திங்கள், 23 டிசம்பர், 2019

இந்திய மாநிலம் மணிப்பூருக்குச் செல்ல விசா வேண்டும்!
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கையெழுத்திட்டார்!
2004ல் மணிப்பூர் பெண்கள் நடத்திய நிர்வாணப் போராட்டம்!
--------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------
1) வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டுமென்றால் விசா (visa)
வேண்டும் என்பதை நாம் அறிவோம். தற்போது இந்திய
மாநிலங்களில் ஒன்றான மணிப்பூருக்குச் செல்ல
வேண்டுமென்றால் அதற்கு விசா வாங்க வேண்டும் என்று
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

2) அனைவரும் சுலபமாகப் புரிந்து கொள்ள வசதியாக
விசா என்று குறிப்பிட்டுள்ளேன். உண்மையில் அதன்
அதிகாரபூர்வமான பெயர் ILP என்பதாகும்.

3) ILP என்றால் என்ன? ILP = Inner Line Permit என்று அறிக.
இன்னர் லைன் பெர்மிட் என்றால் என்ன என்று வாசகர்கள்
அறிந்து கொள்ள வேண்டும்.

4) மணிப்பூருக்குச் செல்ல விரும்பும் ஒருவர், அங்கு செல்லும்
முன்னர், மணிப்பூர் மாநில அரசின் அனுமதியைப் பெற
வேண்டும். நன்கு கவனிக்கவும்: மாநில அரசின் அனுமதி.

5) என்ன நோக்கத்துக்காக மணிப்பூருக்குச் செல்கிறேன்,
எத்தனை நாட்கள் அங்கிருப்பேன் என்பன போன்ற
எல்லா விவரங்களையும் தெரியப்படுத்தி, மாநில
அரசிடம் இருந்து அங்கு செல்வதற்கான அனுமதியைப்
பெற வேண்டும். இதுதான் ILP எனப்படும் இன்னர் லைன்
பெர்மிட் ஆகும். சாராம்சத்தில் இது விசாதான் என்று
உணர்க.

6) மணிப்பூருக்கு ILP வழங்கப்படும் என்று உள்துறை
அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
தொடர்ந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அதற்கான
உத்தரவை டிசம்பர் 11, 2019 அன்று பிறப்பித்தார்.

7) மணிப்பூரின் பாரம்பரியம் கலாச்சாரம் ஆகியவற்றைப்
பாதுகாக்கவும், அங்குள்ள மக்களின் வாழ்வாதாரமானது
வங்க தேசத்தில் இருந்தும் மேற்கு வங்கம் போன்ற
மாநிலங்களில் இருந்தும் வரும் வந்தேறிகளால்
அபகரிக்கப் படாமல் பாதுகாக்கவும் மணிப்பூருக்கு
இந்த இன்னர் லைன் பெர்மிட் முறை தேவைப்படுகிறது.

8) மணிப்பூர் மக்கள் தங்களின் வீரஞ்செறிந்த
போராட்டத்தாலும், உயிர்த் தியாகத்தாலும்  இந்த
உரிமையைப் பெற்றுள்ளார்கள். மணிப்பூரின்
போராட்ட வரலாறு என்ன? அதை அறிந்து கொள்ளாமல்
இந்த இன்னர் லைன் பெர்மிட்டின் தேவையைப்
புரிந்து கொள்ள இயலாது.

9) இரோம் ஷர்மிளா என்ற மணிப்பூர் பெண்ணைப் பற்றித்
தெரியுமா? 16 ஆண்டுகள் தொடர்ந்து உண்ணாவிரதம்
இருந்தவர். உலகின் மிக நீண்ட உண்ணாவிரதம் இது.

10) தற்போது 47 வயதாகும் இந்தப் பெண், அண்மையில்
திருமணம் செய்து கொண்டு இரட்டைக் குழந்தைகளைப்
பெற்றுள்ளார். ப சிதம்பரத்துக்குக் கொஞ்சமும் ஆகாதவர்
இந்தப் பெண். தற்போது தமிழ்நாட்டில் கொடைக்கானலில்
தங்கி இருக்கிறார். இவரை தமிழ்நாட்டில் இருந்து
விரட்டி அடிக்கும் நோக்கத்துடன் ப சிதம்பரம் பல்வேறு
இன்னல்களை விளைவித்தார்; பயனில்லை.

11) 2004ல் மணிப்பூர் பெண்கள் இந்திய ராணுவத்திற்கு
எதிராக நடத்திய நிர்வாணப் போராட்டம் நினைவிருக்கிறதா?
15 ஜூலை 2004ல் மணிப்பூரில் உள்ள ஒரு ராணுவ
முகாமின் வாசலில் முழு நிர்வாணமாக நின்று கொண்டு
மணிப்பூர் பெண்கள் போராட்டம் நடத்தினர். அப்போது
டாக்டர் மன்மோகன்சிங் பிரதமர். புழுவினும் இழிந்த
சிவராஜ் பட்டீல் உள்துறை அமைச்சர்.

12) தேசிய இன சுயநிர்ணய உரிமைக்காக மணிப்பூர்
மக்கள் நீண்ட காலமாகப் போராடி வருகின்றனர்.
பெருந் தியாகங்களைச் செய்துள்ளனர். இந்நிலையில்
இன்னர் லைன் பெர்மிட் என்பது  அம்மக்களுக்குக்
கிட்டியுள்ள ஒரு மிகச் சிறிய நிவாரணம்.

13) வடகிழக்கு மாநிலங்கள் சிலவற்றில் ஏற்கனவே
இன்னர் லைன் பெர்மிட் முறை இருப்பதை வாசகர்கள்
அறிந்து கொள்ள வேண்டும். இந்த முறை எப்போது
முதல் அமலுக்கு வந்தது? வாசகர்கள் இதற்கு விடை
சொல்ல வேண்டும் என்று கட்டாயப் படுத்துகிறேன்.

14) அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, மிசோரம்
ஆகிய மூன்று மாநிலங்களிலும் ஏற்கனவே இன்னர்
லைன் பெர்மிட் முறை உள்ளது. தற்போது நான்காவது
மாநிலமாக மணிப்பூர் இதை பெற்றுள்ளது.

15) வடகிழக்கு மாநிலங்கள் தனித்துவம் ஆனவை.
அங்கு குட்டி முதலாளித்துவ வர்க்கம் மிக மிகக் குறைவு.
எனவே வீரியமான போராட்டங்கள் அங்கு சர்வ
சாதாரணம்.

16) சுற்றியுள்ள வடகிழக்கு மாநிலங்களில் இன்னர் லைன்
பெர்மிட் உள்ள சூழலில், அசாமை மட்டும் வங்கதேச
வந்தேறிகளை ஏற்கத் சொல்லிக் கட்டாயப் படுத்துவதா?

17) அசாம் பற்றியோ CCA பற்றியோ கருத்துச் சொல்லும்
முன், வட  கிழக்கு மாநிலங்கள் பற்றி நன்கறிந்த
பின்னரே குட்டி முதலாளித்துவம் கருத்துக் கூற வேண்டும்.
அரங்கின்றி வட்டாடக் கூடாது.

அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்.
************************************************      
இன்னர் லைன் பெர்மிட் மணிப்பூரில்
இப்போதுதான் அமலுக்கு வருகிறது.
ஜனாதிபதி சில நாட்களுக்கு முன்புதான்
கையெழுத்திட்டார். இதுதான் உண்மை நிலை.

இதற்கு முன்பு இன்னர் லைன் பெர்மிட் முறை இல்லை.
ஆனால் மாநில அரசானது இன்னர் லைன் பெர்மிட்டுக்குரிய
கெடுபிடிகளை, இன்னர் லைன் பெர்மிட் முறை
இல்லாமலேயே   unofficialஆக நடைமுறைப் படுத்திக்
கொண்டிருந்தது. இது அதிகாரவர்க்கக் கெடுபிடி.
அவ்வளவே. இப்போதுதான் சட்ட பூர்வமாகி உள்ளது.


சரி, அவரின் வாலை நிமிர்த்தி கின்னஸ் சாதனை
புரிய வாழ்த்துகிறேன்.


  

 நிலை 

--------------------------------------------------------------------------------
திருப்பூர் குணா என்னும் சி ஐ ஏ ஏஜென்ட்
(சாராம்சத்தில் ஏகாதிபத்திய ஆதரவாளர்)
அவர்களுக்கு,
----------------------------------------------
நண்பரே, இப்படி நான் எழுதினால் அது எவ்வளவு
அபத்தமோ அது போன்ற அபத்தமே நீங்கள்
எழுதியிருக்கும் "சாராம்சத்தில் அரசு ஆதரவாளர்"
என்ற அவதூறு.

குடியுரிமைச் சட்டம் தொடர்பாக இதுவரை ஐந்தாறு
கட்டுரைகளை எழுதி உள்ளேன். தங்களை மதித்து
தங்களையும் அதில் tag செய்துள்ளேன். எனவே தாங்கள்
அவை அனைத்தையும் படித்தால் மட்டும் போதாது.
புரிந்து கொள்ளவும் வேண்டும்.

தங்களது கூற்று முற்றிலும் பிறழ் புரிதல். CAA சட்டத்தை
நான் ஆதரிப்பதாக நீங்களே கருதிக் கொண்டால்,
அதற்கு நான் பொறுப்பல்ல.

CAA சட்டம் என்பது இந்து வந்தேறிகளுக்கு சலுகை
அளிக்கக் கூடிய சட்டம். இந்து வந்தேறி, இஸ்லாமிய
வந்தேறி ஆகிய  இருதரப்பு வந்தேறிகளையும்
மொத்தமாக அசாமை விட்டு வெளியேற்ற வேண்டும்
என்று திரும்பத் திரும்ப எழுதி வருகிறேன். அசாம்
மக்களைப் பொறுத்த மட்டில், 19 லட்சம் வந்தேறிகளில்
எந்த ஒரு வந்தேறியையும் ஏற்கத் தயாராக இல்லை.
இதுவேதான் எனது நிலைபாடு.

19 லட்சம் வந்தேறிகளையும் மூன்று மாத அவகாசம்
கொடுத்து அசாமை விட்டு வெளியேற்று என்று
ஆயிரம் முறை எழுதி இருக்கிறேன். இந்த 19 லட்சம்
பேரில் இந்து முஸ்லீம் அனைவரும் அடக்கம்.

வந்தேறிகளை மோடி அரசு வெளியேற்றாவிட்டால்,
அசாம் மக்களே பெருத்த வன்முறையுடன் 
வெளியேற்றுவார்கள் என்றும் அப்படி வெளியேற்றுவதை
ஆதரிப்போம் என்றும் எழுதி இருக்கிறேன். இதை
மறுக்க இயலுமா?

அசாம் பிரச்சினையைப் பேசும்போது அதில் ஆழ்ந்த
கவனத்துடன் பேச வேண்டும். பேசுவதற்கு விஷயம்
இல்லை என்பதற்காக அணுஉலை போன்ற விஷயங்களை 
இழுத்துத் திசை திருப்பிக் கூடாது. இப்படிச் செய்வது
பேசுபொருளில் தங்களுக்கு உரிய பலவீனத்தையே
குறிக்கும்.

என்னுடைய 35 ஆண்டு காலத் தீவிரமான தொழிற்சங்க
வாழ்க்கையில் எனது தானைத் தலைவர் தோழர்
ஓ பி குப்தா அவர்கள்தான். அதே போல அரசியலில்
எனது தானைத் தலைவர் மறைந்த தோழர் அவர்கள்தான்.
இவர்கள் இருவருமே பெரும் சிந்தனையாளர்கள்.
சகல முடிவுகளையும் இவர்கள் சொந்தமாகவே
எடுத்தார்கள். இதுதான் உண்மை.

நான் தெளிவாக ஆறேழு கட்டுரைகளை மிகுந்த
கவனத்துடனும் பாடப்புத்தகத் தரத்துடனும் சரிபார்க்கப்
பட்ட தரவுகளுடனும் எழுதி வருகிறேன். ஏனோ தானோ
என்று எழுதுவதில்லை.  நான் முன்வைக்கும் கருத்துக்களில்
தங்களுக்கு மறுப்பு இருக்குமானால், அருள் கூர்ந்து
ஒரு கட்டுரை எழுதி என்னுடைய தரப்பை மறுக்கலாம்.
அதுதான் நேர்மையான நியாயமான வழி. மற்றப்படி
அவதூறு மொழிவதல்ல.

நான் முன்வைக்கும் அறிவியல் விளக்கங்கள் உப்புச்
சப்பற்றவை என்றும் உண்மையில் அறிவியலுக்கு
எதிரானவை என்றும் தாங்கள் எழுதி உள்ளது எனக்குச்
சிரிப்பை வரவழைக்கிறது. தாங்கள் சொன்னதை
தங்களால் நிரூபிக்க இயலுமா?  x plus a whole raised to n
என்றால் என்ன என்று எனக்குத் தங்களால் விளக்க
இயலுமா?

நிற்க. நிதானமாகத் தங்களின் பதிலை ஒரு
கட்டுரையாக அவதூறுகளோ வசைகளோ இல்லாமல்
எழுத முயற்சி செய்யவும். ஒரு கட்டுரைக்கு இன்னொரு
கட்டுரை மூலம் பதிலளிப்பதுதான் முறை. அதைத்தான்
மார்க்சிய இலக்கியத்தில் polemics என்று சொல்வார்கள்.

நிற்க. மதியம் 1.30 மணிக்கு மேற்கு மாம்பலத்தில்
உள்ள ஒரு பள்ளியில் சூரிய கிரகணம் குறித்த
விளக்கம் அளிக்கச் செல்கிறேன். தாங்களும்
விரும்பினால் வரலாம். வரவேண்டும் என்று
அழைக்கிறேன். சரியாக மதியம் ஒரு மணிக்கு
(1.00 PM) மாம்பலம் ரயில் நிலையத்துக்கு வரவும்.
ரயில் நிலையத்துக்கு வெளியில் மேற்கு மாம்பலம்
சைடில் நிற்கவும். தங்களை நானே அழைத்துச் செல்கிறேன்.
         




சகோதரி கோதை நாச்சியார் அவர்கள் மறைந்த
கம்யூனிஸ்ட் தலைவரும் AITUC தொழிற்சங்கத்
தலைவரும் ஆகிய கே டி கே தங்கமணி அவர்களின்
பேத்தி ஆவார். அவரின் குடும்பம் அன்று முதல்
இன்று வரை தொழிற்சங்கக் குடும்பம் ஆகும்.

அவர் பொதுவெளிக்கு வராதவர்; அரசியலுக்கு
வராதவர். இல்லத்தரசியாக இருந்து வருகிறார்.
எனவே அவரை நாய் என்று திட்டுவது ஈவ் டீசிங்
என்ற கிரிமினல் குற்றத்தில் வரும். அவரின்
குடும்பத்தில் எல்லாரும் வழக்கறிஞர்கள்.
குறைந்தது மூன்றாண்டு சிறைத்தண்டனை
பெற்றுத் தந்து விடுவார்கள்.
 

அசாம் ஒப்பந்தத்தில் இரண்டு CUTOFF DATES உள்ளன.
அதில் இல்லாத ஒரு cut off dateஐ அமித்ஷா கொண்டு
வருகிறார். இதன் விளைவாக 40 லட்சம் என்று வந்திருக்கக்
கூடிய வந்தேறிகளின் எண்னிக்கை 19 லட்சமாகக் 
குறைந்து இருக்கிறது. அசாமியர்கள் இந்த
எண்ணிக்கையை ஏற்றுக் கொண்டனர்.

எண்ணிக்கையை வெளியில் இருந்து நாம் யாரும் முடிவு
செய்ய இயலாது.அசாமியர்கள் எந்த எண்ணிக்கையை
ஏற்றுக் கொண்டார்களோ, அதே எண்ணிக்கையைத்தான்
நாமும் ஏற்றுக் கொள்ள இயலும்.

இந்த 19 லட்சம் பேரை முதலில் அசாமில் இருந்து
வெளியேற்றுங்கள். அவர்களை மேற்கு வங்க
மாநிலத்தில் தங்க வையுங்கள். இதை முதல்
கட்ட நடவடிக்கையாக மோடி அரசு செய்ய வேண்டும்.

மேற்கு வங்க மாநிலத்தில் இந்த வந்தேறிகள் தங்க
வைக்கப்பட்ட மறுநாளே அவர்களை யாரும்
நாட்டை விட்டு வெளியேற்றி விட முடியாது.
வெளியேற்றுவது என்பது ஒரு நீண்ட காலம்
பிடிக்கும் ஒரு process. குறைந்தது நாலைந்து ஆண்டுகள்
ஆகும்.

இந்த நாலைந்து ஆண்டு காலக்கட்டத்தில் அவர்களை
வெளியேற்றுவதா, அல்லது வேறெந்த மாநிலமாவது
அனுமதித்தால் அவர்களுக்குக் குடியுரிமை வழங்குவதா
என்பதையெல்லாம் சாவகாசமாக முடிவ செய்யலாம்.

வந்தேறிகள் வெளியேற்றப்பட்ட உடனேயே அசாமில்
கொந்தளிப்பு அடங்கி விடும். வந்தேறிப் பிரச்சினை
முடிந்து விடும். அவர்களுக்கு வேறு மாநிலங்களில்
(வடகிழக்கு அல்லாத) குடியுரிமை வழங்கினால்,
அதை அசாமியார்கள் ஆட்சேபிக்கப் போவதில்லை.

இப்போது போர்க்கால அடிப்படையில் அசாமில் இருந்து
வந்தேறிகளை வெளியேற்ற வேண்டும். இதுதான்
அசாமில் கோரிக்கை. இதை ஆதரிக்காத எவரும்
அசாமியர்களுக்கு எதிரானவர்களே.

பின்குறிப்பு: கேள்விகளை மொத்தமாக எழுதி விட்டால்
ஒரே தவணையில் பதில் எழுத இயலும். மிச்சக்
கேள்விகளைக் கேட்டு வையுங்கள். நாளை மாலை
பதில் அளிக்கிறேன்.
.    



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக