சனி, 12 மார்ச், 2016

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நடப்பு அரசியலின்
யதார்த்தம் இதுதான். கூட்டணி பேரங்களில் C Language தவிர்க்க
இயலாமல் இடம் பெறுகிறது. (இங்கு C Language என்பது
டென்னிஸ் ரிட்ச்சி கண்டு பிடித்த programming languageஐக்
குறிக்காது).

1991 மே மாதம் ஸ்ரீபெரும்புதூருக்கு தேர்தல் பிரச்சாரத்துக்கு
வந்த ராஜீவ் காந்தி கோடி கோடியாகக் கொண்டு வந்தார்.
அவர் வெடிகுண்டால் இறந்ததும் வாழப்பாடி ராமமூர்த்தி
அவ்வளவு பணத்தையும் அபகரித்துக் கொண்டார். ராஜீவ் காந்தி
என்ன சொந்தப் பணத்தையா கொண்டு வந்தார்? சொத்தை விற்றா
பணத்தைக் கொண்டு வந்தார்? இல்லை. எல்லாம் கொள்ளை
அடித்த பணம்தான்.

அதுபோல, தேர்தல் அரசியலில் பங்கேற்கிற எல்லாக் கட்சிகளும்
விரலுக்கேற்ற வீக்கம் என்கிற முறையில், C Language பேசுவது
இயற்கை ஆகி விட்டது. C இல்லாமல் கூட்டணி இல்லை.       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக