புதன், 9 மார்ச், 2016

எக்காரணம் கொண்டும் காங்கிரஸ் கட்சியைத்
தாக்கிப் பேசக் கூடாது! கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட்
கட்சியினருக்கு எச்சூரி-சுதாகர் ரெட்டி உத்தரவு!
-------------------------------------------------------------------------------
காங்கிரஸ் கட்சியும் மார்க்சிஸ்ட் கட்சியும் மேற்கு
வங்கத்தில் லட்சியக் கூட்டணி அமைத்துள்ளன.
இதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் உள்ள
கட்சி மாநிலக் கமிட்டிகள் காங்கிரஸ் கட்சியையோ
சோனியா காந்தியையோ தாக்கிப் பேசக்கூடாது
என்று மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீத்தாராம்
யெச்சூரி கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்து உள்ளார்.

கம்யூனிஸ்ட் கட்சிப் பொதுச் செயலாளரான சுதாகர்
ரெட்டியாரும் இதே போன்ற உத்தரவைப் பிறப்பித்து
உள்ளார்.

எச்சூரி, சுதாகர் ரெட்டியாரின் உத்தரவை வரவேற்று
உள்ளார் ஈவிகேஎஸ் இளங்கோவன். 
---------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக