செவ்வாய், 15 மார்ச், 2016

23 வயது ஆசிரியை 16 வயதுச் சிறுவனுடன் கொண்ட 
காதலும் அதன் விளைவான நாலு மாத கர்ப்பமும்!
இந்த தெய்வீகக் காதலை ஆதரிக்க வாருங்கள் 
முற்போக்குகளே! இடதுசாரிகளே!
------------------------------------------------------------------------------------
1) தென்காசி தனியார் பள்ளியில் ஆசிரியை கோதைலட்சுமி
(வயது 23)
2) பத்தாங்கிளாஸ் படித்த சிறுவன் சிவசுப்பிரமணியனைக்  
(வயது 16) காதலித்தார் கோதைலட்சுமி.

3) தன்னை விட ஏழு வயது குறைந்த மைனர் சிறுவனுடன் 
ஆசிரியை கோதைலட்சுமி கொண்ட தெய்வீகக் காதல் 
முற்றிப்போய் இருவரும் 2015 மார்ச்சில் வீட்டை விட்டும் 
ஊரை விட்டும் ஓடி விட்டனர்.

4) ஓடிப்போனவர்கள் வேறு மாநிலமான புதுச்சேரி சென்று 
"திருமணம்" செய்து கொண்டனர்.
5) எந்தப் பத்திரப் பதிவு அலுவலகத்திலோ, கோவிலிலோ,
சீர்திருத்தத் திருமண மேடையிலோ இந்தத் திருமணம் 
நடக்கவில்லை. ஏனெனில் மைனர் பையனுக்குத் திருமணம் 
நடத்த யாரும் முன்வரவில்லை.

6) புதுச்சேரியில் ஒரு கோவில் பூசாரிக்கு 50 ரூபாய் கொடுத்து 
இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர். இத்திருமணம் 
சட்டப்படி செல்லத் தக்கதல்ல.
7) என்றாலும் குடும்பம் நடத்தினர். தாம்பத்தியம் நடந்தது.

8) கையில் இருந்த பணம் கரைந்தது. நகையை விற்றும் 
செலவைச் சமாளித்தனர். ஒரு கட்டத்திற்கு மேல் 
முடியவில்லை.
9) வேலை பார்த்துச் சம்பாதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
தொழில் நகரமான திருப்பூருக்கு வந்தனர். ஆளுக்கு ஒரு 
கம்பெனியில் வேலை கிடைத்தது சொற்ப சம்பளத்தில்.

10) தாம்பத்தியத்தின் விளைவாக கோதைலட்சுமி
நான்கு மாத கர்ப்பம் ஆனார்.
11) கடுமையான உடலுழைப்பு சிறுவனுக்கு சலிப்பைத் தந்தது.
12) இதற்கிடையில் இம்மாதம் (மார்ச் 2016) போலிஸ் இவர்களைப் 
பிடித்து விட்டது. ஆடிய ஆட்டம் சரியாக ஒரு ஆண்டில் 
முடிவுக்கு வந்தது.

13) மதுரை உயர்நீதிமன்றத்தில் இருவரும் ஆஜர் படுத்தப் 
பட்டனர்.
14) மேதகு நீதியரசர்கள் மைனர் பையனிடம் கேட்டனர்.
நான் என் பெற்றோருடன் போகிறேன் என்று பையன் 
தெரிவித்தான். பெருமைக்குரிய நீதியரசர்கள் அப்படியே 
ஆகுக என்று கூறி பையனைப் பெற்றோருடன் அனுப்பி 
விட்டனர். அவன் மீது வழக்கோ தண்டனையோ எதுவும் 
மருந்துக்குக் கூடக் கிடையாது.

15) மைனர் பையனைக் கடத்திய குற்றத்திற்காக, நாலு மாதக் கர்ப்பிணியான ஆசிரியை கோதைலட்சுமி திருச்சி சிறையில் 
அடைக்கப் பட்டார்.
16) சகலத்தையும் அனுபவித்து விட்டு பையன் அழகாக எஸ்கேப் 
ஆகி விட்டான். இனி அவன் முன்பு தவற விட்ட பத்தாங் கிளாஸ் 
தேர்வை பிரைவேட்டாக எழுதிப் பாஸ் பண்ணுவான். ஒரு சில 
வருஷங்களில் பெற்றோர் அவனுக்கு வேறொரு பெண் பார்த்து 
கல்யாணம் பண்ணி வைப்பார்கள்.

17) ஆசிரியை கோதைலட்சுமிக்கு மைனர் பையனைக் கடத்திய 
குற்றத்திற்காக மூன்று வருஷ தண்டனை கிடைக்கும்.
18) கோதைலட்சுமிக்கு சிறையிலே பிள்ளை பிறக்கும். அல்லது 
ஜாமீன் கிடைத்தால் பெற்றோர் ஏற்றுக் கொண்டால் வீட்டில் 
அல்லது மருத்துவ மனையில் பிள்ளை பிறக்கும்.

19) அந்தப் பிள்ளையை வளர்ப்பாளா அல்லது குப்பைத் 
தொட்டியில் வீசி எறிந்து விடுவாளா என்ற கேள்விக்கு காலம் 
பதில் சொல்லும்.
20) அந்தக் குழந்தை அனாதையாக வளர்ந்தால், தமிழ்ச் 
சமூகத்திற்கு ஒரு சமூக விரோதி கிடைப்பான்.

21) ஒரு பெண்ணைக் கர்ப்பமாக்கி விட்டு, அதற்கு எந்தப் 
பொறுப்பும் ஏற்காமல், எந்தப் பொறுப்பும் அவன் மீது 
சுமத்தப் படாமல், சட்டப்படியே அந்தப் பையன் எஸ்கேப் 
ஆகிவிட்டான்.

22) முள்ளு மேலே சேலை பட்டாலும், சேலை மேலே முள்ளு 
பட்டாலும், சேலைதான் கிழியும் என்பதைப் போல,
ஆசிரியை கோதைலட்சுமியின் வாழ்க்கை ஆகி விட்டது.
ஒரு தவறு சங்கிலித் தொடர் போல வாழ்க்கை மொத்தத்தையும் 
பாதித்து விட்டது.

23) வாருங்கள் முற்போக்குகளே, இடதுசாரிகளே, 
கோதைலட்சுமியின் தெய்வீகக் காதலை ஆதரிப்போம்.

24) காதலை எதிர்க்கும் பிற்போக்கு சக்திகளை முறியடிப்போம்!
தெய்வீகக் காதல் வாழ்க!
-------------------------------------------------------------------------------------------------------          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக