சனி, 19 மார்ச், 2016

பல குணம் தழுவிய ஓர் உரிச்சொல்,
ஒரு குணம் தழுவிய பல்லுரிச்சொல்
என உரிச்சொற்கள் இருவகையினவே.
கடி எனும் உரிச்சொல் பல்பொருள் தரும்.
"கடியென் கிளவி காப்பே கூர்மை
விரையே விளக்கம் அச்சம் சிறப்பே......"
என்னும் நூற்பாவைக் கருதுக. 

உண்மையைத் தானே சொல்கிறார்!

clue என்னும் ஆங்கிலச் சொல்லுக்குச் சமமான  தமிழ்ச் சொல்
துப்பு என்பதேயாகும்.
"குறிப்பில் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல்" என்கிறார் வள்ளுவர்.
குறிப்பறிதல் என்று இரண்டு அதிகாரங்களை
(பொருட்பால், காமத்துப்பால்) வள்ளுவர் எழுதியுள்ளார்.
வள்ளுவர் கூறும் குறிப்பே CLUE ஆகும்.
"அவை நடுவே நீட்டோலை வாசியா நின்றான்
குறிப்பறிய மாட்டாதவன்" என்ற செய்யுளில் வரும்
குறிப்பு CLUEவே ஆகும்.
**
எனவே குறிப்பு என்பது CLUE என்ற சொல்லுக்கு நிகராகும்.
மேலும் துப்பு என்ற சொல்லையும் CLUE-வுக்கு இணையானதாகக்
கருதலாம்.       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக