புதன், 16 மார்ச், 2016

காதல் வெல்லும்! சதை அரிப்பு தோற்கும்!
----------------------------------------------------------------
பூவார் வசந்த மரங்களின் மறைப்பில்
காதல் பெண்களின் தாவணி விலக்கி
அபினி மலர்களின்
மொட்டைச் சுவைக்கும்
இளம் பருவத்தில்
இடுகாட்டு மண்ணைச் சுவை என
எம் இளையவருக்கு
விதித்தவன் யாரோ!
....ஈழக் கவிதை......

பகத்சிங் இளைஞன்! நாட்டை நேசித்தான்!
சதை அரிப்பைப் புறங்கண்டான்!

வாஞ்சிநாதன் கொள்கையை நேசித்தான்.
சதை அரிப்பைப் புறங்கண்டான்!

பேரறிவாளன் ஈழத்தை நேசித்தான்!
சதை அரிப்பைப் புறங்கண்டான்!

ஈழத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்த 
இளையர்களும் விடுதலை நேசித்தனர்!
சதை அரிப்பைப் புறங்கண்டனர்! 
மேலே உள்ள கவிதை ஈழ இளையர்களின் 
தியாக உணர்வைப் போற்றுகிறது!

18 வயது, 19 வயது இது மாதிரி  டீன் ஏஜ் என்பது 
படிப்பதற்கான பருவம்.

படிப்பதை மறந்து விட்டு சதை அரிப்புக்கும் 
காம உணர்வுக்கும் முக்கியத்துவம் கொடுத்த 
சமூக உணர்வோ தனி மனிதப் பொறுப்புணர்வோ இல்லாத 
பிஞ்சில் பழுக்கும் 
குட்டி முதலாளித்துவ அற்பக் கழிசடைகள்  
வெம்பிப் போவதில் ஆச்சரியம் இல்லை!
---------------------------------------------------------------------------------------------
தமிழ்நாட்டில் காலங்காலமாக சாதி மறுப்புத் திருமணங்கள் 
நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தக்க வயது, வேலை,
வருமானம் உள்ள சாதி மறுப்பு ஜோடிகளிடம் மரம் வெட்டியாரோ 
யுவராஜோ ஒரு மயிரையும் பிடுங்க முடியவில்லை.
இது வரலாறு!
-------------------------------------------------------------------------------------------------------- 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக