செவ்வாய், 8 மார்ச், 2016

அகதி முகாம்களில் ஈழத் தமிழ் அகதிகள்!
சொந்த நாட்டுக்குத் திரும்புவதே தீர்வு!
-----------------------------------------------------------------
தமிழ்நாட்டில் 100க்கும் மேற்பட்ட அகதி முகாம்களில்
ஒரு லட்சம் ஈழத் தமிழர்கள் அகதிகளாக உள்ளனர்.
1983 ஜூலை இனக்கலவரம் தொடங்கி பல்வேறு காலக்
கட்டங்களில் இவர்கள் தமிழகத்தில் வந்து குவிந்தனர்.

அகதி முகாம்களை மிகவும் கறாரான, கண்டிப்பு மிகுந்த,
உளவுப்பிரிவான கியூ பிரிவின் கீழ் இயங்கும் அமைப்புகளாக
உருவாக்கியவர் அன்றைய முதல்வர் ராமச்சந்திர மேனன்.
ஈழ அகதிகளால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெடுகிறது
என்பதாலும் அதைத் தவிர்க்கவும் காவலும் கண்காணிப்பும்
மிகுந்த அகதி முகாம்களை ஏற்படுத்தினார் மேனன்.

1986இல் சென்னை சூளைமேட்டில் அன்று அங்கு தங்கியிருந்த
ஈழத்தமிழ்க் கயவன் டக்ளஸ் தேவானந்தா என்பவன் தெருவில்
போகும்  மக்கள் மீது துப்பாக்கியால் சுட்டான். இதில் திருநாவுக்கரசு
என்ற தமிழ் இளைஞர் இறந்து போனார்.

இன்றுவரை இந்தக் கயவன் டக்லஸ் தேவானந்தாவை
இந்தியச் சட்டங்களால் ஒரு மயிரும் பிடுங்க முடியவில்லை.
இதைப் போல கணக்கற்ற வன்முறை வெறியாட்டங்களை
தமிழகத்துக்கு வந்த ஈழத் தமிழ் அகதிகள் நடத்தினர். இவற்றைக்
கணக்கில் கொண்டு அகதி முகாம்கள் கண்காணிப்பு
மிகுந்தவையாக அமைக்கப் பட்டன.

தற்போது ஈழத்தில் போர் முடிந்து விட்டது. அமைதி திரும்பி
விட்டது. தமிழ் மாகாணத்தில் (வடக்கு) தமிழர்களின் கட்சி
ஆட்சி நடத்துகிறது. தமிழர்தான் இலங்கை எதிர்க்கட்சித்
தலைவராக இருக்கிறார். எனவே அகதிகளாகத் தமிழகம்
வந்த ஈழத்தமிழர்கள் தாய்நாட்டுக்குச் செல்லுவதே
சரியானது. இப்பிரச்சினைக்கு இதுவே சரியான தீர்வு ஆகும்.
------------------------------------------------------------------------------------------------------  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக