ஜி ராமகிருஷ்ணனுக்கு நிதித்துறை ஒதுக்கிய
விஜயகாந்த் மச்சான் சுத்தீஷுக்கு நன்றி தெரிவிக்க
சீத்தாராம் எச்சூரி சென்னை வருகை!
சுத்தீசுக்கு நன்றி தெரிவித்து பொலிட்பீரோ தீர்மானம்!
---------------------------------------------------------------------------------------
கோவில்பட்டி பொதுக்கூட்டத்தில் பேசிய சுத்தீஷ்
மார்க்சிஸ்ட் தலைவர் ஜி ராமகிருஷ்ணனுக்கு
நிதியமைச்சர் பதவியை வழங்கினார்.
இதற்காக சுத்தீசுக்கு நன்றி தெரிவித்து , மார்க்சிஸ்ட்
கட்சியின் பொலிட்பீரோ ஏகமனதாக தீர்மானம்
நிறைவேற்றி உள்ளது. விஜயகாந்த் மச்சான் சுத்தீஷுக்குப்
புகழாரம் சூட்டும் இத்தீர்மானம் சுத்தீஷை
தமிழகத்தின் மாவோ என்று வர்ணிக்கிறது.
அடுத்த வார பீப்பிள்ஸ் டிமாக்ரசி இதழில்தான் தீர்மானம்
வெளியாகும் என்பதால், தீர்மான நகலை எடுத்துக் கொண்டு
நேரில் புறப்பட்டு விமானத்தில் வருகிறார் எச்சூரி.
இருப்பினும் எச்சூரியைச் சந்திக்க சுத்தீஷ் இன்னும்
அப்பாயின்ட்மென்ட் கொடுக்காதலால், எச்சூரி அவர்கள்
கட்சி அலுவலகத்தில் தங்கி இருக்கிறாராம்.
என்னே எச்சூரியின் எளிமை!
என்னே அவர்தம் பெருந்தன்மை! பொறுமை!!
------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு: நமது பதிவைப் படித்துப் பார்த்த இசக்கி முத்து
அண்ணாச்சி "கேவலப் படுங்கடா, டேய், உங்களுக்கு
இதுவும் வேணும், இன்னமும் வேணும்" என்று கூறிக்
கொண்டே, மேசை மீது கிடந்த பீப்பிள்ஸ் டிமாக்ரசி இதழின்
மீது காரித் துப்பினார்.
-------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக