சனி, 14 டிசம்பர், 2019

நீங்கள் அமித்ஷா பக்கமா? அசாம் மக்களின்பக்கமா?
வந்தேறிகளை வெளியேற்றுவதா? குடியுரிமை வழங்குவதா? 
உண்மையான வில்லன் அசாம் ஒப்பந்தமே!
----------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------- 
1) வந்தேறிகளுக்குக் குடியுரிமை வழங்குவேன் என்கிறார்
அமித்ஷா!
2) எந்த வந்தேறிக்கும் குடியுரிமை வழங்கக் கூடாது
என்கின்றனர் அசாம் மாநில மக்கள்.

இந்த இரண்டு தரப்பில் நீங்கள் யார் பக்கம்
நிற்கிறீர்கள்? பதில் சொல்லுங்கள்!

வந்தேறிகளுக்கு குடியுரிமை வழங்கலாமா? கூடாதா?
இதுதான் கேள்வி! தமிழகத்தில் உள்ள முற்போக்காளர்கள்
என்றும் இடதுசாரிகள் என்றும் தங்களை அழைத்துக்
கொள்வோரின் பதில் என்ன? பதில் சொல்லாமல் இருப்பது
நழுவல்வாதம் (escapism) ஆகும்.

எமது தீர்வு!
----------------
1) தற்போதைய நிலையில் சுமார் 19 லட்சம் வந்தேறிகள்
உள்ளனர். மொத்த வந்தேறிகளே  19 லட்சம் பேர்தான்.

2) இந்த 19 லட்சம் வந்தேறிகளையும் உடனடியாக அசாமில்
இருந்து வெளியேற்ற வேண்டும். அசாம் சுத்தம் செய்யப்பட
வேண்டும் (ethnic cleansing).

3) வெளியேற்றப் பட்ட பின் இவர்களை மேற்கு வங்க மாநிலத்திற்குக் கொண்டு வந்து முகாம்களில் தங்க
வைக்க வேண்டும். வங்க தேசத்தில் இருந்து வந்த இவர்களின்
தாய்மொழி வங்க மொழி என்பதால் மேற்கு வங்கத்தில்
இவர்களைச் சேர்ப்பது நியாயமே.

4) இந்த 20 லட்சம் பேரில் யார் யாருக்கு சட்டப்படி
குடியுரிமை வழங்கலாமோ அவர்களை அடையாளம்
கண்டு  குடியுரிமை வழங்க வேண்டும். குடியுரிமைக்குத்  தகுதியற்றவர்களை அடையாளம்
கண்டு அவர்களை  வெளியேற்ற வேண்டும்.

5) ஒரு சில ஆண்டுகளுக்குள் இந்தப் பணிகளைச்
செய்து முடிக்க வேண்டும்.

இதுதான் தீர்வு! இது மட்டுமே சரியான ஒரே தீர்வு!

அசாம் ஒப்பந்தம் என்றால் என்ன?
--------------------------------------------------
அசாம் ஒப்பந்தம் என்றால் என்ன? அதைப் பற்றித்
தெரியாமல் இன்றைய குடியுரிமைச் சிக்கலுக்குத்
தீர்வு காண இயலாது. அசாம் ஒப்பந்தத்தின் 5ஆம் ஷரத்து
கூறுவது என்ன? இது தெரிந்திருக்க வேண்டும்.

சட்ட விரோதமாக அசாமில் குடியேறிய வந்தேறிகளை
அடையாளம் கண்டு அவர்களை நாட்டை விட்டு
வெளியேற்ற வேண்டும் என்பதே அசாம் ஒப்பந்தம்.
அதன்படி, சுமார் 70,000 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

அடையாளம் கண்டது யார்? இவ்வாறு அடையாளம்
காண்பதற்காக அமைக்கப்பட்ட தீர்ப்பாயங்கள் (tribunals).
அடையாளம் கண்டன.

யாருடைய உத்தரவின் பேரில் இவ்வாறு தீர்ப்பாயங்கள்
மூலம் அடையாளம் காணும் நடவடிக்கை மேற்கொள்ளப்
பட்டது? மேற்கொண்டது யார்? எப்போது?

உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இவ்வாறு
அடையாளம் காணும் பணி நடைபெற்றது. இந்தப்
பணியை மேற்கொண்டது அசாம் அரசு. அடையாளம்
காணும் பணி மாதக்கணக்கில் நடைபெற்று 2019
ஜனவரியில் முதல் கட்டமாக 70,000 பேர் வரை அடையாளம்
காணப்பட்டனர். இத்தகவலை உச்சநீதிமன்றத்தில்
அசாம் அரசு ஏப்ரல் 2019ல் தெரிவித்தது.

இதன் பிறகு, உச்சநீதிமன்றம் தொடர்ந்து அசாம்
அரசை வலியுறுத்தி, முடுக்கி விட்டு, அடையாளம்
காணும் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தியது..

இறுதியில் 40 லட்சம் பேர் அடையாளம் காணப்பட்டனர்.
அதன் பிறகு இந்த எண்ணிக்கையைக் குறைக்கும்
பொருட்டு மோடி அரசு பல விஷயங்களைத் தளர்த்தியது.
இறுதிக்கும் இறுதியான பரிசீலனையில்
19 லட்சம் பேர் சட்ட விரோதக் குடியேறிகள் என்று
கண்டறியப் பட்டது. ஆக விஷயம் 19 லட்சம் பேருடன்
முடிவுக்கு வருகிறது.

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் அசாம் ஒப்பந்தம்
(Assam accord) கூறுகிறபடியே நடைபெற்றன. இவை
அமித்ஷா  கொண்டு வந்த குடியுரிமைத் திருத்தச்
சட்டத்தின்படி அல்ல, மாறாக அசாம் ஒப்பந்தப்படி
நடந்தன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

19 லட்சம் பேரை சட்ட விரோதக் குடியேறிகள் என்று
அடையாளம் காட்டியது அசாம் ஒப்பந்தம்தான்
என்பதைப் புரிந்து கொள்ளாமல் இருப்பது இந்த
நூற்றாண்டின் மாபெரும் அறியாமை ஆகும்.

அசாம் ஒப்பந்தமே உண்மையான வில்லன். இதைப்
புரிந்து கொள்ள முடியாத எவர் ஒருவராலும்
குடியுரிமைச் சிக்கலைப் புரிந்து கொள்ள முடியாது.
19 லட்சம் பேரை வந்தேறிகளாகத் தெருவில்
நிறுத்தி இருப்பது அசாம் ஒப்பந்தம்தான் என்று
புரிந்து கொள்ள வேண்டும்.

மோடியும் அமித்ஷாவும் சேர்ந்து நாளையே CAB என்று
அறியப்பட்ட குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து
செய்து விடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.
அதன் பிறகும் கூட அசாம் ஒப்பந்தம் உயிருடன் இருக்கும்.
அசாம் ஒப்பந்தம் செல்லாது என்று அமித்ஷா கூறவில்லை.
அமித்ஷா மட்டுமல்ல, எந்தக் கொம்பாதி கொம்பனும்
அசாம் ஒப்பந்தம் செல்லாது என்று கூற முடியாது.

இதன் பொருள் என்ன? அசாம் ஒப்பந்தம் இருக்கும் வரை
சட்ட விரோதக் குடியேறிகளை அடையாளம் காணும்
நடவடிக்கை இருக்கும். வந்தேறிகள் வெளியேற்றப்
படுவது நடந்து கொண்டே இருக்கும்.

அசாம் ஒப்பந்தம் என்பது வெண்ணெய் போன்றது.
அமித்ஷாவின் சட்டம் (CAB) என்பது நெய் போன்றது.
அசாமில் பானை பானையாக வெண்ணெய் இருக்கிறது.

சரி, அசாம் ஒப்பந்தத்தை யாராலும் ரத்து செய்ய
முடியுமா? முடியாது. ரத்து செய்ய முயற்சி செய்தாலே
போதும், இந்தியாவை எரித்து விடுவார்கள் அசாம்
மக்கள்.

அசாம் ஒப்பந்தம் எப்படி ஏற்பட்டது? இந்திரா காந்தி
காலத்தில் அசாமிய மக்கள் வந்தேறிகளை எதிர்த்துப்
போராடினார்கள். ஆறு ஆண்டு காலம் போராடினார்கள்.
1979 முதல்  1985 வரை பெரும் வன்முறையுடன் கூடிய
போராட்டம். இறுதியில் இந்திரா காந்தி இறந்து,
ராஜிவ் காந்தி பிரதமராக வந்த பிறகு, 1985ல்
(15 ஆகஸ்டு 1985) அசாம் ஒப்பந்தம் கையெழுத்தானது.

சரி, அசாமில் எப்படி வந்தேறிகள் லட்சக் கணக்கில்
வந்து சேர்ந்தார்கள்? அசாமில் வந்தேறிகள் நுழைவது
நாடு சுதந்திரம் அடைந்தது முதலே நடந்து வருகிறது.

1971ல் வங்கதேசம் உருவானது. முஜிபுர் ரகுமான், முக்தி
பாஹினி பற்றிப் பலரும் அறியாதிருக்கலாம். இந்த
நேரத்தில் அறிந்து கொள்க.

வங்க தேசத்தை உருவாக்கிக் கொடுத்தவர் இந்திரா
காந்தி. வங்கதேசப் போர் தொடங்கியதுமே அங்கிருந்து
கூட்டம் கூட்டமாக அகதிகள் இந்தியாவுக்குள்
நுழைந்தார்கள். வங்கதேச இந்திய எல்லையை அகலத்
திறந்து வைத்தார் இந்திரா காந்தி.லட்சக் கணக்கில்
வந்து விட்டார்கள்.

வளமான அசாமில் அவர்கள் தங்கி விட்டார்கள்.
வளங்களை அபகரித்து மண்ணின் மைந்தர்களின்
வாழ்வாதாரத்தை அழித்தார்கள். இதை எதிர்த்து
அசாமின் மண்ணின் மைந்தர்கள் நடத்திய ஆறு ஆண்டு
காலப் போராட்டமே அசாம் போராட்டம். இது  
வங்கதேச வந்தேறிகளை வெளியேற்றும் அசாம்
ஒப்பந்தத்தில் முடிந்தது.

அசாம் போராட்டத்திலோ அசாம் ஒப்பந்தத்திலோ
மதம் என்பது கிடையாது. எந்த மதமாக இருந்தாலும் சரி,
வந்தேறி வந்தேறிதான், அவர்களை ஏற்க மாட்டோம்
என்பதுதான் அசாம் போராட்டம். எனவே இதில்
மதத்தை நுழைப்பது கயமை ஆகும். 

1971ல் வங்கதேசம் உருவானபோது அந்நாட்டின்
அரசமைப்புச் சட்டம் வங்கதேசத்தை மதச்சார்பற்ற
(secular) நாடாக உருவாக்கியது. பின்னர் சில ஆண்டுகளில்
அதை மாற்றி, இஸ்லாமியக் குடியரசாக அந்நாடு
ஆகியது. இது முக்கியத்துவம் வாய்ந்த ஆனால் பலரும்
அறியாத செய்தி.


கேள்விக்கு என்ன பதில்?
---------------------------------------
அசாம் ஒப்பந்தமும் அமித்ஷாவின் குடியுரிமைச் சட்டமும்
சில அடிப்படையான கேள்விகளை எழுப்புகின்றன.

பிரதான கேள்வி இதுதான்!
வந்தேறிகளை வெளியேற்றுவதா?
அல்லது வந்தேறிகளுக்குக் குடியுரிமை வழங்குவதா?
இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

அசாம் மக்களின் பக்கம் நிற்பவர்கள் வந்தேறிகளை
வெளியேற்ற வேண்டும் என்று சொல்கிறவர்கள்.

இதற்கு மாறாக, குடியுரிமை வழங்க வேண்டும் என்று
சொல்கிறவர்கள் அமித்ஷா பக்கம் நிற்கிறார்கள்.
ஆறு மதத்து வந்தேறிகளுக்கு மட்டுமே அமித்ஷா குடியுரிமை
வழங்குகிறார்; இது போதாது; ஏழாவதாக இஸ்லாம்
மதத்து வந்தேறிகளுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும்
என்று கோருபவர்கள் அனைவரும் அமித்ஷா பக்கம்
நிற்கிறார்கள். அவர்கள் அசாம் மக்களுக்கு எதிர்த்
தரப்பில் நிற்கிறார்கள்.

இந்த விஷயத்தில் இரண்டே தரப்புகள்தான்.
வெளியேற்றம் என்பது ஒரு தரப்பு!
குடியுரிமை என்பது ஒரு தரப்பு!  
இந்த இரண்டு தரப்பில் நீ எதை ஆதரிக்கிறாய்?
யார் பக்கம் நிற்கிறாய்?

அமித்ஷா பக்கம் நின்று குடியுரிமை வேண்டும் என்கிறாயா?
அல்லது அசாம் மக்கள் பக்கம் நின்று வந்தேறிகளை
வெளியேற்று என்கிறாயா? பதில் சொல்!
***************************************************
பின்குறிப்பு:
உலகம் முழுவதும் மண்ணின் மைந்தர் கொள்கை
செல்வாக்குப் பெற்று வரும் காலம் இது. ஆந்திராவிலும்
கர்நாடகத்திலும் அந்தந்த மாநில மக்களுக்கு வேலை
என்று முதல்வர்கள் சட்டம் இயற்றுகிறார்கள்.    
முல்லைப் பெரியாற்று நீரை நமக்கு மறுக்கிறது
கேரளம். காவிரி நீரை மறுக்கிறான் கன்னடன்.
இதுதான் இன்றைய நிலைமை. இந்த நிலையில்
எல்லா வெளிநாட்டு அகதிகளுக்கும் குடியுரிமை
வழங்குவது இந்தியாவின் வேலை அல்ல.

அதற்கென்று ஐநா சபை இருக்கிறது. சிரிய நாட்டு
அகதிகளுக்கும் ரோஹிங்கியா அகதிகளுக்கும்
அடைக்கலம் கொடுக்க வேண்டியது ஐநா சபையின்
வேலை. இதையெல்லாம் புரிந்து கொண்டு எனவே சிந்தித்து
முடிவை எடு!
******************************************************* 












   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக