புதன், 30 மார்ச், 2016

புரட்சிகர கொழுந்தியாள்களும் மார்க்சியமும்!
--------------------------------------------------------------------------
இந்தியாவின் மிகப் பெரிய மாநிலம் உ.பி.
இங்குள்ள சட்டமன்றத் தொகுதில 403.
2012 தேர்தலில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில்
224 தொகுதிகளில் வென்று முதல்வர் ஆனார் அகிலேஷ் யாதவ்.
முதல்வராகும் பொது இவரின் வயது 38 மட்டுமே.

இவரின் மனைவி டிம்பிள் யாதவ் மக்களவையில் எம்.பி.யாக
இருக்கிறார். மக்களவைப் புரட்சிக்கு இவர் பொறுப்பேற்றுள்ளார்.

அகிலேஷ் யாதவ்வின் கொழுந்தியாள் அபர்ணா யாதவ்.
உ.பி அரசியலிலும் ஆட்சி அதிகாரத்திலும் இவர் மிக
முக்கியப் புள்ளி. உ.பி  சட்டமன்றத்திற்கான  இடைத் 
தேர்தலில் அபர்ணா யாதவ் போட்டி இடுகிறார். இதற்கான
டிக்கட்டை கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வழங்கி
விட்டார். அபர்ணா யாதவ்வின் வெற்றி உறுதி. அவர்
அமைச்சராவதும் உறுதி.

உ.பி.யைப் போல தமிழ்நாட்டு அரசியலிலும் ஒரு
புரட்சிகர கொழுந்தியாள் இன்றைய நிலையில்
முக்கியத்துவம் பெற்று வருகிறார். தமிழகத்தின் லெனின்
என்று போற்றப்படும் விஜயகாந்த்தின் மச்சான் சுத்தீஷ்
அவர்களின் கொழுந்தியாள் ரம்யாதான் அவர்.
(சான்றிதழ் பிரகாரம் இவரின் பெயர் நமக்கு சரியாகத்
தெரியவில்லை, ஜோதிடப்படியான பெயரையே
அனைவரும் குறிப்பிடுவதால் நாமும் அப்படியே குறிப்பிட வேண்டியதாகிறது) 

சுத்தீஷின் கொழுந்தியாளுக்கு அரசியலில் பிரகாசமான
எதிர்காலம்  இருப்பதாக மார்க்சியக் கட்சியின்
சித்தாந்த்தச்  சிங்கம் எச்சூரி கருத்துத் தெரிவித்துள்ளார்.

வைகோ போன்ற சிறந்த பார்லிமென்டேரியன்களை,
முத்தரசன், ஜீயார், திருமா போன்ற பழுத்த
அரசியல்வாதிகளை கட்டி வைத்து அடிக்கும் வல்லமை
வாய்ந்தவர் சுத்தீஷ் என்பதை  நாடறியும். அப்படிப்பட்ட
சுத்தீஷின் கொழுந்தியாள் தமிழகத்தில் ஒரு மாற்று
அரசியல் புரட்சி நடத்த இருக்கிறார் என்ற செய்தி
மார்க்சியத்தின் வளர்ச்சிக்கு நல்லதொரு உதாரணம்
ஆகும் என்கிறாராம் தா பாண்டியன்.

காரல் மார்க்சின் லூயி போனபார்ட்டின் பதினெட்டாம்
புருமேர்  என்ற நூலைப் படித்துப் புரிந்து கொண்டு
இருப்பவர்களால் நமது கட்டுரையை எளிதில்
புரிந்து கொள்ள முடியும்.

நடப்பது ஏகாதிபத்திய யுகம் என்றார் லெனின்.
புரட்சிகர கொழுந்தியாள்களின் யுகம் என்கின்றனர்
மார்க்சிஸ்ட் தலைவர்கள். எப்படியோ, சுத்தீஷின்
கொழுந்தியாள் தயவில் கம்யூனிசம் வளர்ந்தால் சரி
என்கின்றனர் ஆப்டிமிஸ்ட்டுகள்.
----------------------------------------------------------------------------------------- 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக