ஞாயிறு, 15 டிசம்பர், 2019

அருள்கூர்ந்து வார்த்தைகளை அளந்து பேசவும்.
தாறுமாறாக வார்த்தைகளைக் கொட்ட வேண்டாம்.
உங்களின் அறிவு வளர்ச்சிக்குத் தகுந்தபடிதான்
நீங்கள் பேச இயலும். இந்தப் பதிவில் சொல்கிற
மையமான விஷயத்தை உங்களால் புரிந்து
கொள்ள முடியவில்லை என்று தெரிகிறது.
அதற்காக அவதூறுகளில் இறங்க வேண்டாம்.

எந்த வங்கதேச நாய்க்கும் குடியுரிமை கொடுக்க
வேண்டாம் என்று நான் கூறுகிறேன். இது
அமித்ஷாவின் சட்டத்துக்கு எதிரானது.

நீங்கள் எல்லோருக்கும் குடியுரிமை கொடுக்க வேண்டும்
என்று அமித்ஷா சார்பாக வாதாடுகிறீர்கள். நீங்கள்தான்
பாஜகவை ஆதரிக்கிறீர்கள். இதை உணர முயற்சி செய்யுங்கள்.

இந்தக் கட்டுரை ஈழத்தமிழ் அகதிகள் குறித்துப்
பேசவில்லை. நீங்கள் அதையே இங்கு பேசிக்கொண்டு
இருக்கிறீர்கள். ஈழ அகதிகளுக்கு குடியுரிமை
வழங்குவது சிக்கலான பிரச்சினை இல்லை.
அதை சிக்கல் நிறைந்த அசாம் பிரச்சினையுடன்
முடிச்சுப் போடுவது அறிவுடைமை ஆகாது.


அசாம் ஒப்பந்தத்தை தேவையான அளவு
நீர்த்துப் போகச் செய்வதற்காக அமித்ஷாவால்
கொண்டு வரப்பட்டது.

CAB நாளையே (எதிர்காலத்தில்) ரத்து செய்யப் படலாம்.
இப்போதே அமித்ஷா பின்வாங்குகிறார்.
ஆனால் அசாம் ஒப்பந்தம் உயிருடன் இருக்கும்.
அதற்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

அசாமில் மக்கள் தொகை சுமாராக 3 கோடி.
இதில் அசாமியர்கள் வெறும் 43 சதம் மட்டுமே.
பாதிக்கும் மேல் வங்காள வந்தேறிகள்.
இதை அசாமிய மக்கள் ஒருபோதும் அனுமதிக்க
மாட்டார்கள்.


குடியுரிமைச் சட்டத்தில் தேவைப்பட்டால்
திருத்தங்கள் செய்யப்படும் என்று இன்று மாலை
அமித்ஷா சொல்லி இருக்கிறார். அசாமிய
மக்களைத் திருப்திப் படுத்தாமல் மோடி அரசோ
அல்லது அடுத்து வரும் அரசோ ஆட்சி நடத்த முடியாது.

தற்போது ஆயுதக் குழுக்களின் ஆதிக்கம் வெகுவாகக்
குறைந்திருக்கிறது. இதற்கு அசாமில் ஆடசி செய்த
காங்கிரஸ் முதல்வர் ஹித்தேஷ்வர் சைக்கியாவே
காரணம். அமித்ஷா அசாமிய மக்களை திருப்தி
செய்யத் தவறினால், மீண்டும் ஆயுதப் போராட்டம்
தலைதூக்கும் என்று மோடி அரசு அஞ்சுகிறது.

ஆக எப்படிப் பார்த்தாலும் அசாம் ஒப்பந்தமே
ஜீவாதாரமான விஷயம். அதைப்பற்றிப் பேசாமல்
மீதி எல்லா விஷயங்களையும் பேசுவது தவறு.
----------------------------------------------------------------------
அசாம் ஒப்பந்தம் (Assam accord) பற்றியே இந்தப் பதிவு
பேசவில்லை. CAB நேற்று வந்த விஷயம். ஆனால்
1985 முதல் அசாம் ஒப்பந்தம் நடைமுறையில்
இருக்கிறது. உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில்
அசாம் ஒப்பந்தம் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.
அதற்குப் பதில் சொல்லாமல் தவிர்க்க முடியாது.

அதை நீர்த்துப் போகச் செய்வதற்கே  அமித்ஷா
CABயைக் கொண்டு வந்தார். அசாம் ஒப்பந்தத்தின்
அழுத்தம் பற்றிப் பேசாமல், அதைத்தவிர வேறு
விஷயங்களைப் பேசுவது அறியாமை மட்டுமல்ல
நேர்மையற்ற செய்கையும் ஆகும்.

குடியுரிமை கொடுக்க வேண்டுமா அல்லது
அசாமை விட்டு வெளியேற்ற வேண்டுமா என்பதுதான்
கேள்வி. இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கவில்லை
குறிப்பிட்ட இந்தப்  பதிவு.

குடியுரிமையா? வெளியேற்றமா? இதற்குப் பதில்
சொல்லாமல் வெறுமனே வேறு எதையும் எழுதித்
திசை திருப்புவது மக்களுக்கு எதிரானது.
====================================

தேசிய இனப் பிரச்சினையை
மதப் பிரச்சினையாக மாற்றுவது தவறு!
--------------------------------------------------------------
1) அசாமில் உள்ள பிரச்சினை ஒரு தேசிய இனப்பிரச்சினை.
இதை தேசியஇனச் சிக்கலாக அங்கீகரிக்க மறுத்து
மதப்பிரச்சினையாக மாற்றுவதற்கு ஒட்டுப்
பொறுக்கி அரசியல் கட்சிகள் வேலை செய்கின்றன.
எப்படியாவது இதில் இந்து முஸ்லீம் மதச் சண்டையை
உண்டாக்கிக் குளிர் காய முடியுமா என்ற முயற்சிதான்
தமிழ்நாட்டில் மேலோங்கி நிற்கிறது. உங்களின்
பின்னூட்டம் அதன் வெளிப்பாடுதான்.
  
2) அசாம் மாநிலத்தில் அந்த மண்ணின் மைந்தர்கள்
மைனாரிட்டி ஆகி விட்டார்கள். மொத்த
மக்கள்தொகையில் அசாமியர்கள் 43 சதம் மட்டுமே.
மொழிவாரி மாநிலம் அமைக்கப்பட்ட பின்பு,
எந்த ஒரு தேசிய இனமும் தன் சொந்த மண்ணில்
சிறுபான்மையாகி நிற்பதை ஏற்காது.

3) மேற்சொன்ன உண்மையில் இருந்துதான் அசாமியப்
பிரச்சினையை CABயை அணுக வேண்டும்.
அப்படி அணுக மறுப்பது குட்டி முதலாளித்துவக்
கண்ணோட்டம் ஆகும். அது மார்க்சியப் பார்வை ஆகாது. 

4) அசாமிய  மக்களைப் பொறுத்தமட்டில், அவர்களுக்கு
அனைத்து வெளிநாட்டவர்களும் வந்தேறிகள்.
இந்து வந்தேறி, இஸ்லாமிய வந்தேறி என்று எந்த
வந்தேறியையும் அவர்கள் ஏற்கத் தயாராக இல்லை.

5) வந்தேறிகள் (illegal immigrants) என்று அடையாளம்
கண்ட 19 லட்சம் பேரில் இந்துக்களும் உண்டு:
முஸ்லிம்களும் உண்டு. 19 லட்சம் பேரையும்
வெளியேற்றுங்கள் என்றுதான் அசாமிய மக்கள்
கோருகிறார்கள்.

6) அசாமிய  மக்களின் சிக்கலுக்குத் தீர்வாக
1985ல் போடப்பட்ட அசாம் ஒப்பந்தம் பற்றியும்
அது விஸ்வரூபம் எடுத்து நிற்பது பற்றியும்
பேசாமல் இந்த விஷயத்தில் ஒரு சரியான
முடிவுக்கு வர இயலாது.

7) அசாம் ஒப்பந்தம் பற்றியும், அங்கு பாதுகாக்கப்பட்ட
பகுதிகள் பற்றியும், இன்னர் லைன் பெர்மிட் பற்றியும்
ஒன்றும் தெரியாத நிலையில், இந்த விஷயத்தில்
சரியான முடிவுக்கு வர இயலாது.

8) அசாமில் நடக்கும் போராட்டம் வந்தேறிகளை
வெளியேற்று என்று நடக்கிறது. மேற்கு வங்கத்தில்
நடக்கும் போராட்டம் வந்தேறிகளுக்கு குடியுரிமை
வழங்கக் கோரி நடக்கிறது. பெருத்த முரண்பாடு.
  
9) தற்போது நாளைய அறிவியல் கூட்டத்திற்காக ஒரு
power point தயாரிக்கும் வேலை உள்ளது. விரிவான
விழாக்கள் கட்டுரை நாளை மாலை வெளியாகும்.
 

    
   


  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக