செவ்வாய், 15 மார்ச், 2016

இளைஞர்களைப் பலிகொள்ளும் குட்டி முதலாளித்துவம்!
-------------------------------------------------------------------------------------------
பலியிடுவது ஆடுகளைத்தான்; சிங்கங்களை அல்ல!
-----------டாக்டர் அம்பேத்கர் ----------------

ஒவ்வொரு இளைஞனும் காதலித்தே ஆக வேண்டும்.
காதலிக்கா விட்டால் வாழ்வே பாழாய்ப் போய் விடுகிறது.
எவளும் கிடைக்காவிட்டால் ஒரு பிச்சைக்காரியையாவது 
காதலித்தே ஆக வேண்டும் என்கிற நிர்ப்பந்தத்தை 
குட்டி முதலாளித்துவம் உருவாக்குகிறது. சமூக உணர்வோ 
தனிமனிதப் பொறுப்புணர்வோ அறவே இல்லாத குட்டி 
முதலாளித்துவ விடலைகள் இந்த நிர்ப்பந்தத்திற்குப் 
பலி ஆகி விடுகிறார்கள்.

இரண்டாயிரம் ஆண்டுகளாக சாதி இருந்து வருகிறது.
சாதியை எதிர்த்த போராட்டமும் இரண்டாயிரம் ஆண்டுகளாக 
இருந்து வருகிறது. கௌதம புத்தரை விடவா வேறு யாரும் 
சாதியை எதிர்த்து விட முடியும்?

சாதி கடந்த திருமணங்களை சாதியம் அனுமதிப்பதில்லை.
ஆனால் காத்திரமான பல திருமணங்கள் சாதி கடந்து நடைபெற்றுக் 
கொண்டுதான் இருக்கின்றன. பொருந்தாத் திருமணங்கள்தாம் 
மயானத்தில் முடிகின்றன.

18 வயதிலும் 19 வயதிலும் ஒரு இளைஞன் காதல் வயப் 
படுகிறான் என்பதோ திருமணம் புரிந்து கொள்கிறான் 
என்பதோ ஏற்கத் தக்கதல்ல. TEEN AGEஇல் வருவது காதல் 
அல்ல; அது வெறும் இனக்கவர்ச்சி சார்ந்த ஈர்ப்பு. இந்த அற்ப 
இனக்கவர்ச்சியைத் தெய்வீகக் காதல் என்று போஷித்து
வளர்க்கிற விடலை இறுதியில் தண்டவாளத்தில் தலையைக் 
கொடுக்கிறான். 

ஆணும் சரி, பெண்ணும் சரி TEEN AGEஇல் 
( 13 முதல் 19 வரையிலான வயது thirteen to nineteen) திருமணம் 
செய்து கொள்வது சரியல்ல; ஏற்கத் தக்கது அல்ல. கொழுத்த 
பணக்கார வீட்டுப் பிள்ளைகள், நூறு தலைமுறைக்குச் சொத்து 
சேர்த்து வைத்து இருக்கிற கோடீஸ்வரன் வீட்டுப் பிள்ளைகள் 
TEEN AGEஇல் திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் 
உழைக்கும் வர்க்கத்துப் பிள்ளைகள் TEEN AGEஇல் திருமணம் 
புரிவது நியாயமல்ல. இது சமூக விரோதத் தன்மை கொண்டது.

படித்து முடித்து உத்தியோகம் பார்த்து சம்பாத்தியம் பண்ணி 
சொந்தக் காலில் நின்று தாய் தகப்பனைக் காப்பாற்றி அதன் பிறகு 
காதலித்துக் கல்யாணம் பண்ணிக் கொள்ளட்டும். உடம்பும் 
மனமும் பக்குவப் படுவதற்கு முன், திருமணம் புரிந்து கொள்ள 
நாயாய் அலைவது கண்டிக்கத் தக்கது. இது பாட்டாளி வர்க்கப் 
பண்பு அல்ல.

தென்காசி ஆசிரியை கோதைலட்சுமி (23), பத்தாம் வகுப்பு 
மாணவன் சிவசுப்பிரமணியன் (16) என்பவனுடன் கடந்த ஆண்டு 
மார்ச் 2015இல் ஓடிப்போய், திருப்பூரில் வாழ்ந்து, ஆசிரியை 
நான்குமாத கர்ப்பம் ஆகி, இன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் 
தன் பெற்றோருடன் செல்வதாக மாணவன் கூறியதை அடுத்து
நீதியரசர்கள் மாணவனைப் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
காமவெறி ஆசிரியை திருச்சி சிறையில் உள்ளார். இதெல்லாம் 
தெய்வீகக் காதல் என்று ஆதரிக்க முடியுமா?

19 வயதில் காமச் சிந்தனைக்கு இடம் கொடாமல், ஈழ விடுதலையை 
நேசித்து, ராஜீவ் காந்தி அழித்தொழிப்பில் பங்கு பெற்று, இன்று 
வெஞ்சிறையில் வாடுகிறானே வீர இளைஞன் பேரறிவாளன்!
சமூகப் பொறுப்போ தனிமனிதப் பொறுப்புணர்வோ அறவே இல்லாத 
குட்டி முதலாளித்துவ அற்பக் கழிசடைகள் பேரறிவாளனின் 
மூத்திரத்தைக் குடிக்கட்டும்! அப்படியாவது திருந்தட்டும்!

TEEN AGE காதல் என்பது காதல் அல்ல. அது காம வெறி.
பிஞ்சில் பழுத்தால் வெம்பித்தான் போக வேண்டும்.
இது இயற்கையின் நியதி! 27 வயதில் ஆண்களும் 23 வயதில் 
பெண்களும் திருமணம் செய்து கொள்ளலாம். அதுவரை 
பொறுத்திருப்பதால் வானம் இடிந்து விழப் போவதில்லை.     
---------------------------------------------------------------------------------------------

பேரறிவாளன் செய்தது (ராஜீவ் படுகொலை) சரி என்று 
குறிப்பிடுவதற்காக அப்பத்தி எழுதப்படவில்லை. 19 வயதில் 
எல்லா இளைஞர்களும் காமவயப் பட்டுச் சீரழியும்போது, 
பேரறிவாளன் காமத்தை வெற்றி கொண்டு உயர்ந்தான் என்பதன் 
மூலம், முதிரா வயதில்  காமத்தை வெற்றி கொள்வதே
சிறந்தது என்பதை உணர்த்திடும் பொருட்டே அப்பத்தி 
எழுதப் பட்டுள்ளது.  
   
      


   

   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக