற பெற்றோரின் அச்சமே மூர்க்கத்
தனமான எதிர்ப்புக்குக் காரணமாய் அமைகிறது.

தமிழ்ச் சமூகத்தில் மக்கள் குடும்பமாகவும் சாதியாகவும்
வர்க்கமாகவும் வாழ்கிறார்கள். குடும்பம், சாதி, வர்க்கம்
ஆகிய முறைகளில் (சிஸ்டம்) இருந்து துண்டித்துக்
கொண்டோ, விடுபட்டோ வாழ்வது இச்சமூகத்தில்
சாத்தியமில்லை.



    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக