புதன், 9 மார்ச், 2016

இந்தியா முழுவதும் மேற்கு வங்க பார்முலா!
மார்க்சிஸ்ட் கட்சி அதிரடித் திட்டம்!
மேற்கு வங்க பார்முலாவுக்கு தா பாண்டியன் வரவேற்பு!
-----------------------------------------------------------------------------------------
கட்சி ஆரம்பித்த நாள் முதலாக ஒருவரை ஒருவர்
எதிர்த்துக் கொண்டிருந்த காங்கிரசும் மார்க்சிஸ்ட் கட்சியும்
எதிர்வரும் 2016 சட்டமன்றத் தேர்தலில் மேற்கு வங்கத்தில்
லட்சியக் கூட்டணி அமைத்து விட்டன. சோனியா காந்தியும்
சீத்தாராம் எச்சூரியும் ஒரே மேடையில் தேர்தல் பிரச்சாரம்
செய்ய இருப்பதாகச் செய்திகள் வருகின்றன.

மம்தாவின் திரணமூலுக்கு எதிரான வாக்குகள் சிதறிப்
போகாமல் பாதுகாக்கும் பொருட்டும், இரு கட்சித்
தொண்டர்களிடையே (காங், மார்க்சிஸ்ட்) ஒற்றுமையையும்
தோழமை  உணர்வையும் ஏற்படுத்தும் பொருட்டும்
"மேற்கு வங்க பார்முலா" (West Bengal Formula) என்ற ஒரு
திட்டத்தை மாநில மார்க்சிஸ்ட் தலைமை முன்வைத்துள்ளது.

இதன்படி, மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளிலும்
காங்கிரஸ்-மார்க்சிஸ்ட் கட்சிகள் ஒரே சின்னத்தில் போட்டியிடும்.
இந்த யோசனையே மேற்குவங்க பார்முலா எனப்படுகிறது.

சோனியா காந்தி மற்றும் எச்சூரி ஆகிய தலைவர்களின்
ஒப்புதலுக்குப் பின்னர் மேற்குவங்க பார்முலா செயல்பாட்டுக்கு
வரும் என்று தெரிகிறது.

இந்தியக் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா பாண்டியன்
மேற்குவங்க பார்முலாவுக்கு ஆதரவு தேடி வருவதாகக்
கூறப்படுகிறது.
****************************************************************** 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக