விஸ்வநாதன் ஆனந்த் தோற்று விட்டார்!
ஆனந்த்துக்காக நாங்கள் அழுகிறோம்!
--------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------
உலக சதுரங்க சாம்பியனாக நார்வே நாட்டு இளம் வீரர்
மாக்னஸ் கார்ல்சன் 2013 நவம்பர் முதல் இருந்து வருகிறார்.
இவ்வாண்டு 2016 நவம்பரில் அமெரிக்காவில் உலக சாம்பியன்
போட்டி நடைபெற உள்ளது.
இதில் நடப்பு சாம்பியனான கார்ல்சனை எதிர்த்து
விளையாடுவது யார் என்பதைத் தீர்மானிக்கும்
Candidates Tournament மாஸ்கோவில் நடந்து வருகிறது.
எட்டு வீரர்கள் பங்கு பெறும் 14 சுற்றுகளைக்
கொண்ட (double round robin) இப்போட்டி இன்று (28.03.2016)
நிறைவுற்றது.
இதில் ரஷ்யாவின் இளம் வீரர் செர்ஜி கர்ஜகின்
8.5 புள்ளிகளுடன் முன்னிலை பெற்று Challengerஆக
வெற்றி பெற்றார். இவ்வாண்டு நவம்பரில் இவரே
கார்ல்சனை எதிர்த்து விளையாடுவார்.
ஈற்றயல் சுற்று வரை (penultimate round), அதாவது 13ஆவது
சுற்று வரை வெல்லப்போவது யார் என்பதைத் தீர்மானிக்க
இயலவில்லை. செர்ஜி, கரௌனா, ஆனந்த் ஆகிய
மூவருக்கும் இடையில் டைபிரேக்கர் ஆட்டங்களை நடத்த
வேண்டி இருக்கும் என்ற சூழல் நிலவியது. இறுதிச் சுற்றில்
ஆனந்த் டிரா செய்தார் (7.5 புள்ளிகள்). செர்ஜி -கரௌனா
ஆட்டத்தில் கரௌனா தோற்றார்(7.5 புள்ளிகள்); செர்ஜி
வெற்றி பெற்று challenger ஆனார் (8.5 புள்ளிகள்).
1990இல் பிறந்த செர்ஜிக்கு தற்போது 26 வயதுதான் ஆகிறது.
46 வயதிலும் ஆனந்த் இவரைப் போன்ற இளம் வீரர்களுடன்
ஈடு கொடுக்கிறார் என்பது அசாதாரணமானது.
முன்னாள் உலக சாம்பியன் வாசெலின் டோபலோவ்
இன்னமும் இந்தச் சுற்றிலும் விளையாடினார். அதுபோல்
ஆனந்த்தும் இன்னும் ஓரிரு challenger போட்டிகளில்
பங்கேற்கலாம். அல்லது தமது ஓய்வை அறிவிக்கலாம்.
அடுத்தடுத்து வரும் challenger போட்டிகள் இளம் வீரர்களால்
நிரம்பி வழியும். இளம் இருபதுகளிலும் பிந்தைய
இருபதுகளிலும் உள்ள வீரர்களுடன் ஆனந்த் ஈடு கொடுத்து
நிற்பது சுலபமல்ல என்பது ஆனந்த் உட்பட அனைவருக்கும்
தெரியும். ஆனந்த் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
என்றாலும் கண்களில் கண்ணீர் திரையிடுவதை மறைக்க
முடியவில்லை.
---------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக