ஞாயிறு, 20 மார்ச், 2016

தொடர்பு என்ன? கூறுக!
----------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-------------------------------------------------
மூன்று எண்களைக் கீழே கொடுத்துள்ளேன்.
4961, 6480, 8161.
இவற்றுக்கு இடையிலான தொடர்பைக் கூற இயலுமா?

இன்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது கி.மு 1500
காலக்கட்டத்தில் வாழ்ந்த பாபிலோனியர்கள் மேற்கூறிய 
எண்களுக்கு இடையிலான தொடர்பை அறிந்து இருந்தார்கள்.

மானுட சமூகம் இன்றுள்ளது போல் அன்றில்லை. அன்று 
காட்டு விலங்காண்டிகளாகத்தான் நம் முன்னோர் வாழ்ந்தனர்.
எனினும் அவர்களின் கணித அறிவு வியப்பிற்கு உரியது.

நல்லது,ஐயா, சொல்லுங்கள்.
எளிய தொடர்பு; ஆனால் உறுதி மிக்க தொடர்பு.
விடை எழுதுக!

குறிப்பு: 8, 15, 17 ஆகிய எண்களுக்கு இடையிலான 
தொடர்பைக் கருதுக.

-------------------------------------------------------------------------------------------  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக