ஞாயிறு, 20 மார்ச், 2016

6174 என்பது காப்ரேகர் மாறிலி (Kaprekar constant) எனப்படும்.
மறைந்த மராட்டியக் கணித நிபுணர் காப்ரேகர் கண்டறிந்து
கூறியது இது. இங்கு கொடுக்கப்பட்ட எண்களுக்கு இடையிலான
குறிப்பான தெளிவான தொடர்பு குறித்துக் கேட்கப் படுகிறது.
அதை உய்த்தறிய ஒரு குறிப்பும் (clue) கடைசி வரியில்
கொடுக்கப் பட்டுள்ளது. தரப்பட்ட குறிப்பில் இருந்து
விடை காண முயல்க. 

காப்ரேகர் இருபதாம் நூற்றாண்டின் கணித மேதை. அவர் மறைந்தது
1986இல்தான். பாபிலோனியர்கள் காப்ரேகர் மாறிலி குறித்து
அறிந்திருக்கவில்லை என்பது உறுதி. அவ்வளவு ஏன்? காப்ரேகர்
கண்டறிந்து கூறும் வரை 6174 என்ற எண்ணின் சிறப்பு
இப்பூவுலகில் எவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நிற்க.
கொடுக்கப்பட்ட கணக்கில் உள்ள எண்களுக்கு இடையிலான
தொடர்பை 3500 ஆண்டுகளுக்கு முன்பே பாபிலோனியர்கள்
அறிந்து இருந்தனர் என்பதில் இருந்து....இதை ஒரு குறிப்பாக
(clue) ஏற்றுக் கொண்டு...  கணக்கிற்கு விடை காண முயல்க.

"வர்க்கத்தோடு தொடர்பு" என்ற இடத்திற்கு வந்து விட்டால்
அதன் பிறகு விடை காண்பது எளிது.


ஏலங்குழலாய் இளகிடும் நெஞ்சம் என்ற திரைப்பாடல் வரியை
எங்கள் தமிழாசிரியர் மகா வித்துவான் சு தி சங்கர நாராயணன்
அவர்கள் மேற்கோள் காட்டுவார். ல, ழ, ள ஆகிய மூவெழுத்துக்களும்
ஒருசேர வரும் இப்பாடல் வரி அழகியது காண்பீர்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக